ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -3-2-4-

இப்படி நீர் இருந்த இடத்தே நாம் வரச் செய்தேயும் இழந்தீராகில், அவதாரங்களைப் போல ஒரு கால விசேஷத்திலே யாகாதே
எல்லாக் காலத்திலும் அந்தர்யாமித்வேந உகவாதார் பக்கலிலும் விட மாட்டாமையாலே புகுந்து நின்றோமே!
அங்கே அநுகூலித்து உம்முடைய அபேக்ஷிதம் பெற்றுப் போக மாட்டிற்றிலீரோ?’ என்ன, ‘அதற்கும் தப்பினேன்’ என்கிறார்.

சூழ்ச்சி ஞானச் சுடர் ஒளி யாகி என்றும்
ஏழ்ச்சி கேடு இன்றி, எங்கணும் நிறைந்த எந்தாய்!
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து,நின் தாள் இணைக் கீழ்
வாழ்ச்சி யான் சேரும் வகை அருளாய் வந்தே–3-2-4-

சூழ்ச்சி ஞானம் சுடர் ஒளியாகி –
சேதனரைத் தப்பாதபடி அகப்படுத்திக் கொள்ளுகையாலே வியாப்தியை ‘சூழ்ச்சி’ என்கிறார்.-
எங்கும் ஒக்க வியாபித்து இருப்பதாய் விசததமமாய் இருக்கிற ஞான பிரபையை யுடையையாய்
ஞானத்திற்கு ஆஸ்ரிதமான சொரூபத்தைச் சொல்லுகிறார் என்னுதல்..
ஞானத்தைச் சொல்லுதல் -,
ஸ்வரூப வியாப்தி, ஞான வியாப்தி என்னும் இரண்டும் சொல்லக் கடவது.-இரண்டும் பரார்த்தம் ஆகையால்

என்றும் ஏழ்ச்சி கேடு இன்றி –
எல்லாக் காலத்திலும் ஏழ்ச்சி யாதல் கேடு யாதல் இல்லாமல்;
கர்மம் அடியாக ஆத்மாவுக்கு வரக்கூடிய சங்கோச விகாசங்கள் என்பன இல்லாமல் இருத்தலின், ‘ஏழ்ச்சி கேடின்றி’ என்கிறது.
ஏழ்ச்சி-எழுச்சி -விகாசம் / கேடு -குறைவு -சங்கோசம்

எங்கணும் நிறைந்த
‘இப்படி எங்கும் பரந்து நிறைந்திருப்பது
ஓர் பிரதேசத்திலோ ?’ என்னில், எங்கணும் நிறைந்த என்கிறார் –
கண் -என்று இடமாய் -இடந்திகழ் பொருள் தொறும் கரந்து’ என்கிறபடியே,
எல்லா இடத்திலும் உண்டான எல்லாவற்றிலும் , ஜாதி வியக்தி தோறும் பரிசமாப்ய வர்த்திக்குமா போலே
பூர்ணமாக பவியாபித்து இருக்கும் .

எந்தாய் –
ஒருவனைப் பிடிக்க நினைத்து ஊரை வளைவாரைப் போலே வியாப்தியும் தமக்காக என்றிருக்கிறாராதலின், ‘எந்தாய்’ என்கிறார்.
‘ஆக, உன் பக்கல் அகப்படுத்திக்கொள்ள விரகு தேடி உணர்ந்து என்னை வியாபித்துக் கொண்டு
நீ நிற்கச் செய்தேயும், விஷயப் பிரவணனாய்த் தப்பினேன்,’ என்கிறார்.

மற்று எங்கும் தாழ்ச்சி தவிர்ந்து –
உன்னையொழிந்த மற்றுள்ள இடத்தில் வரக்கூடிய தாழ்ச்சியையும் தவிர்ந்து.
‘யாதானும் பற்றி’ என்கிறபடியே, ‘நீயன்றிக்கேயொழிய அமையுமே நான் மேல் விழுகைக்கு,’ என்றபடி.

நின் தாள் இணைக் கீழ் வாழ்ச்சி –
வகுத்ததுமாய் நிரதிசய போக்கியமுமாயிருக்கிற உன் திருவடிகளிலுண்டான கைங்கரியத்தை.

யான் சேரும் வகை அருளாய் –
இதற்கு முன் புதியது உண்டு அறியாதன யான் கிட்டுவதொரு பிரகாரம் அருளிச் செய்ய வேண்டும்.
இனி, ‘இவ்வாழ்ச்சிக்கு இட்டுப் பிறந்து வைத்து அதனை இழந்திருக்கிற நான் கிட்டுவதொரு பிரகாரம் அருளிச்செய்ய வேண்டும்.’ என்னுதல்.
‘இரண்டு இடங்களிலும் ப்ராவண்யம் ஒத்திருந்தும்,
சர்வம் பரவசம் துக்கம்-‘எல்லாம் பிறனுக்கு உரிமைப்பட்டிருப்பது துக்கம்’ என்றும்,
சேவா ஸ்வ வ்ருத்தி-பிறரிடம் சேவிப்பது நாய்த்தொழில்’ என்றும் அவற்றைச் சொல்லுகையாலே, அதனைத் ‘தாழ்ச்சி’ என்றும்,
சாயா வா சத்த்வம் அநு கச்சேத்- நிழலானது பொருள்களைத் தொடர்வது போல’ என்ற இதனைச் சொல்லுகையாலே,
இதனை, ‘வாழ்ச்சி’ என்றும் அருளிச்செய்கிறார்.

வந்தே –
அது தானும் முகம் தோற்றாத படி நின்று அருள வொண்ணாது;
என் கண்களுக்கு இலக்காம்படி இராமன் கிருஷ்ணன் முதலிய அவதாரங்களைப் போன்று,
எனக்காக ஓர் அவதாரத்தை பண்ணியே யாகிலும் வந்தருள வேண்டும்.

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: