ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -3-3-2-

பரிபூர்ண கைங்கரியத்தைப் பெறவேணும் என்று மநோ ரதியா நின்றீர் ;
அது, பின்னை இச்சரீர சம்பந்தம் அற்று அர்ச்சிராதி மார்க்கத்தாலே ஒரு தேச விசேஷத்திலே
போனால் பெறுமதொன்றன்றோ?’ என்ன,
‘அங்குள்ளாரெல்லாரும் வந்து அடிமை செய்கிறது இந்நிலத்திலே யாகையாலே,
இங்கே பெறுதற்குக் குறையில்லை,’ என்கிறார்.

எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்து பூ மகிழும் திரு வேங்கடத்து
அந்தம் இல் புகழ்க் கார் எழில் அண்ணலே–3-3-2-

எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை –
‘அடியார் அடியார்தம் அடியார் அடியார் தமக்கடியார் அடியார் தம் மடியார் அடியோங்களே’ என்கிறபடியே,
ஸ்வ -ஆத்ம- சொரூபத்தை நிரூபிக்கப் புக்கால், அத்தலையே பிடித்து இவ்வளவும் வர நிரூபிக்குமாறு போலேயாயிற்று,
பர சொரூபத்தை நிரூபிக்கப் புக்காலும் இத்தலையே பிடித்து அவ்வளவும் செல்ல நிரூபிக்கும்படி.
தமீஸ்வரனாம் பரமம் மஹேஸ்வரம் – ‘அப்பரம்பொருள் ஈஸ்வரர்களாய் உள்ளவர்கட்கும் மேலான ஈஸ்வரனாவான்,’
என்று கூறப்பட்டுள்ளதன்றோ?
(எந்தை என்பதில் தாம் ஒருவர், தம் தந்தை ஒருவர்; இவ்விருவரோடு மேலேயுள்ள ஐவரையும் கூட்டினால் ஏழ் தலைமுறையாதல் )

வானவர் வானவர் கோனொடும் சிந்துபூ மகிழும் திருவேங்கடத்து –
வானவர் உண்டு -நித்ய ஸூரிகள், / வானவர் கோன் உண்டு சேநாபதி ஆழ்வான் –
அவனோடே கூட, பிரகிருதி சம்பந்தமில்லாத மலர்களைக் கொண்டு வந்து, தங்களுக்கும்-அவ்வருகானவன்-
அப்பாற்பட்டவன் கானமும் வானரமுமான இவற்றுக்கு முகங்கொடுத்துக்கொண்டு நிற்கிற சௌசீல்ய குணத்தை அநுசந்தித்து
நைந்தவர்களாய்ப் பின்னர் க்ரமத்தில் -முறைப்படி -பரிமாற அருச்சிக்க -மாட்டாது அடைவு கெட்டுச் சிந்தாநிற்பர்கள்.
இங்குள்ளார் அங்கே சென்று மேன்மையைக் கண்டு-அநந்யார்ஹர் – அவனுக்கே அடிமைப்படுமாறு போன்று,
அங்குள்ளார் இங்கே வந்து அந்நீர்மை கண்டு ஈடுபடும்படி.
மேன்மை அனுபவிக்கலாவது, அந்நிலத்திலே; நீர்மை அனுபவிக்கலாவது, இந்நிலத்திலேயன்றோ!

சிந்து பூ மகிழும் –
கொம்பில் நின்ற போதையிற்காட்டிலும், நிலத்திலே விழுந்த போது அந்நிலத்தினுடைய தன்மையாலே செவ்வி பெற்று –
விகசிதம் -மலர்ந்து தோன்றுகிறதாதலின், ‘சிந்துபூ மகிழும் திருவேங்கடம்’என்கிறார்.

அந்தம் இல் புகழ் –
ஸ்ரீ வைகுண்டத்தில் புகழுக்கு அந்தம் உண்டு போலே
பிரகிருதி சம்பந்தமில்லாத விக்கிரகத்தோடே அவ்வடிமை அனுபவிக்கப் பாங்கான உறுப்புகளையுடையராய்க்கொண்டு
கிட்டினார்க்கு அனுபவ யோக்கியனாயிருக்கையாலே புகழ் ஓரெல்லையோடே கூடியிருக்கும் அப்பரமபதத்தில்;
இங்கு, ‘ஆளியும் கோளரியும் பொன்மணியும் முத்தமும் பூமரமும்’ ஆனவற்றுக்குத் தன்னைக் கொடுத்துக்கொண்டு நிற்கையாலே
புகழ்க்கு முடிவு இல்லையாதலின், ‘அந்தமில் புகழ்’ என்கிறது.
ஆக,ஸமஸ்த கல்யாண குணாத் மகோ அசவ் ‘ஈஸ்வரன் சமஸ்தமான கல்யாண குணங்களையும் இயல்பாகவேவுடையவன்,’ என்றபடி.
இதனால், ஸ்ரீவைகுண்டத்தில் புகழ்க்கு முடிவு உண்டு போலும்!’ என்றவாறு.

கார் எழில் –
ஸ்யாமளமான வடிவு அழகு –
நிர்க்குணன் -குணமில்லாதவன் ஆனாலும் விடவொண்ணாதபடியாயிற்று வடிவழகு இருப்பது.

அண்ணல் –
வடிவழகு இல்லையானாலும், விடவொண்ணாதபடியாயிற்றுச் சம்பந்தம் -பிராப்தி -இருப்பது.

‘வானவர் வானவர் கோனொடும் சிந்துபூ மகிழும் திருவேங்கடத்து அந்தமில் புகழ்க்காரெழில் அண்ணல் –
எந்தை தந்தைதந்தை தந்தை தந்தைக்கும் முந்தை; ஆன பின்னர், அங்கே வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்’ என்கிறார்.

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: