ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -3-2-2-

உம்முடைய உடம்புகொண்டு நாம் இருந்த இடத்தே வந்து கிட்ட மாட்டிற்றிலீராகில்,
நம்முடம்பைக்கொண்டு நீர் இருந்த இடத்தே வந்து கிட்டினோமே!
வாமன வடிவைக்கொண்டு மஹாபலி முன்னே வந்து நின்றோமே!
அங்கே கிட்டமாட்டிற்றிலீரோ?’ என்ன, ‘அதற்குந் தப்பினேன்’ என்கிறார்.

வன் மா வையம் அளந்த எம் வாமனா!நின்
பன் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான்,
தொன் மா வல்வினைத் தொடர்களை முதல் அரிந்து,
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ?–3-2-2-

வன் மா வையம் அளந்த –
வன்மையையுடைத்தான பெரிய பூமியை அளந்த.
‘வடிவிணை இல்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை’க்கொண்டு காடும் மலையுமான பூமியை
அளந்தானாதலின் ‘வன்வையம் அளந்த’ என்கிறார்.
வன்மை என்பது ஈண்டு வையத்துக்கு அடை.
இனி, வையத்தை ஆகு பெயராக்கி, வன்மையை ஆகு பெயர்ப் பொருளுக்கு அடைமொழியாக்கி,
அவன் தானே தன்னைக் கொடு வந்து காட்டின இடத்திலும் நெஞ்சில் நெகிழ்ச்சியின்றியிருந்த சமுசாரிகளுடைய
நெஞ்சில் வன்மையைச் சொல்லுகிறார் என்னுதல்.
இப்பொருளில் ‘அசுரத் தன்மையையுடைய மஹாபலிக்கு உள்ள இரக்கமும் இல்லையே!
சுக்கிரன் முதலானோர் விலக்கவும் அவர்கள் வழி போயிற்றிலனே அவன்!’ என்று இவர்கள்
மன நெகிழ்ச்சியின்மைக்கு இரங்குகின்றமை தோன்றும்.
இனி, மஹாபலி தோள் மிடுக்காலே ஒருவர்க்கும் நுழைவதற்கு அரிதான வன்மையை உடைத்தாயிருந்ததாதலின்,
‘வன் மா வையம்’ என்கிறார் என்னுதல்.

எம் வாமனா –
அபஹ்ருத ராஜ்யத்தை யுடையவனான இந்திரனுக்காக அன்று,
வாமனாவதாரமும் மதர்த்தம் என்றிருக்கிறார்.
நின் – மம மாயா துரத்யயா ‘எனது மாயையினை ஒருவராலும் தாண்ட முடியாது,’ என்று சொன்ன இது என் ஒருவனுக்கும் பலித்துவிட்டது.

(‘கண்ட திறத்திது கைதவம் ஐய! கொண்டல் நிறக் குறள் என்பது கொள்ளேல்;
அண்டமு முற்றும் அகண்டமும் மேனாள் உண்டவனாம் இது உணர்ந்து கொள் என்றான்.’
‘வெள்ளியை யாதல் விளம்பினை; மேலோர் வள்ளிய ராக வழங்குவ தல்லால் எள்ளுவ என் சில? இன்னுயி ரேனும்
கொள்ளுதல் தீது; கொடுப்பது நன்றால்.’–)கம்பர் -பால காண்டம் -வேள்விப்படலம்

பன் மா மாயம் –
மாயம் என்கிறது மூல பிரக்ருதியை -பன்மையாவது என் என்னில் கார்யகதமான தேவாதி நாநாத்வத்தை
காரணத்தின் மேலிட்டு உபசார வழக்கால் ‘பன்மாயம்’ என்கிறார்.
அன்றிக்கே -குணத்ரயங்களுக்கு ஆஸ்ரயமாக இருக்கையாலே குண பேதங்களை இட்டுப் ‘பன்மாயம்’ என்கிறார்,’என்றுமாம் –

பல் பிறவியில் –
ப்ரக்ருதி சம்பந்த நிபந்தனமாக இ -றே
அநேக ஜென்மங்கள் தான் உண்டாகிறது -அவற்றிலே

படிகின்ற –
தரை காணாதே அவகாஹிக்கிற –
இவ்வனர்த்தத்திலே வெறுப்பின்றிப் பொருந்தி இருப்பதால் -‘விழுகின்ற’ என்னாது, ‘படிகின்ற’ என்றார்.
‘படிகின்ற’ என்ற வர்த்தமான நிர்த்தேசத்தால் , ‘இன்னம் தரை கண்டதில்லை’ என்பது போதரும்.

யான் –
சம்சார பாந்தனான நான்.

தொல் மா வல்வினைத் தொடர்களை முதல் அரிந்து –
இச் சேதனன் உள்ளவன்றே உள்ளனவாய், அனுபவித்தாலும் நசியாததாய் , ஈஸ்வரன் போக்கு மன்றும்
ஒரு நிலை நின்று போக்கவேண்டும்படி பிரபலமாய், ஒன்றோடொன்று அனுபபந்தித்துத்
தாம் குவாலாய் இருக்கிற பாபங்களை வாசனையோடே போக்கி.
தொடர் – விலங்கு.

நின் மா தாள் சேர்ந்து –
பரம பிராப்யமாய் நிரதிசய போக்கியமாயிருக்கிற திருவடிகளைக் கிட்டி.

நிற்பது –
நித்திய சம்சாரிகளுக்குப் பகவத் ஸமாச்ரயணம் -பறக்கிற தொன்றிலே பாரம் வைத்தாற்போலே
இருப்பதொன்று’ ஆதலின், ‘நிற்பது’ என்கிறார்.
அதஸோ அபயங்கதோ பவதி ‘பயமில்லாமைக்காகப் பரம்பொருளிடத்தில் இடைவிடாத நினைவின் ரூபமான
நிஷ்டையையடைகிறவன் பயமின்மையை அடைகிறான்,’ -என்று உபநிஷத் .

நிற்பது எஞ்ஞான்றுகொலோ –
‘அது எந்நாளாக வற்றோ? அபீதா நீம் ச காலஸ் ஸ்யாத் ‘காட்டினின்றும் மீண்டு வருகிற உன்னை எந்த நாளில் பார்ப்பேனோ,
அந்தநாள் இந்த நாளாகவேண்டும்,’ என்பது போன்று ‘எஞ்ஞான்று கொலோ!’ என்கிறார் என்றபடி.
இனி, இதற்கு ‘இந்நாள் என்று ஓரவதி பெற்றதாகில், இன்று பெற்றதோடொக்கும் என்றும் சொல்லுவார்கள் –

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: