ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -3-1-10-

வேதைக சமைதி கம்யனாய் -சர்வேஸ்வரனாய் இருக்கிற உனக்கு, த்வத் ஸ்ருஷ்டராய -உன்னாலே படைக்கப் பட்டவர்களாய்
உன்னாலே -லப்த ஞானரான -ஞானத்தைப் பெற்றவர்களாயுள்ள-ப்ரஹ்மாதிகள் – பிரமன் முதலான தேவர்கள்,
‘ஈஸ்வரன் ’ என்று அறிந்து ஏத்த இருக்குமது விஸ்மயமோ -ஆச்சரியமோ!’ என்கிறார்.

மறையாய நால் வேதத்துள் நின்ற மலர்ச் சுடரே!
முறையால் இவ் வுலகு எல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்தளந்தாய்;
பிறை ஏறு சடையானும் நான்முகனும் இந்திரனும்
இறை யாதல் அறிந்து ஏத்த வீற்றிருத்தல் இது வியப்பே!–3-1-10-

மறையாய நால் வேதத்துள் நின்ற மலர்ச்சுடரே –
மறையாய -ஆதவ் வேதா பிரமாணம் ஸ்ம்ருதி ரூப குருதே ச இதிகாச ச புராண நியாயைஸ் சார்த்தம்
த்வத் அர்ச்சா விதி முபரி பரி ஷீயதே பூர்வ பாக ஊர்த்வ பாகஸ்த்வ தீஹா குண விபவ பரிஞ்ஞாப நைஸ் த்வத் பதாப்தவ்
வேத்யோ வேதச்ச சர்வைர் அஹமிதி பகவன் ஸ்வேநச வ்யாஸ கர்த்த —
பகவானே! வேதங்களானவை முதலிலே வேறொரு பிரமாணத்தை விரும்பாமலே தாமாகவே பிரமாணங்கள் ஆகின்றன;
மநு முதலான ஸ்மிருதிகளானவை இதிகாசங்களோடு கூடிய புராணங்களோடும் பூர்வ உத்தர மீமாம்சைகளோடும் கூடி
அந்த வேதங்கட்குப் பொருள் விவரணம் செய்வதில் உதவியாய் இருக்கின்றன;
வேதங்களில் முற்பகுதியானது தேவரீருடைய திருவாராதன முறைமையைச் சொல்லும் வகையில் முடிகின்றது;
பிற்பகுதியோ என்னில், தேவரீருடைய செயல்கள் குணங்கள் விபூதிகள் இவற்றை விளங்கத் தெரிவிப்பதனாலே
தேவரீருடைய திருவடிகளைச் சேர்வதில் முடிகின்றது;
‘எல்லா வேதங்களாலும் அறியப்படுகின்றவன் நானே!’ என்று தேவரீர் அருளிச்செய்ததுமுளது,’ என்றார் பட்டர்.

பாஹ்யராய் நாஸ்திகராயிருப்பார்க்குத் தன் படிகளை மறைக்கையாலே, ‘மறை’ என்றும்,
‘ஆஸ்திகராயிருப்பார்க்குத் தன் பொருளை வெளியிட்டுக் காட்டுகையாலே ‘வேதம்’ என்றும் இரண்டு படியாகச்
சொல்லப்படுதலின் ‘மறையாய நால்வேதம்’ என்கிறார்:
பூர்வ பாகம் – ஆராதன சொரூபத்தைச் சொல்லுகிறதாய்,
உபரிதன பாகம் – ஆராதிக்கப்படுகின்ற இறைவனுடைய சொரூபத்தைச் சொல்லுகிறதாய்,
’பூர்வபாகம் என்றும், உத்தரபாகம் என்றும் பிரிவுபட்டுள்ள-
வேதைச்ச சர்வைர் அஹமேவ வேத்ய- எல்லா வேதங்களாலும் நான் அறியப்படுபவன்,’ என்கிறபடியே,
எல்லா வேதங்களும் தன்னையே சொல்லும்படி
இருக்கையாலே உண்டான புகரையுடையவனாதலின் ‘உள் நின்ற மலர்ச்சுடரே’ என்கிறார்.

வேதங்களிலே சர்வாதிகனாகவும் நிரதிசய போக்யனாகவும் பிரகாசிக்கின்றவனே!

முறையால் இவ்வுலகெல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய் –
வேதங்கள் தான் ப்ரதிபாதிப்பது இவனுடைய ரக்ஷகத்வத்தை யாயிற்று –
ஸ்வாமித்வ ப்ராப்தியாலே -என்னுதல் / பர்யாயேண -என்னுதல் /
முறையால்’ என்றதற்குப் பொருள், ‘உடையவன் உடைமை என்ற சம்பந்தத்தால்’ என்னுதல்; ‘மாறி மாறி’ என்னுதல்.-என்றவாறு
கரண களேபர விதுரமாய் போக மோக்ஷ சூன்யமுமாய்க் கிடந்த அன்று இவற்றை உண்டாக்கி,
ஸ்ருஷ்டமான ஜகத்தைப் பிரளயங்கொள்ள மஹா வராஹமாய் இடந்து, திரிய பிரளயம் வர வயிற்றினுள்ளே வைத்து நோக்கி,
பின்னர் வெளிநாடு காண உமிழ்ந்து, மஹாபலி போல்வார் பருந்து இறாஞ்சினாற்போன்று அபஹரிக்க எல்லை நடந்து மீட்டு,
இப்படி சர்வ விதமான ரக்ஷணங்களையும் செய்தவனே! ‘
‘இதனை உபகாரமாகச் சொல்லுகிறது என்?விஷம ஸ்ருஷ்டிக்கு அடியான கர்ம விசேஷம் இறே சேதனர் பண்ணி வைப்பது
(-கர்மங்கட்குத் தகுதியாக அன்றோ பல படியாகப் படைத்தல் இருப்பது?’ எனில், படைத்தல் கர்மங்களைக் கடாக்ஷித்தேயாகிலும் )
ஒவ்கபத்யம்- ஒரே காலத்தில் ஒரு சேரப்படைத்தல்- அநுக்கிரகத்தின் காரியம்.

பிறை யேறு சடையானும் நான்முகனும் இந்திரனும் இறையாதல் அறிந்து ஏத்த வீற்றிருத்தல் இது வியப்பே –
ஜடை கழற்றாமல் சாதக வேஷத்தோடேயிருந்தும், கலா மாத்திரமான சந்திரனைத் தரித்துக்கொண்டு ஸூகத்தையே
பிரதானமாகக் கொண்டுள்ள முதன்மை பெற்றவனாயிருக்கிற ருத்ரனும் ,
அவனுக்குங்கூட ஜனகனான சதுர்முகனும் , இவர்களோடு ஒக்க எண்ணலாம்படியிருக்கிற இந்திரனும்,
நீ ஸ்வாமியான முறையறிந்துஏத்த, அதனாலே உன்னுடைய வ்யாவ்ருத்தி – வேறுபாடு தோன்ற இருந்தாய் என்றால் இது உனக்கு ஆச்சரியமோ!
அதாவது, ஒருவன் ஒரு குழமணனைச் செய்து அதன் கழுத்திலே காக்கைப் பொன்னைத் தொற்றி
அதன் தலையிலே காலை வைத்து, ‘இது என்னை வணங்கிற்று’ என்று இறுமாந்திருக்குமாறு போன்று,
’நன்மைப்புனல் பண்ணி நான்முகனைப் பண்ணி’ என்கிறபடியே, உன்னாலே மனையப்பட்ட பிரமனும்,
அவனாலே -ஸ்ருஷ்டரான -உண்டாக்கப்பட்ட இவர்களும் உன்னையேத்த,
அதனாலே இறுமாந்திருந்தாயென்றால் அது உனக்கு ஏற்றமோ!
ஹாஸ்யமாய் நகையாய்-தலைக்கட்டும் – முடியுமத்தனையன்றோ!’

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: