ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -3-2-10-

இவர் நசை யற்றவராய் முடியப் புக்கவளவில்,
‘இவர் கிரமப் பிராப்தி -பற்றாதார் -பொறாதவர் போலும்!’ என்று நினைத்து,
‘நீர் ஒரு பெரு விடாயர் உண்டு என்றறிந்து, உமக்காக அன்றோ வடக்குத் திருமலையில் நிற்கிறோம்?’ என்று
அந் நிலையைக் காட்டித் தரிப்பிக்கத் தரித்து, இனியராகிறார்.

தலைப் பெய் காலம் நமன் தமர் பாசம் விட்டால்
அலைப் பூண் உண்ணும் அவ் வல்லல் எல்லாம் அகலக்
கலைப் பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டு கொண்டு
நிலைப் பெற்று என்னெஞ்சம் பெற்றது நீடு உயிரே–3-2-10-

நமன் தமர் தலைப்பெய் காலம் –
யமபடர் வந்து கிட்டுங் காலம். இவன் ஜீவிக்கும் நாளில்-நமக்கு எதிர் உண்டோ -என்று
மூலையடியே நின்று வேண்டிற்றுச் செய்து திரியும் –
நமன் தமர் செய்த குற்றங்களைப் பட்டோலை யெழுதிப் பலத்தை அனுபவிக்கும் சமயத்தில் வந்து முகங்காட்டுவார்களாதலின்,
‘நமன் தமர் தலைப்பெய் காலம்’ என்கிறார்.

பாசம் விட்டால் –
அவர்கள் தங்கள் கையிலுள்ள பாசத்தை வீசினால்.

அலைப்பூண் உண்ணும் அவ்வல்லல் எல்லாம் அகல –
இவனுக்கு இவ்வருகே நசை கிடைக்கையாலே அது இங்கே இசிக்க, யமபடர்கள் அங்கே இசிக்கப்படும் துக்கத்துக்கு –
ஓர் அவதி -ஓரெல்லையில்லையாதலின், ‘அல்லல் எல்லாம்’ என்கிறார்.
அத்துன்பங்களை-த்ருஷ்டாந்தம் – உவமை முகத்தால் விளக்குதற்கு ஒண்ணாதாதலின், ‘அவ்வல்லல்’ எனச் சுட்டுகிறார்.
இனி, இதற்கு, ‘அவையெல்லாம் காணக்காண விட்டுக் கடக்க நிற்க, அவற்றோடு-சஜாதீயமான – ஒத்ததான துன்பம்’ என்று
எம்பார் அருளிச்செய்வர். என்றது,
அவ்வோபாதி கிலேசம் – ‘அந்தத் துக்கத்தைப் போலேயிருக்கிற, பகவானைப் பிரிந்ததனால்-விஸ்லேஷத்தால் –
உண்டான துக்கமெல்லாம் இவர்க்கும் அகல’ என்றபடி.
இனி,‘பகவான் கைவிட்ட பின்னர்-பகவத் அலாபமே யான பின்பு – யமனுக்கு வஸ்யனாகையும் வந்ததேயன்றோ?
அந்த யம வஸ்யதை போம்படியாக’ என்று ஆண்டான் அருளிச்செய்வர்.
(முதலியாண்டான் நிர்வாஹத்துக் கருத்து, ‘ஸ்வதந்திரனான சர்வேஸ்வரன் உபேக்ஷித்தால் யமபாதை உண்டாம்,’ என்பது.
இதனை, நித்திய சூரிகளைப் போன்ற நித்தியானுபவ யோக்கியதை இவருக்கு உண்டாயிருக்கவும், பிரிவு
இடையிடையே வருதலைப் போன்று கொள்க. இதனை ஸ்ரீ பரதாழ்வான் பக்கலிலே கண்டோம்.)

கலைப்பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டுகொண்டு –
வேதைஸ் ச சர்வைர் அஹம் ஏவ வேத்ய ’எல்லா வேதங்களாலும் அறியத்தக்கவனும், வேதங்களைச் செய்தவனும்,
வேதங்களை யறிந்தவனும் நானே,’ என்கிறபடியே,
பல கலைகளாலும் அறியப்பட்ட உத்கர்ஷத்தை ஏற்றத்தை யுடையனாயிருந்து, நெடுங்கை நீட்டாகப் பிரமாணங்களால்
கேட்டுப் போகாதபடி கண்களுக்கு விஷயமாகக் கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவனைக் கண்டு கொண்டு.

என் நெஞ்சம் நிலைப்பெற்று – ‘
சிந்தாமற் செய்யாய்’ என்ற நெஞ்சும் ஒரு படி தரிக்கப்பெற்றது.

உயிர் நீடு பெற்றது –
அச்சேத்யமாய் அதாஹ்யமாய் -‘வெட்டத்தகாததாய் எரிக்கத் தகாததாயிருக்கிற ஆத்ம வஸ்துவும்’ அழியப்புக்கது;
அங்ஙனம் அழியப்புக்க ஆத்மாவும் இப்போதாயிற்று -நித்யத்வம் -அழிவின்மையைப் பெற்றது.
‘ஆயின், ஆத்மாவிற்கு அழிவு உண்டோ?’ எனின்,
ச்சேத்யாதி விச ஜாதீயம் – ‘சேதிக்க முடியாத வேறுபட்ட சிறப்பினையுடையது’ என்ற இத்துணையேயல்லது,
தன்னில் ஸூக்ஷ்மமாய்ப் புக்கு வியாபித்து அழிக்க வல்ல பகவானுடைய குணங்களுக்கு அழியாமையில்லை என்க.
இனி நித்யமான ஆத்மாவிற்கு நாசமாவது, தாஸ்ய அசித்தி;
‘சேஷமான பொருளுக்குச் சேஷத்துவம் நிரூபகமானால், நிரூபகத்தையொழிய நிரூப்ய சித்தியில்லையே’ என்னுதல்.

’திறம்பேன்மின் கண்டீர் திருவடி தன் நாமம்
மறந்தும் புறந்தொழா மாந்தர் – இறைஞ்சியும்
சாதுவராய்ப் போதுமின்கள் என்றான் நமனும் தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு.’ (நான்முகன் திரு. 68.)

‘கடுஞ்சொலார் கடியார் காலனார் தமரால்
படுவதோர் கொடுமிறைக்கு அஞ்சி
நடுங்கி நான் வந்துன் திருவடி யடைந்தேன்
நைமிசா ரணியத்துள் எந்தாய்!- திருமங்கைமன்னன் திருவாக்கு.

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: