ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -4-10-4–

வியோமாதீத நையாயிக வைசேஷி காதிகள்-ப்ரத்யவஸ்தித்தராய் வந்து கிட்டினவர்களாய்,
உலகம்-ச அவயத்வாதி- உறுப்புகளோடு கூடியிருக்கையால் காரிய ரூபமாய் இரா நின்றது;
ஆகையாலே, இதற்கு ஒரு கர்த்தா வேண்டும்;
இந்த உலகந்தான் விசித்திரமான அமைப்பை உடைத்தாய்-ஸந்நிவேசமாய்- இருக்கையாலே
இதற்குத் தக்க ‘உபாதாந உபகரண சம்பிரதாந பிரயோஜன அபிஜ்ஞ கர்த்தா’ – – உபாதானமும் உபகரணமும் சம்பிரதாநமும்
பிரயோஜனமும் அறிகைக்குத் தகுதியான விசித்திரமான ஞான சத்தி முதலியவைகளையுடையனாய்
இருப்பான் ஒருவன் கர்த்தாவாக வேண்டும்,’ என்கிறபடியே,
இங்ஙனே அநுமானத்தாலே ஒருவனைக் கற்பித்து, வேதத்தை ஆப்த வசனமாக்கி இதற்குத் துணை செய்வதாகக் கொண்டு,
அநுமானப் பிராதான்யத்தாலே ஈஸ்வரனைச் சாதித்து, அவனாகிறான், ‘ஈசன், ஈசானன்’ என்று இங்ஙனே
வேதத்திலே பிரசித்தமாகப் பெயர்கள் உண்டாயிரா நின்றன. இந்தப் பெயர்களாலே அவற்றால் சொல்லப்படுகிற
அவனே ஈஸ்வரன் ஆகிறான்’ என்று அநுமானத்தாலும் சமாக்யைகளாலும்
ஆகப் பகவானுக்கு வேறுபட்டவன்-வ்யதிரிக்தவன் – ஒருவனுக்கு உதகர்ஷத்தை -உயர்வினைச் சாதித்தார்கள்.
அவர்களைப் பார்த்து,
நீங்கள் சொல்லுகிற அநுமானம் சுருதியின் முன்பு நேர் நில்லாது;
இலிங்கத்தின் முன்பு சமாக்யை நேர் நில்லாது,’ என்று சுருதி இலிங்கங்களாலே அநுமானத்தையும் சமாக்யையும் தள்ளிப்
பகவானுடைய பரத்துவத்தைச் சாதிக்கிறார்.
அது செய்கிற வழிதான் என்?’ என்னில்.
யத் வேதா தவ் –வேதத்தின் முதலிலும் வேதத்தின் முடிவிலும்-வேதாந்தத்திலும் – சொல்லப்படுகிற ஸ்வரமாகிறது பிரணவம்;
உலகத்திலுள்ள வாசக ஜாதம் – எல்லாச் சொற்களும் அதிலே லயம் அடைகின்றன;
அந்தப் பிரணவம்-ஸ்வ ப்ரக்ருதி – தான் இயல்பிலே அமைந்த அகாரத்திலே லயம் அடைகின்றது;
அந்த அகாரத்துக்குப் பொருளாய் இருப்பதனாலே பரனாய் இருக்கிறான் யாவன் ஒருவன்? அவன் மஹேஸ்வரன்
என்று கூறுகின்ற சுருதியாலும்,
ஈசன், ஈசானன்’ என்கிற-சாமாக்யைகளால் – பெயர்களால் தோற்றுகிறவர்களும்
தலையறுப்புண்பாரும் தலையறுத்துப் பாவமுடையராய் நிற்பாருமாய் இராநின்றார்கள்;
இவன் அவர்களுக்குத் துக்கத்தைப் போக்குமவனாய் -நிவர்த்தகனாய் -இராநின்றான்;
ஆனால், ‘அவர்களைப் ‘பரன்’ என்னவோ, இவனைப் ‘பரன்’ என்னவோ?’ என்ற
லிங்கத்தாலுமாக அநுமானத்தையும் சமாக்யையையும் தள்ளிப் பகவானுடைய பரத்வத்தை நிலையிடுகிறார்.

ஆக, இப்படிகளாலே, ‘எல்லா உபநிஷதங்களாலும் பிரசித்தமாகச் சொல்லப்படுகின்றவனான நாராயணனே பரம்பொருள்’ என்று
நிஷ்கர்ஷித்து -அறுதியிட்டு, காலாத்யயாபதிஷ்டமாகிற தூஷணத்தாலே அவர்களை மறுக்கிறார்-

(வியோமாதீதர்’ என்பது. பாசுபத மதத்தினராய சைவர்களைச் சொல்லுகிறது. வியோம சப்த வாஸ்யனான சர்வேஸ்வரனைக் காட்டிலும்
மேம்பட்டதொரு பொருள் உண்டு என்று சொல்லுகின்றவர்கள் ஆகையாலே, இவர்களே ‘வியோமாதீதர்’ என்கிறார். வியோமம் – ஆகாசம்.)

பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகன் அவனே கபால நன் மோக்கத்துக் கண்டு கொண்மின்
தேச மா மதிள் சூழ்ந்து அழகாய திருக் குருகூர் அதனுள்
ஈசன் பால் ஓர் அவம் பறைதல் என்னாவது இலிங்கி யர்க்கே?–4-10-4-

பேச நின்ற சிவனுக்கும் –
நீர் சுருதி சொன்னீராகில் நாங்களும் ஒரு சுருதி சொல்லுகிறோம்,’ என்று
அநந்ய பரமான நாராயண அநுவாக சித்தன்’ என்று நான் சொன்னால், அதற்கு மாறாக,
புறம்பே விநியுக்தமாய் -உபயோகிக்கப்பட்டதாய், கர்ம விதி சேஷமாயிருப்பன சில -அர்த்த வாதங்களாலும் -புனைந்துரைகளாலும்
தாமச புராணங்களாலும் சொல்லலாம்படி முட்டுப் பொறுத்து நின்ற ருத்ரனுக்கும் –
அன்றிக்கே, ‘நீங்கள் ‘பரன்’ என்று பேசும்படி நின்ற சிவனுக்கும்’ என்னவுமாம்.
நின்ற-
சொற்களின் பொருட்டு முட்டுப் பொறாது; பேசுகைக்குப் பற்றுக்கோடு-ஆலம்பனம் – மாத்திரமே உள்ளது’ என்பார், ‘நின்ற’ என்கிறார்.
மற்றையோரை ‘ஈஸ்வரர்கள்’ என்னாதே இவனைச் சொல்லலாம்படி இருக்கிறது ஓர் ஏற்றம் உண்டே அன்றோ இவனுக்கு-

பிரமன் தனக்கும் –
அவனுக்கும் தமப்பனான பிரமனுக்கும்.
ப்ரஹ்மண புத்ராய ஜ்யேஷ்டாய ஸ்ரேஷ்டாய – பிரமனுக்கு ஜேஷ்டபுத்திரனாகிச் சிறப்பை அடைந்த’ என்றும்,
ப்ரஹ்மணஸ் சாபி ஸம்பூதச்சிவ- பிரமனுக்குப் புத்திரனாகச் சிவன் தோன்றினான்’ என்றும் சொல்லப்படுதல் காண்க.
மஹா தேவஸ் சர்வமேத மஹாத்மா ஹுத்வாத்மாநம் தேவ தேவோ பபூவ – மஹாத்மாவான சிவன் சர்வமேதம் என்னும் யாகத்தில்
ஆத்மாவை ஹோமம் செய்து தேவ தேவனாக ஆனார்,’ என்கிறபடியே, சிவனுடைய ஈஸ்வரத்துவம் பகவானுடைய திருவருளாலே வந்தது.

பிறர்க்கும் –
இவர்தம் திருவுள்ளத்தால் அவர்களோடு இவர்களோடு வாசி அற்று இருக்கிறபடி.
அவர்கள் தங்கள் தங்கள் நினைவாலும் அப்படியே அன்றோ?’
தவாந்தராத்மா மம ச யே சாந்யே தேஹி சம்ஜிதா– பிரமன் சிவனை நோக்கி, ‘உனக்கும் எனக்கும் அந்த விஷ்ணு
அந்தர்யாமியாய் இருக்கிறார்; மற்றும் எவர்கள் சரீரம் படைத்தவர்கள் என்று பெயர் பெற்றிருக்கிறார்களோ,
அவர்கள் எல்லாருக்கும் அந்த விஷ்ணுவானவர் சாக்ஷியாய் இருக்கிறார்,’ என்றான்.

நாயகன் அவனே –
இக்காரியத்திற்குத் தகுதியான -அனுரூபமான -காரணத்தைக் கற்பிக்கிலும் அவனையே கொள்ள வேண்டும்.
சுருதிப் பிரசித்தியை நினைத்து ‘அவனே’ என்கிறார்.
அநந்ய பரமான நாராயண அநுவாகப் பிரசித்தியையும்,
ய: பரஸ்ஸ மஹேஸ்ர:’ என்கிற அகரத்தின் பொருளாய் உள்ள பிரசித்தியையும் நினைக்கிறார்.
இவனையும் ஒக்கச் சொல்லாநிற்க ‘அவனே’ என்பான் என்?’ என்னில்,

கபால நன்மோக்கத்துக் கண்டு கொண்மின்’
என்று கையோடே காட்டிக்கொடுக்கிறார்.
நீங்கள் இப்படிச் சொன்னால் மறுமாற்றம் சொல்லுகைக்கு இது ஒன்று உண்டாகப் பெற்றோமே!’

(தத்ர நாராயண: ஸ்ரீமான் மயாபிக்ஷாம் பிரயாசித: ததஸ்தேந ஸ்வநம் பார்ஸ்வம் நகாக்ரேண விதாரிதம்]
மஹதீ ஸ்ரவதீ தாரா தஸ்ய ரக்தஸ்ய நிஸ்ஸிருதா விஷ்ணு பிரஸாதாத் ஸூஸ்ரோணி கபாலம் தத் ஸஹஸ்ரதா
ஸபுடிதம் பஹூதா யாதம் ஸ்வப்ந லப்தம் தனம்யதா’- என்பது மாத்ஸ புராணம்.)

தத்ர நாராயண: ஸ்ரீமாந் –மாயா பிஷாம் பிரயாசித ‘தாம் தாம் செய்த கர்மத்தின் பலத்தைத் தாம் தாம் அனுபவிக்கிறார்களாகில்,
நாம் என்?’ என்றிருக்கும் ஈஸ்வர ஸ்வாதந்தரியம் -ஜீவியாதபடி -தலை தூக்காதபடி
ந கச்சின் ந அபராத்யதி -குற்றம் செய்யாதார் ஒருவரும் இலர்,’ என்பாரும் அருகே உண்டு என்கிறான்.
விஷ்ணு ப்ரஸாஸாத் ஸூஸ்ரோணி கபாலம் தத் சஹஸ்ரதா –ஸ்புடிதம் பஹு தாயா தம் ஸ்வப்ன லப்தம் தநம் யதா –
ஸூஸ்ரோணி – உன் வடிவழகாலே வந்த சௌபாக்கியம், நான் சர்வஸ்சுவரன் பக்கலிலே சென்ற அளவிலே உதவிற்றுக் காண்.
ஸ்வப்ந லப்தம் – அனுபவம் செல்லா நிற்கச் செய்தே விழித்துப் பார்க்குங்காட்டில் இல்லையாய் இருந்தது;
ஆகையாலே, ‘நன்மோக்கம்’ என்கிறது.
உங்களுக்கு இப்போது மறுமாற்றம் சொல்லலாம்படியாக இது ஒன்று உண்டாயிற்று’ என்கிறாராதல்;
ஸ்வப்நலப்த தநம் யதா – ‘கனவில் கிடைத்த தனம் போலே போன வழி தெரியாமலே போயிற்று,’ என்கிறாராதல்.
நீங்கள் ஈஸ்வரர்களாகச் சந்தேகப்படுவதற்குரியவர்கள் இருவரும் நின்ற நிலை கண்டீர்களே!
ஒருவன் தலை கெட்டு நின்றான்;
ஒருவன் ஓடு கொண்டு பிராயஸ்சித்தம் செய்ய வேண்டியவனாய் நின்றான்.
ஓட்டை ஓடத்தோடு ஒழுகல் ஓடமாய் உங்கள் குறை தீரப் பற்றுகிற நீங்கள் உங்களிலும் பெரும் குறைவாளரையோ பற்றுவது!
பாதகியாய் -பாவமுடையவனாய்ப் பிச்சை புக்குத் திரிந்தான்,’ என்று நீங்களே சொல்லி வைத்து, அவனுக்கே பரத்வத்தைச் சொல்லவோ?’
ஒருவனுடைய ஈஸ்வரத்துவம் அவன் தலையோடே போயிற்று.
மற்றவனுடைய ஈஸ்வரத்துவம் அவன் கையோடே காட்டிக் கொடுக்கிறார்;

கண்டு கொண்மின் –
முன்னே நின்று பிதற்றாமல், உந்தம் ஆகமங்களிலே நீங்கள் எழுதியிட்டு வைத்த
கிரந்தங்களைப் பார்த்துக் கொள்ள மாட்டீர்களோ?’ என்கிறார்.

தேச மா மதிள் சூழ்ந்து அழகாய –
பகைவர்களுக்குக் கிட்டுதற்கும் முடியாத -அநபபி நீயமான தேஜஸ் –ஒளியையுடைத்தாய்,
அரணாகப் போரும்படியான மதிளையுடைத்தாய், தர்ச நீயமான -காட்சிக்கு இனியதாய் இருக்கிற.

திருக் குருகூரதனுள் ஈசன் பால் –
அஜஹத் ஸ்வபாவன் -விட்டுப் பிரியாத தன்மையை உடையவனாகையாலே, சௌலப்யத்திலே அந்த மேன்மை குலையாதிருக்கிற
ஈசன் பால்
‘யத்வேதாதௌ ஸ்வர: ப்ரோக்தோ வேதாந்தேச பிரதிஷ்டித:
தஸ்ய ப்ரக்ருதி லீநஸ்ய ய: பரஸ்ஸ மஹேஸ்வர:’ என்பது, தைத்திரீய நாராயண உப. 6 : 10.
‘ய : பரஸ்ஸமஹேஸ்வர:’ என்கிற சர்வேஸ்வரன் பக்கலிலே.
கீழே நாராயண சப்தார்த்தத்தைச் சொல்லி-பிரஸ்தாவித்து – வைத்து, அகாரத்தின் பொருளாய்ப் பரனானவனையே
மஹேஸ்வரன் என்கையாலே, மஹேஸ்வரன் என்ற சொல்லால் சொல்லப்படுகின்ற பொருளானவன் நாராயணனே என்பது
சுருதியாலே அறுதியிடப்பட்டிருக்கையாலே இந்தச் சுருதியாலே உன்னுடைய அநுமானம் தள்ளப்பட்ட விஷயமாகும்.
கண்டுகொண்மின்’ என்கிற சொற்பொருள்களின் ஆற்றலோடு (லிங்கம்) முரண்பட்ட சமாக்யை நேர் நில்லாது;
ஆகையாலே ‘இவனே பரன்,’ என்கிறார்.
(அக்ஷராணாம் அகாரோஸ்மி’ என்றும், ‘அகாரோ விஷ்ணு வாசக:’ என்றும், ‘அ இதி பிரஹ்ம’ என்றும், அகார வாஸ்யன்
விஷ்ணுவாகச் சொல்லப்படுகையாலே, இங்கு அகார வாஸ்யனான மஹேஸ்வரன் சர்வேஸ்வரனே யாவன் என்பது சித்தம்.
நாராயண உபநிடதத்தில் ‘யத்வேதாதௌ’ என்று தொடங்கும் வாக்கியத்திற்கு மேலே, ‘யத: பிரஸூதா ஜகத: பிரஸூதீ’ என்றும்,
சர்வேநிமேஷா ஜஜ்ஞிரே வித்யுத: புருஷாததி’ என்றும், ‘யமந்தஸ் ஸமுத்ரே கவயோவயந்தி’ என்றும்,
‘நதஸ்ய ஈஸேகச்சந’ என்றும் வருகின்ற வாக்கியங்களாலே ‘காரணனாயிருத்தல், கடலில் சயனித்திருத்தல்,
நியமிக்கின்றவனாயிருத்தல் ஆகிற நாராயண சப்தார்த்தத்தைச் சொல்லி வைத்து)

ஓர் அவம் பறைதல் –
மற்றுள்ள க்ஷேத்ரஜ்ஞரோடு ஒக்க ஸ்ரீமந் நாராயணனுக்கு ஈஸ்வரத் தன்மை இல்லை என்பதற்குச் சாதகமாக ஏதேனும் –
ஆபாச யுக்திகளை -போலி வார்த்தைகளைச் சொல்லுமது. அவற்றைத் தம் வாயால் சொல்ல மாட்டாமையாலே, ‘அவம்’ என்கிறார்.
தங்கள் கூட்டத்தில் மறைவாகச் சொல்லுமது ஒழிய எல்லாரும் அறியச் சொல்லுதல் இல்லையாதலின், ‘பறைதல்’ என்கிறார்.
மஹாபலி, ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான் பக்கலிலே வந்து,
யதா மே சிரசஸ் சேதாதிதம் குரு தரம் வச – ராஜ்யமடைய ஒளி மழுங்கி வாராநின்றது;
என் பலமும் குறைந்து வாராநின்றது; இதற்கு அடி என்?’ என்ன,
நீ சர்வேஸ்வரன் பக்கல் பண்ணின அபராதத்தாலே காண்,’ என்ன,
கோயம் விஷ்ணு -‘இந்த விஷ்ணு எவன்?’ என்பது போன்று-அநாதர யுக்திகள் – விருப்பு இல்லாத வார்த்தைகள்
சிலவற்றை அவன் பேச,
எனது தலையை அறுப்பதைக்காட்டிலும் பெரிது இந்த வார்த்தை’ என்கிறபடியே,
என் முன்பே பகவானை நிந்தை செய்தாய், நீ ராஜ்யப் பிரஷ்டன் ஆவாய்’ என்று சபித்து விட்டான்;
இதனை இப்படியே பட்டர் அருளிச் செய்தவாறே, ‘பிரகிருதி புருஷ விவேகம் பண்ணியிருக்கிற இவன் ஆத்மாவுக்கு
நாயைத் தண்டிக்கையாவது, அமேத்யத்தை -மலத்தை விலக்குகையே அன்றோ?
சாந்தை விலக்குகை அதற்கு விருப்பம் இல்லாதது அன்றே?
ஆகையால், இவனுக்கு அநிஷ்டம் செய்கையாவது இதுவே அன்றோ?’ என்று அருளிச்செய்தார்.

இலிங்கியர்க்கு என் ஆவது –
அநுமானத்தைப் பிரமாணமாகக் கொண்டவர்க்கு என்ன பிரயோஜனம் உண்டு? என்றது,
அந்தத் தேவிற்கு ஓர் உத்கர்ஷம் -உயர்வு பெற்றிகோள் அன்று;
அத் தேவினைப் பற்றியதற்கு ஒரு பலம் பெற்றிகோள் அன்று;
இதனால், உங்களுக்கு ஓர் உயர்வு பெற்றிகோள் அன்று;
என்றியப் பட்டிகோள்’ என்கிறார்

(இலிங்கியரை ஆநுமாநிகர் என்றும், சமாக்யைப் பிரதாநர் என்றும் இரண்டு வகையாகப் பிரித்து, இவர்களில் சமாக்யைப் பிரதாநராகிறார்,
ஆகாச சப்த வாச்சியனான விஷ்ணுவுக்குப் புறம்பே உருத்திர தத்துவம் உண்டு’ என்று சொல்லுகிற பாசுபதர் என்றும்,
அநுமானப் பிரதாநராகிறார், நையாயிக வைசேடிகர்கள்’ என்றும் பிரதிஜ்ஞை செய்து, இவர்கள் இருவரும் அநுமான
சமாக்யையாலே உருத்திர காரணத்துவத்தைச் சாதிக்கும் பிரகாரத்தைக் காட்டுகிறார்,
ஆதி யந்தம் அரியென யாவையும்
ஓதி னாரல கில்லன உள்ளன
வேத மென்பன மெய்ந்நெறி நன்மையன்
பாத மல்லது பற்றிலர் பற்றிலார்.’

ஓமெனும் ஓரெழுத் ததனி னுள்ளுயிர்
ஆமவன் அறிவினுக் கறிவு மாயினான்;
தாமமூ வுலகமும் தழுவிச் சார்தலால்
தூமமுங் கனலும் போல் தொடர்ந்த தோற்றத்தான்.– என்றார் கம்பநாட்டாழ்வார்.

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: