ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -3-4-5-

ரஸவத் பதார்த்தங்களை- சுவையுடைய பொருள்களை விபூதியாக உடையனாயிருக்கிறபடியை அருளிச்செய்கிறார்-

அச்சுதன் அமலன் என்கோ! அடியவர் வினை கெடுக்கும்
நச்சு மா மருந்தம் என்கோ! நலம் கடல் அமுதம் என்கோ!
அச் சுவைக் கட்டி என்கோ! அறு சுவை அடிசில் என்கோ!
நெய்ச் சுவைத் தேறல் என்கோ! கனி என்கோ! பால் என்கேனோ!–3-4-5-

அச்சுதன் அமலன் என்கோ –
நித்ய விபூதியோடே கூடியிருக்கும் இருப்புக்கு ஒருநாளும் அழிவில்லாதபடி யிருப்பவனாய்,
ஹேய ப்ரத்ய நீகனாய் குற்றம் ஒன்றும் தீண்டப்படாதவனாய், –
உபலக்ஷணத்தால்-
கல்யாணை கதானனாய்- நற்குணங்கட்கெல்லாம் தானே இருப்பிடமானவனாய் உள்ளவன் என்பேனோ!
(கீழே‘ஆதியஞ்சோதி’ என்பதனைக் கடாக்ஷித்து, ‘நித்யவிபூதியோடே கூடியிருக்கும் இருப்புக்கு’ என்று அருளிச்செய்கிறார்)

அடியவர் வினை கெடுக்கும் –
தன் பக்கல் நியஸ்த பரரானவருடைய சகல துரிதங்களையும் போக்கி ரக்ஷிக்குமவன் ;
இதனால், இப்படி தூரஸ்த்தன் என்று ஆஸ்ரிதற்கு இடர்ப்பட வேண்டாதபடி,
யானை இடர்ப்பட்ட மடுவின் கரையிலே விழும் ஸ்வபாவன் என்பதனைத் தெரிவித்தபடி.

நச்சு மா மருந்தம் –
இடர்ப்பட்ட போதாகப் போய் மலை புக வேண்டாமல், ‘அவன் தூரஸ்த்தனானானே யாகிலும் நாம்
ஆபன்னரான- ஆபத்துக்குள்ளான சமயத்திலே வந்து ரக்ஷிக்கும் ’ என்று விஸ்வசிக்கலாம் படி இருப்பான் ஒருவன்.
நச்சு மா மருந்தம்
இனி, ‘ஆசைப்படும் ஓர் ஒளஷதம் மருந்து’ என்னுதல்.
மா மருந்து –
பெரிய ஒளஷதம் மருந்து; வியாதியினளவு அல்லாத பேஷஜம்
மருந்து; ‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின்,
மேல்காற்றிலே காட்ட நோய் தீருமாயிருக்கையைத் தெரிவித்தபடி.
(காற்றிலே காட்ட நோய் தீருமாயிருக்கை’ என்னும் இவ்விடத்தில்,
‘நமனும் முற் கலனும் பேச, நரகில் நின்றார்கள் கேட்க, நரகமே சுவர்க்க மாகும் நாமங்க ளுடைய நம்பி’
என்ற திருமாலைப்பாசுரம் அநுசந்திக்கத் தகும்.)
இனி, ‘மா மருந்து’ என்பதற்கு,- –
ஏக ‘ஒரே மூலிகையாய்-ஸக்ருத் ஸேவ்யமாய் – எப்பொழுதும் உண்ணக்கூடியதாய் இருக்கிற மருந்து’ என்னுதல்.
இனி,அபத்யசகமான ஒளஷதம் ‘பத்தியமில்லாத மருந்து’என்னுதல்; என்றது,
இவன் பிராமாதிகமாகப் பண்ணும் பாவங்களையும் காணாக் கண்ணிட வல்லனாயிருக்கை.
புத்தி பூர்வகமாகப் பண்ணும் அன்று -தான் அறிந்து செய்கின்ற அன்று, பிறந்த ஞானத்தோடு மாறுபடும்;
தன்னை யறிந்த பின்பு முதலிலே இவற்றில் மூளான்;
ஆன பின்பும், விரோதியான தேகம் அனுவர்த்திகையாலே – நெஞ்சு இருண்டு பாவங்களைச் செய்தல் தவிரான்;
பின்னர் ஞானம் பிறந்தவாறே அதற்கு அனுதபித்து வருந்திப் பின்-கை வாங்குவான்.
அவ்வாறன்றி, அறிந்தே பாவங்களைச் செய்வானாயின் ஞானம் பிறந்ததில்லையே யாமித்தனை.

நலம் கடல் அமுதம் என்கோ –
கடலிலே கடையாமல் வந்த அமிருதம் என்பேனோ!

அச்சுவைக் கட்டி என்கோ –
அம்ருத அனந்தரம் சொல்லுகிற கட்டி யாகையாலே -அவ்வமிருதத்தைச் சார்த்து
‘அச்சுவைக் கட்டி’ என்று சுட்டுகிறாராதலின், ‘கட்டி’ என்பது கருப்புக்கட்டியாமித்தனை.
பிரஸ்த்துதமான அவ் வமிர்தத்தோடொத்த சுவையையுடைய கருப்புக்கட்டி என்பேனோ!

அறுசுவை அடிசில் என்கோ –
ஆறுபடிப்பட்ட சுவையையுடைய அடிசில் என்பேனோ!
அறுசுவையாவன: ‘கைப்பு, புளிப்பு, கார்ப்பு, தித்திப்பு, துவர்ப்பு, உவர்ப்பு’ என்பன.

நெய்ச்சுவைத் தேறல் என்கோ –
மிக்க சுவையையுடைய தேன் என்பேனோ! நெய் – மிகுதி.
இனி, ‘சுவை’ என்பதனை இடைநிலைத் தீவகமாகக் கொண்டு, ‘சுவையையுடைய நெய், சுவையையுடைய தேறல்’ என்னுதல்.

கனி என்கோ பால் என்கோ –
‘ஒரு காலத்தில் இனியதாம் பழம் என்பேனோ!
இனியதான பால் என்பேனோ! யாது என்பேன்?’ என்றபடி.

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: