ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -3-4-2-

கீழ்ச சொன்ன பூத பஞ்சகங்களுடைய காரியங்களை முறையாகப் பேசுகிறார்.

கூவுமாறு அறிய மாட்டேன், குன்றங்கள் அனைத்தும் என்கோ!
மேவு சீர் மாரி என்கோ! விளங்கு தாரகைகள் என்கோ!
நாவியல் கலைகள் என்கோ! ஞான நல் ஆவி என்கோ!
பாவு சீர்க் கண்ணன் எம்மான் பங்கயக் கண்ணனையே–3-4-2-

கூவுமாறு அறிய மாட்டேன் –
பாசுரமிட்டு அழைக்கும்படி அறிகின்றிலேன். கூவுதலாவது அழைக்கை
கூவக்கூவ நீ போதியேல் -என்னக் கடவது இறே
அர்த்தங்களில் அறியக் கூடாதது ஒன்று உண்டாய்ச் சொல்லுகிறாரல்லர்;
பகவானுடைய திருவருளால்-ப்ரஸாதத்தால் – வந்த வெளிச்சிறப்பால் அர்த்தங்கள் அடைய –
ஞாதமாயிரா -அறியக் கூடியவாயிரா – நின்றன. ‘பின்னை என்னை?’ எனின்,
பத்தியினாலே பரவசப்பட்டுப் பேசமாட்டுகின்றிலேன் என்கிறார்.
அன்றிக்கே இயத்தா ராஹித்யத்தாலே – ‘இவ்வளவு என்று சொல்லத்தக்க அளவு கடந்திருக்கையால்
பேச மாட்டுகின்றிலேன் என்கிறார்,’ என்னுதல்.

குன்றங்கள் அனைத்தும் என்கோ –
பூமியினுடைய வன்மை ஓரிடத்திலே திரண்டால் போலேயாய், பூமிக்கு ஆதாரமாயிருக்கிற-பர்வதங்கள் – மலைகள் என்பேனோ!
இது, கீழே ‘பொரு இல் சீர்ப்பூமி’ என்றதனுடைய காரியம்.

மேவு சீர் மாரி என்கோ –
கண்டார் மேவும்படியான வடிவழகையும் குளிர்த்தியையுமுடைய மேகம் என்பேனோ!
மேகம் இவர் தமக்கு இரண்டொரு காரியமாம்;
திருமேனியில் அழகுக்குப் போலியாயிருக்கையாலேயும் விடமாட்டார்.
இது, மேல் ‘திகழும் தண் பரவை’ என்றதன் காரியம்.

விளங்கு தாரகைகள் என்கோ –
விளங்குகின்ற நக்ஷத்திரங்கள் என்பேனோ!
தாரகைகளைக் கூறியது, தேஜஸ் -ஒளி காரணமான எல்லாப் பொருள்களுக்கும் உபலக்ஷணம்.
இது, மேல் ‘தீ என்கோ!’ என்ற தேஜஸ் காரியம்.

நா இயல் கலைகள் என்கோ –
நாவாலே இயற்றப்பட்ட -சதுஷ் சஷ்டி -அறுபத்து நான்கு கலைகள் என்பேனோ!
இது, கீழே ‘வாயு என்கோ! என்ற வாயுவின் காரியம்.
‘ஆகாயத்தின் குணமான ஒலியானது வாயுவின் காரியமாமாறு என்?’ என்னில்,
ஒலிகளினுடைய-அபிவ்யக்தி – பிரகாசம் காற்றினுடைய காரியமன்றோ? ‘அதற்கு அடி என்?’ என்னில்,-
பிரயத்ன அபிவியங்க்யமாய் -முயற்சியால் உண்டாக்கத் தக்கதாய் இருத்தலினாலே.
‘முயற்சியால் உண்டாகக்கத் தக்கதாயிருந்தால் காற்றின் காரியம் ஆமாறு என்?’ என்னில்,-
பிரயத்தனம் தான் முயற்சிதான்-வாயுவைத் தொற்றி – காற்றினைக் காரணமாக உடைத்தாயன்றோ இருப்பது?

ஞான நல் ஆவி என்கோ –
ஆவி என்பது, ஆகுபெயராலே ஒலியினைச் சொல்லுகிறது-லக்ஷணையாலே -சரீரத்தை சொல்லி –
ஞானத்தைப் பொதிந்துகொண்டன்றோ சப்தம் -ஒலியானது இருப்பது?-ஆகையால் ஒலி என்றவாறு –
இந்திரியம் முதலானவற்றைப் போன்று ஒலிக்கு ஒரு விதக் குற்றமும் இல்லாமையாலே, ‘நல் ஆவி’ என்கிறார்.
இது, மேல் ‘நிகழும் ஆகாசம் என்கோ!’ என்ற ஆகாசத்தின் காரியம்.
‘ஆகாசம் என்கோ’ என்ற ஆகாசத்தின் குணமே யன்றோ ஒலி?
திரவியத்தினுடைய காரண குணமேயன்றோ அந்தக் காரியத்தினுடைய குணத்திற்கும் காரணம்?
தந்துகதமான ஸுல்க்யம் இ றே பாடகத்தமான ஸுலக்கியத்துக்கும் காரணம் -அதாவது –
நூலிலுள்ள வெண்மை நிறமேயன்றோ வஸ்திரத்திலுள்ள வெண்மை நிறத்துக்கும் காரணம்?
பாரிசேடியத்தின் பிரயத்தனத்தாலே ஆகாச குணத்தையே சொல்லிற்றாமத்தனையன்றோ இதில்?

பாவு சீர்க் கண்ணன் –
விதித -‘எல்லாராலும் அறியப்பட்டவர்’ என்கிறபடியே, எங்கும் ஒக்கப் பரம்பின கல்யாண குணங்களையுடைய கிருஷ்ணன்.

எம்மான் பங்கயக் கண்ணன் –
கண்ணழகாலேயாயிற்று இவரை ஒடியெறிந்தது. ‘
‘பங்கயக் கண்ணன்’ என்றதனோடு ‘குன்றங்கள் அனைத்துமென்கோ!’ என்பது போன்றவைகளைச் சேர்த்துச் சொல்வான் என்?’ என்னில்,
‘பங்கயக் கண்ணன்’ என்றதனோடு ‘குன்றங்கள் அனைத்தும்’ என்றதனோடு வாசி யற்றிருக்கிறதாயிற்று இவர்க்கு.
அன்றிக்கே, ‘பெரும் புறக்கடல்’ என்கிற திருமொழி நிர்வஹிக்கிற கிரமத்திலே
‘குன்றங்களனைத்தும்’ என்றது, ‘நின்ற குன்றத்தினை நோக்கி’ என்னுமாறு போன்று வடிவிற்குப் போலியாய்,
‘மேவு சீர் மாரி’ என்று மேகத்தைச் சொன்னவிடம் திருநிறத்துக்குப் போலியாயிருக்கிறது’ என்று நிர்வஹிப்பாருமுண்டு.

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: