ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -3-1-11-

நிகமத்தில் ‘இத் திருவாய்மொழி தானே இது கற்றாரை உஜ்ஜீவிப்பித்து
பின்னர் -சாம்சாரிகமான -சகல துரிதத்தையும் போக்கும்,’ என்கிறார்-

வியப்பு ஆய வியப்பு இல்லா மெய்ஞ்ஞான வேதியனைச்
சயப் புகழார் பலர் வாழும் தடங்குருகூர்ச் சடகோபன்
துயக்கு இன்றித் தொழுது உரைத்த ஆயிரத்துள் இப் பத்தும்
உயக் கொண்டு பிறப்பு அறுக்கும் ஒலி முந்நீர் ஞாலத்தே–3-1-11–

வியப்பு ஆய வியப்பு இல்லா –
வேறு சில வ்யக்திகளிலே கண்டால்-விஸ்மய ஹேதுவாய் இருக்குமடைய இவன் பக்கலிலே கண்டால் ப்ராப்தமாய் இருக்கும்.
ஒருவன் நான்கு பசுக்களைத் தானம் செய்தான் என்றால், அது விசமய ஹேதுவாய் இருக்கும் ;
‘பெருமாள் செய்தார்’ என்றவாறே, ப்ராப்தமாய் இருந்தது இறே – என்றது, –
சர்வ ஸ்வ தானம் பண்ணிக் கையொழிந்த அளவிலே ‘திரிஜடன்’ என்பான் ஒரு பிராஹ்மணன் வர,
அப்பொழுது ஒன்றும் தோன்றாமையாலே ‘உனக்கு வேண்டும் பசுக்களை அடித்துக்கொண்டு போ,’ என்ன,
தண்டைச் சுழற்றி எறிந்து அதற்கு உட்பட்ட பசுக்களையடைய அடித்துக் கொண்டு போனான்’ என்னும் சரிதப் பகுதியை உணர்த்தியவாறு.

மெய்ஞ்ஞான வேதியனை –
யதாபூதவாதியான -உண்மையைக் கூறுகின்ற வேதங்களாலே -ப்ரதிபாதிக்கப்பட்ட -சொல்லப்படுகின்ற –
உத்கர்ஷத்தை — ஏற்றத்தை (முதன்மையை) உடையவனை.

சயம் புகழார் பலர் வாழும் தனம் குருகூர்ச் சடகோபன் –
‘இந்நின்ற நீர்மை இனியாம் உறாமை’ என்ற இவர் தம்மைப் போன்று சம்சாரத்தை ஜெயிக்கையால் வந்த புகழையுடைய
ஸ்ரீ வைஷ்ணவர் பலரும் ஆழ்வாரை அனுபவித்து-வர்த்திகைக்கு – வாழ்க்கைக்குத் தகுதியாகப்
பரப்பையுடைத்தான திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார்.

துய்க்கு இன்றித் தொழுது உரைத்த ஆயிரத்துள் இப்பத்தும் ஒலி முந்நீர் ஞாலத்தே உய்யக்கொண்டு பிறப்பு அறுக்கும் –
துயக்காவது மனம் திரிபு–சம்சய விபர்யய ரஹிதமாக சாஷாத் கரித்து –
அருளிச் செய்த ஆயிரத்திலும் இப்பத்தும், ஒலியையுடைத்தான முந்நீரையுடைய பூமியிலே-
அசன்நேவ -‘பரம்பொருள் இலன் என்று அறிவானாகில் அவனும் இல்லாதவனாகிறான்,’ என்கிறபடியே,
அசத் கல்பரானவர்களை,சந்தமேநம் ததோ விது ‘பரம்பொருள் உளன் என்று அறிவானாகில் அவனும் உள்ளவனாகிறான்,’ என்கிறபடியே,
உஜ்ஜீவிப்பித்து விரோதிகளையும் போக்கும். என்றது,
அராஜகமான தேசத்திலே ராஜ புத்திரன் தலையிலே முடியை வைத்து விலங்கு வெட்டி விடுமா போலே ,
அழகர் திருவடிகளிலே செய்யும் கைங்கர்யத்தில் அந்வயிப்பித்துப் பின்பு
தத் விரோதியான சமுசார சம்பந்தத்தை அறுத்துக் கொடுக்கும் என்கிறார்,’

——————————-

முதற்பாட்டில், அழகருடைய திருவணிகலன்களுக்கும் திருமேனிக்குமுண்டான ஸூ கடிதத்வத்தை அனுசந்தித்தார்
இரண்டாம்பாட்டில், அதற்கு நாட்டார் த்ருஷ்டாந்தம் இட்டுச் சொல்லுமவை யெல்லாம் உனக்கு வாத்யத்தை விலைக்கும் என்றார் ;
மூன்றாம் பாட்டில், ‘நாட்டாரை விடும், மயர்வற மதிநலம் அருளப்பெற்ற நீர் சொல்லீர்,’ என்ன, ‘என்னால் சொல்லி முடியாது,’ என்றார்;
நான்காம் பாட்டில், ‘இப்படி விலக்ஷணனாய் நிரதிசய போக்யனாயிருக்கிற உன்னை உலகத்தார் இழந்து போம்படி
அவர்கட்கு மதி விப்ரமங்களைப் பண்ணினாய்,’ என்றார்;
ஐந்தாம் பாட்டில், ‘நாட்டாரில் வ்யாவருத்தர் அல்லீரோ? உம்மால் பேசவொண்ணாமைக்குக் குறை என்?’ என்ன,
‘என்னை வ்யாவ்ருத்தன் ஆக்கினது போன்று உன்னை சாவதி ஆக்கிற்றில்லையே!’ என்றார்;
ஆறாம் பாட்டில், ‘வேதங்களும் நீரும் கூடப் பேசினாலோ?’ என்ன, ‘அவையும் உன்னைப் பரிச்சேதிக்க மாட்டா,’ என்றார்;
ஏழாம் பாட்டில், ‘வேதங்கள் கிடக்க; வைதிக புருஷர்கள் என்று சிலருளரே, அவர்கள் ஏத்தக் குறை என்?’ என்ன,
‘அதுவும் உனக்கு நிறக்கேடு’ என்றார்;
எட்டாம் பாட்டில், ‘கர்மபாவனையில்லாமல் பிரஹ்மபாவனையேயாயிருப்பான் ஒரு பிரஹ்மாவை-உத்ப்ரேஷித்து- கற்பித்து
அவன் ஏத்திலும் தேவரீர்க்கு அவத்யம் ’ என்றார்;
ஒன்பதாம் பாட்டில், ‘மேன்மை பேசவொண்ணாது’ என்கைக்கு, ‘நீர்மையோ தான் பேசலாயிருக்கிறது’ என்றார்;
பத்தாம் பாட்டில், ‘உன்னாலே ஸ்ருஷ்டனான ப்ரஹ்மாவாளே ஸ்ருஜ்யரான இவர்கள் உன்னை ஏத்துகையாவது உனக்கு வாத்யமே அன்றோ? என்றார்;
நிகமத்தில் ‘இத்திருவாய் மொழிதானே ப்ராப்யத்தைத் தரும்’ என்றார்.

முடியார் திரு மலையில் மூண்டு நின்ற மாறன்
அடிவாரந் தன்னில் அழகர் – வடிவழகைப்
பற்றி முடியும் அடியும் படி கலனும்
முற்றும் அனுபவித்தான் முன்–திருவாய்மொழி நூற்றந்தாதி-21-

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: