ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -3-2-6-

என்னைப் பார்த்தால் கிட்டுவதற்கு விரகு இல்லை;
உன்னைப் பார்த்தால் தப்புவதற்கு விரகு இல்லை;
ஆன பின்னர், நிரதிசய போக்யமான உன் திருவடிகளைக் கிட்டுவது என்று?’ என்கிறார். என்றது,
‘விதி விலக்குகளுக்குக் கட்டுப்படுதல் இன்றி இதர விஷயப் பிரவணனாய்க் கைகழிந்து போன நான்
உன் திருவடிகளைக் கிட்டுவது என்று?’ என்கிறார் என்றபடி.

கிற்பன், கில்லேன் என்றிலன் முனம் நாளால்;
அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்றொழிந்தேன்;
பற்பல் ஆயிரம் உயிர் செய்த பரமா! நின்
நற்பொன் சோதித் தாள் நணுகுவது எஞ்ஞான்றே?–3-2-6-

கிற்பன் என்றிலன் கில்லேன் என்றிலன் –
‘ஆழ்வீர்! பகவத் விஷயத்தில் வந்தால் இச்சைக்கு மேற்பட வேறோர் முயற்சி வேண்டுவதின்று,
பேற்றில் வந்தால் மீண்டு வருதல் இல்லாத தன்மையையுடைய மோக்ஷமாயிருக்கும்;
அதற்கு ஈடாக ஒன்றைச்செய்ய வல்லீரே!’ என்றால்,
‘ஓம்; அப்படிச் செய்கிறேன்,’ என்றேன் இலன்.
‘இதர விஷயப் பிராவண்யமானது, முயற்சி கனத்துப் பேற்றில் ஒன்றின்றிக்கே இருப்பதொன்று;
அதனைத் தவிர வல்லீரே!’ என்றால்,
‘ஓம்; தவிருகிறேன்’ என்றேன் இலன்.
‘இப்படி விஹிதத்ததைச் செய்யாமையும், அவிஹிதத்தைச் செய்கையும் என்று தொடங்கி?’ என்ன,

முன நாளால் –
காலமெல்லாம் எனக்கு இதுவே அன்றே யாத்திரை –
‘இப்படி நெடுநாட்பட நம்மையொழியப் புறம்பே துவக்க வல்லபடி அனுபவிக்கத் தக்க போக்யபூதமான
விஷயங்களும் உண்டாயிற்றோ ’ என்னில்,
உன்பக்கல் வாராதபடி தகையத் தக்கன உண்டு; ஆனால், அவற்றின் பக்கல் ஒன்று இல்லை’ என்கிறார் மேல்:

அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்றொழிந்தேன் –
முள்ளிப்பூவில் ரசம் போலே அல்பமாய், அவைதாம் பலவாய், தன் நாவில் பசை கொடுத்துப் புஜிக்க வேண்டும்படி
இருக்கிற விஷயங்கள் தோறும் கால் தாழ்ந்து
சர்வ சத்தியான தேவரை ‘ஓடினேன் என்கிறபடியே கைகழியப் போனேன்.
‘நெடுநாள் இப்படி நம்மைக் கை கழிந்தீராகில் நம்மை இனிச் செய்யச் சொல்லுகிறது என்?’ என்ன,

பல் பல் ஆயிரம் உயிர் செய்த பரமா –
எண்ணிறந்த பொருள்களையுண்டாக்கின சர்வாதிகனே! என்றது,
‘இல்லாத பொருள்களை உண்டாக்கின உனக்கு உள்ள வஸ்துவுக்கு ஒரு குண தானம் பண்ணுகை அரிதோ?’ என்கிறார் என்றபடி.
உயிர் செய்கையாவது –
ஸ்திதி கமன சயனாதிகளுக்கு – நிற்றல், நடத்தல், படுத்தல் முதலியவைகட்குத் தகுதியாம்படி-யோக்யமாம்படி
சரீரத்தோடே-சம்பந்திப்பிக்கை சேர்ப்பித்தல்.

நின் நன்பொன் சோதித்தாள் நணுகுவது எஞ்ஞான்று –
உன்னுடைய நன்றாய் -ஸ்ப்ருஹணீயமான -விரும்பத்தக்கதாய் நிரவதிக தேஜோ ரூபமான திருவடிகளை
நான் என்று வந்து கிட்டக் கடவேன்?

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: