ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -3-2-8-

சாதன கர்மங்களைப் பண்ணினார் பலம் தாழ்த்துக் கூப்பிடக்கூடிய கூப்பீட்டைப்
பேற்றுக்கு ஈடாய் இருப்பதொரு கைம்முதல் இல்லாத நான் எங்கே வந்து கிட்டக் கூப்பிடுகிறேன்?’ என்கிறார்.

மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்;
ஒவுதல் இன்றி உன் கழல் வணங்கிற்றிலேன்;
பாவு தொல் சீர்க் கண்ணா!என் பரஞ்சுடரே!
கூவுகின்றேன் காண்பான்;எங்கு எய்தக் கூவுவனே?–3-2-8-

மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன் –
தில தைலவத்-தாரு வஹ்னி வத்- எள்ளில் எண்ணெய் போலவும், மரத்தில் நெருப்புப் போலவும்’ என்கிறபடியே,
இவ்வாத்மாவோடு பிரிக்க வொண்ணாதபடி யிருப்பதாய், துக்கத்தை விளைப்பதாயிருக்கிற பாவங்களைத்
தர்மேண பாபமபநுததி ‘தர்மம் செய்வதனால் பாவங்களைப் போக்கடிக்கிறான்’ என்கிறபடியே,
விகித கர்ம அனுஷ்டானத்தாலே போக்கிற்றிலேன்.

ஓவுதல் இன்றி உன் கழல் வணங்கிற்றிலேன் –
நிதித்யாசி தவ்ய‘இடைவிடாது தியானம் செய்வதனால் அறியத் தக்கவன்’ என்கிறபடியே,
எப்பொழுதும் அனவரத பாவனை பண்ணி உன்னை சாஷாத் கரிக்க விரகு பார்த்திலேன்.
‘ஓவுதல் இன்றி மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன், ஓவுதல் இன்றி உன்கழல் வணங்கிற்றிலேன்’ என்று
‘ஓவுதலின்றி’ என்பதனை முன்னும் பின்னும் கூட்டிப் பொருள் அருளிச்செய்வர் எம்பார்.
‘கண்ணாலப் பெண்டாட்டிக்கு உண்ண அவசரம் இல்லை,’ என்னுமாறு போன்று,
‘இந்திரியங்களுக்கு இரையிட்டுத் திரிந்தேனித்தனை; எனக்கு ஒன்றும் ஹிதம் பார்த்திலேன்,’ என்கிறார் என்றபடி.
‘இங்ஙனமிருக்க, உன்னை நினைத்தவாறே விட மாட்டுகின்றிலேன்’ என்கிறார் மேல்.

( இப்பாசுரத்தில், மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்’ என்றதனால் கர்மயோகம் இன்மையையும்,
‘ஓவுதலின்றி உன்கழல் வணங்கிற்றிலேன்’ என்றதனால் பத்தியோகம் இன்மையையும் கூறினாராயிற்று.
உபலக்ஷணத்தால் ஞானயோகம் இன்மையையும் கொள்க. )

பாவு தொல் சீர்க் கண்ணா –
விதித ‘எல்லாராலும் அறியப்பட்டவர்’ என்கிறபடியே. உகவாதார் கோஷ்டியிலும் பிரசித்தமான ஸ்வாபாவிக
கல்யாண குணங்களையுடைய கிருஷ்ணனே!

என் பரஞ்சுடரே –
சர்வ பிரகாரத்தாலும் உண்டான உத்கர்ஷத்தை எனக்கு அறிவித்தவனே!
இனி, ‘கண்ணா என் பரஞ்சுடரே’ என்று ஒன்றாக்கி,
‘தாழ நின்று இவ்வடிவழகை எனக்கு முற்றூட்டு ஆக்கினவனே!’ என்னுதல்;
‘பரஞ்சுடரே உடம்பாய்’ என்னக் கடவதன்றோ?
( ‘பரஞ்சுடர்’ என்பதறகு ‘எல்லா வகையாலும் உண்டான ஏற்றத்தையுடையவன்’என்றும்,
‘வடிவழகினையுடையவன்’ என்றும் இரண்டு பொருள் அருளிச்செய்கிறார்
‘கண்ணா!’ என்றதனால் தாழ நிற்றலும்,
‘பரஞ்சுடரே!’ என்றதனால் வடிவழகும்,
‘என்’ என்றதனால் தமக்கு முற்றூட்டாக்குதலும் போதரும்.
மூற்று ஊட்டு ஆக்குதல் – பூர்ணாநுபவம் உள்ளதாகச் செய்தல்.)

காண்பான் கூவுகின்றேன் –
ஒரு சாதனத்தைச் செய்து பலம் கைப்புகுராதார் கூப்பிடுமாறு போன்று, காண வேண்டும் என்று கூப்பிடுகிறேன்.

எங்கு எய்தக் கூவுவன் –
‘ஒரு கொசுக் கூப்பிட்டது’ என்று பிரமனது ஓலக்கத்திலே கேட்கப் போகின்றதோ?
எங்ஙனே வந்து கேட்கக் கூப்பிடுகிறேன்?

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: