ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -3-4-6-

வேதம் தொடக்கமான இயலும் இசையுமான ஒலியான சப்த ராசியை விபூதியாக உடையனாயிருக்கிறபடியைப் பேசுகிறார்.

பால் என்கோ! நான்கு வேதப் பயன் என்கோ! சமய நீதி
நூல் என்கோ! நுடங்கு கேள்வி இசை என்கோ! இவற்றுள் நல்ல
மேல் என்கோ! வினையின் மிக்க பயன் என்கோ! கண்ணன் என்கோ!
மால் என்கோ! மாயன் என்கோ வானவர் ஆதியையே–3-4-6-

பால் என்கோ –
கீழ் பாசுரத்தில் ரஸ்யதை பின்னாட்டின படி.

நான்கு வேதப் பயன் என்கோ –
நாலு வகைப்பட்ட பிரமாண ஜாதத்திலே சார பூதமாகிற வேதமாகிற பிரயோஜனம் என்பேனோ!
வேதங்களில் வேறேயும் ஒரு அம்சம் வேறு ஒருவனை ஸ்துதித்தாலே யன்றோ ‘நான்கு வேதங்களில் பயன்’ என்ன வேண்டுவது?
அது இல்லையாதலின் ‘நான்கு வேதப் பயன்’ என்கிறார்.
இனி, வேதமானது ஆராதன சொரூபம் சொல்லுமிடமும், ஆராத்ய- ஆராதிக்கப்படும் இவன் சொரூபம் சொல்லுமிடமுமாய்க்
கட்டடங்க இவனையே சொல்லுகையாலே, வேதத்தில் நாலு மூலைக்கும் உள்ள பயன் இல்லாத இடம் இல்லையாதலின்,
‘நாலு வேதப் பயன்’ என்கிறார் என்னுதல்:
வேதைச் ச சர்வைர் அஹமேவ வேத்ய- ‘பூர்வபாகம் உத்தரபாகம் என்று பிரிவுபட்டுள்ள எல்லா
வேதங்களாலும் நான் அறியப்படுமவன்’ என்பது ஸ்ரீ கீதை.

சமய நீதி நூல் என்கோ –
வைதிக சமயத்துக்கு நிர்வாஹகமான இதிகாச புராணங்கள் என்பேனோ!
இவை வேதார்த்தத்தை – வேதங்களின் பொருள்களை-விசதீ கரிப்பதால் -விரித்துக் கூறுவனவாதலின்,
‘நீதி நூல்’ என்கிறார். நீதி – நிர்வாஹகம்.
இதிஹாச புராணாப்யாம் வாதம் சமுபப்ப்ரும்ஹயேத் – ‘வேதமானது இதிகாசங்களாலும் புராணங்களாலும்
விவரிக்கப்பட வேண்டியது’ என்பது ஸ்மிருதி –

நுடங்கு கேள்வி இசை என்கோ –
கேட்டாரை நஞ்சுண்டாற் போன்று -நுடங்க -மயங்கச் செய்கிற -ஸ்ரவணத்தை- கேள்வியை-யுடைத்தான இசை என்பேனோ!

இவற்றுள் நல்ல மேல் என்கோ –
மேலே கூறியவற்றுளெல்லாம் -விலக்ஷணமாய் -வேறுபட்டதாய் -அவ்வருகாய் இருப்பது ஒன்று என்பேனோ!
’எல்லாம் சொல்ல வேண்டும், எல்லாம் சொல்லமாட்டார்’ ஆதலின், ‘இவற்றுள் நல்ல மேல் என்கோ’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.

வினையில் மிக்க பயன் என்கோ –
அல்ப யத்னத்தாலே -சிறிய முயற்சியால் -அநேக -பல விதமான பலத்தைப் பலிப்பது ஒன்று என்பேனோ! ‘என்றது,
என் சொல்லியவாறோ?’ எனின்,
கல நெல்லை வித்தி நூறாயிரக் கலமாக விளைத்துக் கொள்வாரைப் போன்று,
இத் தலையிலுள்ளது-மித்ர பாவமாய் – நட்புத்தன்மையேயாய்-அதற்கு ’நத்யஜேயம்-நான் விடமாட்டேன்’ என்னும்படி இருக்கையைக் கூறியபடி.

கண்ணன் என்கோ –
’உனக்கு நான் இருந்தேனே’ என்று ‘மாஸூச:- நீ துக்கப்படவேண்டா’ என்னும் கிருஷ்ணன் என்பேனோ!
‘‘நான் தரும் அதனை நீ விலக்காமல் -ஸ்வீகரிக்கும் ஏற்றுக்கொள்ளும் இத்தனையே வேண்டுவது;
உனக்கு நான் இருந்தேன்,’ என்றவனன்றோ?’ என்றபடி.

மால் என்கோ –
ஆஸ்ரித- அடியார்களிடத்தில் -வியாமுக்தன் -வியாமோகத்தையுடையவன் என்பேனோ!
‘நான் இருக்கிறேன் நீ துக்கப்படாதே’ என்று அருச்சுனனை நோக்கிக் கூறியவன்,
உடனே இதம் தே நாத பஸ்காய–இதம் தே குஹ்ய தமம் ப்ரவஷ்யாமி –
‘உனக்கு ஞானமுண்டாகும் நிமித்தமாகச் சொன்ன இந்தக் கீதை, தவம் செய்யாதவனுக்கும் பத்தி இல்லாதவனுக்கும்
ஸ்ரத்தை இல்லாதவனுக்கும் என்னிடத்தில் அசூயையுடையவனுக்கும் உபதேசிக்கத் தக்கதன்று,’ என்று கூறினானாதலின்,
‘அடியார்களிடத்தில் வியாமோகத்தையுடையவன் என்பேனோ!’ என்கிறார்.
‘‘இதம் து தே குஹ்ய தமம் ப்ரவக்ஷ்யாமி’ என்றது போன்று ‘இதம் தே நாத பஸ்காய’ என்ற ஸ்லோகத்தையும்
முன்னரன்றோ சொல்லல் வேண்டும்?
அங்ஙனஞ்செய்யாது, ‘சர்வ தர்மாந்’ என்ற ஸ்லோகத்தை முந்துறச் சொல்லிப் பின்னர்,
‘இதந் தே நாத பஸ்காய’ என்றான்; இதற்கு அடி என்?’ என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க,
‘திரௌபதி குழலை விரித்துக் கிடக்கையாலே அது முடிக்கைக்காக, செய்வது அறியாமையாலே
மூலையில் கிடந்தாரை முற்றத்தே இட்டான்; பின்னை அர்த்தத்தின் சீர்மையை அநுசந்தித்து,
‘ஆர் அதிகாரிகளாகச் சொன்னோம்? கைப்பட்ட மாணிக்கத்தைக் கடலிலே போகட்டும்,’ என்று
பதண் பதண் என்றான் காணும்,’ என்று அருளிச்செய்தார்.

மாயன் என்கோ –
ஆஸ்ரிதற்கு -அடியார்கட்கு-தூத்ய – தூது போதல் -சாரத்யாதிகள்-சாரதியாதல் முதலியவற்றைச் செய்யும் ஆச்சர்ய பூதன் –
ஆச்சரியத்தையுடையவன் என்பேனோ!
க்ருதார்த்தா பு ஜ்ஞதே தூதா ‘தூதர்கள் தாம் வந்த காரியம் முடிந்த பின்னர்த் தூது வந்த வீட்டில் உண்பர்கள்;
ஆதலால், யானும் வந்த காரியம் முடிந்த பின் உன் வீட்டில் உண்கிறேன்,’ என்று கூறியதனால் தூது சென்றமை உணரலாகும்.

வானவர் ஆதியை –
பிரமன் முதலானோர்களுடைய சத்து முதலியவைகள்-தன் அதீனமாம் படி – தனக்கு உரிமையாம்படி இருக்கிறவன்,
என் அதீனமான சத்து முதலியவைகளையுடையவனாயிருக்கிற இருப்பை
நான் எத்தை என்று சொல்வது – எத்துணை என்று அளவிட்டுக் கூறுவது?

‘என்னினின்னி லொரு பேத மில்லை யிது என்னினின் னிலது என்னினும்
மின்னின் முன்னிலகு விறல் நெடும் படை விதூரன் வந்தெதிர் விளம்பினான்;
உன்னி வின்ன முள தொன்று: பஞ்சவருரைக்க வந்த வொரு தூதன் யான்;
நின்னி லின்னடிசிலுண்டு நின்னுடன் வெறுக்க எண்ணுவது நீதியோ?’–வில்லி பாரதச் செய்யுள்-பாரதம், உத்தியோகபர்வம்-

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: