ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -3-3-9-

‘நம் விரோதியையும் போக்கிப் ப்ராப்யத்தையும் திருமலையாழ்வார் தாமே தருவர்,’ என்றார் கீழ் இரண்டு பாசுரங்களாலே;
‘இப்படி விரோதியான பாவங்களைப் போக்கி வீடு ப்ராப்யத்தைத் தருவதற்குத் திருமலை யாழ்வாரெல்லாம் வேண்டுமோ?
திருமலையாழ்வாரில் ஏக தேசம் அமையாதோ?’ என்கிறார் இப்பாசுரத்தில்.
‘ஏக தேசம் ’ என்கிறது அப்பனை – ‘வட மா மலையுச்சியை’ என்பர் திருமங்கை மன்னன் திருவேங்கடமுடையானை –

ஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப் பிணி
வீயுமாறு செய்வான் திரு வேங்கடத்து
ஆயன் நாள் மலராம் அடித் தாமரை
வாயுள்ளும் மமனத்துள்ளும் வைப்பார்கட்கே–3-3-9-

மூப்பு பிறப்பு இறப்பு ஓயும் –
ஜென்ம ஜரா மரணாதிகள் ஓயும். ‘இப்போது ஓயும்’ என்கையாலே,
இதுகாறும் அநாதி காலம் உச்சி வீடும் விடாதே போந்தது என்னுமிடம் தோன்றுகிறது.
‘பிணி வீயுமாறு செய்கின்றவனான திருவேங்கடத்து ஆயன்’ என்னுதல்;
‘பிணி வீயுமாறு செய்கைக்காகத் திருவேங்கடத்திலே வந்து நிற்கிற ஆயன்’ என்னுதல்.
‘இவர்கள் பிணியும் இங்ஙனே சென்றிடுவதாக என்று இருந்தானாகில், கலங்காப் பெருநகரத்தில் இரானோ? என்பார்,
‘பிணி வீயுமாறு செய்வான் திருவேங்கடத்தாயன்’ என்கிறார்.
ஈண்டுப் ‘பிணி’ என்கிறது, சரீர சம்பந்த நிபந்தனமாக வருமவை எல்லாவற்றையும் நினைத்து .
ஆக, இதனால், துக்கத்தைப் போக்கும் தன்மையன் என்பதனைத் தெரிவித்தபடி.
‘முதலடியில், ‘ஓயும் மூப்புப் பிறப்பு இறப்பு’ என்றவர்,
மீண்டும், ‘பிணி வீயுமாறு செய்வான்’ என்பதற்குக் கருத்து என்?’ என்னில்,
‘இவனுடைய இங்குத்தை துக்க நிவ்ருத்தியைப் பண்ணிக் கொடுக்கைக்காக ’ என்கை;
அவனே வந்து போக்கானாகில், இந்த எலி எலும்பனுக்குப் போக்கிக்கொள்ளப் போகாதேயன்றோ?

நாள் மலராம் அடித் தாமரை –
செவ்விப் பூவைத் தலையிலே வைத்தலைப் போன்றிருப்பது ஒன்றாதலின், ‘நாண்மலராம் அடித்தாமரை’ என்கிறார்.
‘அவன் கால் காண, ‘மூப்புப் பிறப்பு இறப்பு’ என்கிற இவையெல்லாம் நசிக்கும் ’ என்றபடி.
இதனால், ‘விரோதி போகைக்கு இவ் வேப்பங்குடி நீரை ஆயிற்றுக் குடிக்கச் சொல்லுகிறது என்கிறார்,’ என்றபடி.

வாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கு –
இவை இரண்டும் காயிகத்துக்கும் – உடலுக்கும்- உபலக்ஷணமாய்,
‘திருவடிகளை மனம் வாக்குக் காயங்களாலே அநுசந்திப்பார்கட்கு’ என்றபடி.
வாயுள் வைக்கையாவது,
‘ஓவாது உரைக்கு முரை’ என்கிறபடியே உரைத்தல்.
மனத்துள் வைக்கையாவது, மறவாதிருத்தல்.
இப்படி உறுப்புகட்கு அடைத்த காரியங்களைக் கொள்ளவே, சொரூபத்திற்கு விரோதியாய் வந்தேறியானவை தன்னடையே போம்.

பிணி வீயுமாறு செய்வான் திருவேங்கடத்து ஆயனுடைய நாண்மலராம் அடித்தாமரை
வாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கு மூப்புப் பிறப்பு இறப்பு ஓயும்.

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: