ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -3-4-8-

ஜகத்தில் பிரதானரான பிரம்மா ருத்ராதிகளை விபூதியாக வுடையனான படியைப் பேசுகிறார்.

ஒளி மணி வண்ணன் என்கோ! ஒருவன் என்று ஏத்த நின்ற
நளிர் மதிச் சடையன் என்கோ! நான்முகக் கடவுள் என்கோ!
அளி மகிழ்ந்து உலகம் எல்லாம் படைத்து அவை ஏத்த நின்ற
களி மலர்த் துளவன் எம்மான் கண்ணனை மாயனையே–3-4-8-

ஒளி மணி வண்ணன் என்கோ –
கீழே சொன்ன வடிவழகு பின்னாட்டின படி .

ஒருவன் என்று ஏத்த நின்ற நளிர் மதிச்சடையன் என்கோ –
‘இவன் உலகத்துக்குப் பிரதாநன்’ என்று அறிவிலிகள் ஏத்தும்படியாய்,
குளிர்ந்த மதியையும் சடையுமுடைய சிவன் என்பேனோ!
மதிச்சடையன் –
தலையான மதியையுடையவன்.
‘ஏத்துகின்றவர்களுடைய-பிரமம் – மயக்கமே யன்றி, அவன் பக்கல் ஒன்றுமில்லை,’ என்பார், ‘சடையன்’ என்கிறார்.

நான்முகக் கடவுள் என்கோ –
அவனுக்கும் கூட-ஜனகனான – தந்தையான சதுர் முகனான தெய்வம் என்பேனோ!

அளி மகிழ்ந்து உலகமெல்லாம் படைத்து அவை ஏத்த நின்ற –
‘ரக்ஷணத்தையே ஆதரித்து-லோகங்கள் அடைய ஸ்ருஷ்டித்து – உலகங்கள் முழுதையும் உண்டாக்கி -அவை ஏத்த நின்ற.
‘யாதொரு பிரயோஜனத்தை நினைத்துந் ஸ்ருஷ்ட்டித்தான் – படைத்தான்?
அந்தப் பிரயோஜனத்தைப் பெற்று நின்றான்’ என்பார், ‘படைத்து அவை ஏத்த நின்ற’ என்கிறார்.

களி மலர்த் துளவன் எம்மான் கண்ணனை மாயனை –
களி-என்று தேன் /மலர் என்று பூ /
மதுவையும் பூவையுமுடைத்தான திருத்துழாய் மாலையை யுடையனாய், அம்மாலையாலே
என்னை அநந்யார்ஹமாக – தனக்கே உரியவனாம்படி -எழுதிக் கொண்டவனுமாய்,
எனக்குச் ஸூலபனுமாய், ஆச்சரியமான குணங்களையும் -சேஷ்டிதங்களையும் -செயல்களையும் உடையவனுமானவனை.

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: