ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -4-9-9–

இவருடைய சம்சார அனுசந்தானத்தாலே – வந்த வ்யஸனம் எல்லாம் தீரும்படி,
திருநாட்டில் இருந்த இருப்பைக்காட்டியருள, ‘கண்டு அனுபவிக்கப்பெற்றேன்,’ என்று திருப்தராகிறார்

கூட்டுதி நின் குரை கழல்கள்; இமையோரும் தொழா வகை செய்து,
ஆட்டுதிநீ; அரவணையாய்! அடியேனும் அஃது அறிவன்;
வேட்கை எலாம் விடுத்து எனை உன் திருவடியே சுமந்து உழலக்
கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே–4-9-9-

நின் குரை கழல்கள் கூட்டுதி –
அளவிலிகளாகவும் -அறிவில்லாதவர்களாகவுமாம். நீ உகந்தாரை உன் திருவடிகளிலே சேர்த்துக் கொள்ளுதி.
குரை – பெருமை; அன்றிக்கே, ‘ஆபரணங்களின் ஒலி’ என்னுதல்.

இமையோரும் தொழாவகை செய்து ஆட்டுதி நீ –
பிரமன் முதலான தேவர்களேயாகிலும், நீ நினையாதாரை வந்து கிட்டாதபடி செய்து அலையச்செய்வை.

அரவணையாய்!
என்ற இவ்விளி, கூட்டுதி’ என்றதற்கு உதாஹரணம்.

அடியேனும் அஃது அறிவன் –
உலக வேதங்களிலே பிரசித்தமான உன் படியை நானும் அறிவேன். அறிந்தபடிதான் என்?’ என்னில்,

வேட்கை எல்லாம் விடுத்து –
எனக்கு உன்னை ஒழிந்தவை ஆமத்தனை அன்றோ ஆசைப்படுகைக்கு?
உன் உலகத்தில் நான் ‘எனக்கு, எனக்கு’ என்னாதது உண்டோ?
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல்வீடு செய்திலையோ?

உன் திருவடியே சுமந்து உழல –
புறம்பான விஷயங்களிலே உண்டான ஆசை எல்லாம் உன் பக்கலிலேயாய்,
உன் திருவடிகளையே நான் ஆதரித்து, அதுவே வாழ்க்கையாய்ச் செல்லும் படிக்காக.

கூட்டரிய திருவடிக்கள் எனைக் கூட்டினை –
யாவர் சிலர்க்கும் தந்தாமால் சேர்த்துக் கொள்ள அரிய திருவடிகளை நான் சேரும்படி என்னைச் சேர்த்துக் கொண்டாய்.

நான் கண்டேனே –
இது கேட்டார் வாய்க் கேட்டு நான் சொல்லுகிறேன் அல்லேன்: அனுபவத்தாலே சொல்லுகிறேன்.

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: