தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் தீருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -3-4-3-

ஜகச் சரீரனாய் நின்றத்தோடு அசாதாரண விக்ரஹத்தோடு நின்றத்தோடு வாசி அற்று இருக்கையாலே
ஜெகதாகாரனாய் நின்ற நிலையோடு அசாதாரண விக்ரஹத்தையும் சேர்ந்து அனுபவிக்கிறார்

பங்கயக் கண்ணன் என்கோ! பவளச் செவ்வாயன் என்கோ!
அங்கதிர் அடியன் என்கோ! அஞ்சன வண்ணன் என்கோ!
செங்கதிர் முடியன் என்கோ! திரு மறு மார்பன் என்கோ!
சங்கு சக்கரத்தன் என்கோ சாதி மாணிக்கத்தையே!–3-4-3-

பங்கயக் கண்ணன் என்கோ –
சேதநரோடு கலப்பது கண் வழியே யன்றோ? தம்மோடு முதல் உறவு பண்ணின கண்ணழகைச் சொல்லுகிறார்.

பவளம் செவ்வாயன் என்கோ –
அந் நோக்குக்குத் தப்பினாலும் தப்பவொண்ணாத முறுவலைச் சொல்லுகிறது.

அம் கதிர் அடியன் என்கோ –
நோக்குக்கும் ஸ்மித்துக்கும் – புன் முறுவலுக்கும் தோற்றார் விழும் நிலத்தைச் சொல்லுகிறது.
அழகிய புகரையுடைய திருவடிகளையுடையவன் என்பேனோ!

அஞ்சனம் வண்ணன் என்கோ – அத்திருவடிகளிலே விழுந்தார்க்கு -அனுபாவ்யமான வடிவைச் சொல்லுகிறது.

செம் கதிர் முடியன் என்கோ –
இது பிராப்த விஷயத்தில் அனுபவம் என்னுமிடத்தைக் காட்டித்தருவது -சேஷித்வ பிரகாசகமான திருமுடியன்றோ?

திரு மறு மார்பன் என்கோ –
திரு அபிஷேகத்தைக் கண்டால் ஸ்வாதந்தரியத்தை அனுசந்தித்து இறாய்க்குமதனைத் தவிர்த்துத் தருவது ஸ்ரீ லக்ஷ்மீ சம்பந்தமன்றோ?
‘திருவையும் மறுவையும் மார்வில் உடையவன் என்பேனோ!’

சங்கு சக்கரத்தன் என்கோ – ‘இச்சேர்த்திக்கு என் வருகிறதோ!’ என்று
அஸ்தாநே பய சங்கை – இடமல்லாத இடத்திலும் அச்சத்தாலே ஐயங்கொள்ளுகிற -ப்ரேமாந்தருடைய -பிரேமத்தின்
முடிவெல்லையிலே நிற்கின்றவர்களுடைய வயிற்றெரிச்சலைத் தவிர்ப்பன திவ்ய ஆயுதங்கள் அல்லவோ?
‘வயிற்றெரிச்சலைத் தவிர்ப்பதற்குத் திவ்ய ஆயுதங்கள் காரணம் ஆமோ?’ எனின்,
‘வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு’ என்னா,
‘சுடராழியும் பல்லாண்டு’ என்னாநின்றார்களன்றோ?

சாதி மாணிக்கத்தையே –
போலி அன்றியே ஆகரத்திலே பிறந்து நன்றான மாணிக்கம் போலே -நிர்த்தோஷமாய் -குற்றமற்றதாய் –
ஸ்வதஸ் ஸித்தமான – இயல்பாய் அமைந்த வடிவழகை யுடையவனை.

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: