ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -4-10-3–

ஜெகன் நிகரணாதி- உலகத்தை விழுங்குதல் முதலிய-திவ்ய சேஷ்டிதங்களாலும் –
தெய்வத்தன்மை வாய்ந்த செயல்களாலும் இவனே பரன்; இதனை இசையாதார் –
உடன்படாதார் என்னோடு வந்து கலந்து பேசிக் காணுங்கோள்,’ என்கிறார்.

பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கிக்
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளிய கில்லீர்
சிரங்களால் அமரர் வணங்கும் திருக் குருகூர் அதனுள்
பரன் திறமன்றிப் பல்லுலகீர்! தெய்வம் மற்றில்லை பேசுமினே–4-10-3-

பரந்த தெய்வமும் –
கொள் கொம்பு மூடப் படர்ந்து -நியாமகரோடு – ஒக்க எடுத்துக் கழிக்க வேண்டும்படி கை விஞ்சின தேவஜாதியும்.

பல் உலகும் –
அவர்கள் பரப்புக்கெல்லாம் போரும்படியான உலகங்களும்.
அன்றிக்கே, ‘அவர்கள் நியமிக்கின்றவர்கள் ஆகைக்குக் காரணமாக நியமிக்கப்படுகின்றவர்களான
மற்றைய ஆத்மாக்களையும்’ என்னலுமாம்.

படைத்து –
ஸ்ருஷ்டித்து -உண்டாக்கி. இவர் தமக்கு அந்தத் தேவர்களோடு அல்லாதாரோடு வாசி அற்று இருக்கிறபடி.

அன்று உடனே விழுங்கி –
யோ ப்ராஹ்மணம் விததாதி பூர்வம் -அந்தப் பரமாத்துமா முன்னே பிரமனைப் படைத்தார்,’ என்கிறபடியே,
படைக்கிறபோது முறையாகப் படைத்தான்;
ஆபத்து வந்தால், அங்ஙனம் முறை பார்க்க ஒண்ணாதே, பிரளயாபத்திலே ஒருகாலே வயிற்றில் வைத்து.
கரந்து –
பிரளயம் வந்தாலும் இங்கு உண்டோ?’ என்று இளைத்துக் காட்டலாம்படி மறைத்து.
உமிழ்ந்து –
உள்ளே இருந்து நோவு படுகின்றனவோ?’ என்று வெளி நாடு காண உமிழ்ந்து.
கடந்து –
நடுவே மஹாபலி போல்வார் பருந்து இறாஞ்சினாற்போலே பறித்துக்கொள்ள, எல்லை நடந்து மீட்டுக்கொண்டு.
இடந்தது –
பிரளயத்திலே அழுந்தி அண்ட பித்தியிலே சேர்ந்த இந்த உலகத்தை மஹா வராஹமாய்ப் புக்கு
ஒட்டு விடுவித்து எடுத்து. இப்படிச் செய்த இவற்றை,
கண்டும் –
இவர்க்குப் பிரத்யக்ஷத்திலும் சாஸ்திரம் விளக்கமாகக் காணப்படுகிறது காணும்.
தெளியகில்லீர் –
அதி மானுஷ சேஷ்டிதங்களை -மக்கள் செயலுக்கு அப்பாற்பட்ட இத்தகைய செயல்களைக் கொண்டே
அவனே ஆஸ்ரயணீயன் -அடையத்தக்கவன்’ என்று அறியலாய் இருக்க, அறிய மாட்டுகின்றிலீர்கோள்.
இவர்கள் தெளிவும் தெளியாமையும் ஒழிய, உண்மை நிலையில் மாறாட்டம் அற்று இருக்கிறது ஆதலின்,
கண்டும் தெளியகில்லீர்’ என்கிறார். ‘உங்கள் கலக்கமும் தெளிவும் ஒழிய,
அவனை ஈஸ்வரன் அல்லனாகச் செய்தல், இவர்களை ஈஸ்வரர்கள் ஆக்குதல் செய்ய ஒண்ணாதே அன்றோ?’ என்றபடி.

அமரர் சிரங்களால் வணங்கும் –
எல்லாப் பொருள்களையும் படைத்தவனும் அல்லன்; ஆபத்திற்குத் துணைவனும் அல்லன்’ என்று இருந்தீர்கோளேயாகிலும்,
நீங்கள் அடைகிற தேவர்கள் செய்கிறது முன்னம் நீங்கள் கண்டால் தெளியலாமே!
அவர்கள், ‘தலை படைத்த பிரயோஜனம் பெற்றோம்’ என்று வணங்குகிறபடியைக் கண்டாகிலும்
நீங்கள் அவனைப் பற்றப் பாருங்கோள்.
பாதேந கமலா பேந ப்ரஹ்ம ருத்ர அர்ச்சிதே நச — தாமரை போன்று ஒளியுள்ளதும், பிரமன் சிவன் இவர்களால்
அருச்சிக்கப்பட்டதுமான திருவடிகளால் தடவினார்,’ என்றும்,
பின்னிட்ட சடையானும் பிரமனும் இந்திரனும், துன்னிட்டுப் புகலரிய’ என்றும்,
நாத்தழும்ப நான்முகனும் ஈசனுமாய முறையால் ஏத்த’ என்றும் உள்ள பிரமாணங்களை கண்டும் –

திருக்குருகூர் அதனுள் பரன் –
மனுஷ் யத்வே பரத்வம் -மனித வடிவத்தில் பரத்வத்துக்கும் அவ்வருகே ஒரு பரத்துவமே அன்றோ இது?
இவ்வருகே போரப் போர உயர்வு மிகுமத்தனை. குணத்தாலே அன்றோ பொருளுக்கு உயர்வு?
குணங்களுக்குப் பெருமை உள்ளது இங்கேயே யன்றோ?
அநஸ்நந் நந்யே –அவர்கள் இருவரில் சேதனன் கருமபலத்தை இனிமையாக அனுபவிக்கிறான்;
மற்றவனான ஈஸ்வரன் கர்மபலத்தை அனுபவியாமல் மிகவும் பிரகாசிக்கிறான்!’ என்கிறபடியே,
இவ்வுயிர்கள் சரீரத்தோடே கலசக் கலச ஒளி மழுங்கி வாரா நிற்கச் செய்தே,
அவனுக்கு நியமிக்கும் தன்மையால் வந்த புகர் அற விஞ்சி வருமாறு போன்று,
இம்மக்கள் நடுவே போரப்போர ஆயிற்று, முதன்மை – மேன்மை பிரகாசிப்பது.

திறம் அன்றி –
அவனுக்குச் சரீரமாய் -பிரகாரம் -அல்லாது. திறம் –பிரகாரம் – சரீரம்.

தெய்வம் மற்று இல்லை –
ஸூ வதந்தரமாய்த் தனக்கு உரித்தாய் இருப்பது ஒரு தெய்வம் இல்லை.
தேவர்களுடைய சொரூபத்தை விலக்குகிறார் அன்று-
அவனுக்கு விபூதி வேண்டும்’ என்று இருக்கிறவர் ஆகையாலே; அவர்களுடைய ஸ்வாதந்தரியத்தை விலக்குகிறார்.
மற்றைத் தேவர்களை அவனுக்குச் சரீரமாகப் புத்தி பண்ணி அடைந்தீர்கோளாகில்,
அவனுடைய ஆஸ்ரயணத்திலே புகும்;
அவர்கள் ஸ்வதந்தரர்கள் என்று புத்தி பண்ணிப் பற்றினீர் கோளாகில்,
ஸ்வதந்தரமாய் இருப்பதொரு வேறு தெய்வம் இல்லை;
நே ஹா நா நா அஸ்தி -‘ஸ்வதந்தரப் பொருள் இங்குப் பல இல்லை’ என்றும்,
யே யஜந்தி -எவர்கள் பித்ருக்களையும் தேவர்களையும் அக்னியோடு கூடிய பிராமணர்களையும் பூஜிக்கிறார்களோ,
அவர்கள் எல்லா ஆத்மாக்களுக்கும் அந்தரியாமியாயிருக்கிற விஷ்ணுவையே பூஜிக்கிறார்கள்,’ என்றும் வருவன காண்க.

பேசுமின் –
நான் ‘அவனுக்குச் சரீரமாய் அல்லது ஸ்வதந்தரமாயிருப்பது ஒரு தேவதை இல்லை,’ என்றேன்;
இப்படி அநந்யதீனமாய் – வேறு ஒருவருக்கும் வசப்பட்டிராத நியமிக்குந் தன்மையையுடைய இவனைத்
தனக்குச் சரீரமாகவுடையது ஒரு தெய்வம் உண்டு,’ என்று சொல்ல வல்லார் உண்டாகில்,
வாய் படைத்தார் என் முன்னே நின்று சொல்லிக் காணுங்கோள்,’ என்கிறார்.

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: