ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -3-1-9-

பேச வொண்ணாதது மேன்மைதானோ? நீர்மையும் பேச்சுக்கு நிலமன்று,’ என்கிறார்.

மழுங்காத வைந்நுதிய சக்கர நல் வலத்தையாய்த்
தொழுங்காதல் களிறு அளிப்பான் புள் ஊர்ந்து தோன்றினையே!
மழுங்காத ஞானமே படையாக மலர் உலகில்
தொழும்பாயார்க்கு அளித்தால் உன் சுடர்ச்சோதி மறையாதே?–3-1-9-

மழுங்காத வை நுதிய சக்கர நல் வலத்தையாய் –
மழுங்குதலில்லாத கூரிய முனையையுடைய திருவாழியை ’வடிவார் சோதி வலத்துறையும் சுடராழி’ என்கிறபடியே,
வலவருகே உடையையாய்.
சத்ரு சரீரங்களிலே படப்படச் சாணையிலே இட்டால் போல புகர் பெற்று வருமாதலின், ‘மழுங்காத வைந்நுதிய’ என்கிறார்.

நல் வலத்தையாய்த் தொழுங்காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே –
‘ஆர்த்த நாதம் -துன்பப்பட்டவனுடைய துன்ப ஒலி செவிப்பட்டவாறே தன்னை மறந்தான்;
கையில் திருவாழியிருந்தது அறிந்திலன்;
அறிந்தானாகில், இருந்தவிடத்தேயிருந்து அதனை யேவிக் காரியம் கொண்டிருப்பான்,’ என்பார்,
‘வலத்தையாய்த் தோன்றினையே’ என்கிறார்.

‘அறிந்தாலும் இருந்தவிடத்தேயிருந்து துக்கத்தைப் போக்கவொண்ணாது,’ என்பார்,
‘தொழுங் காதற்களிறு’ என்கிறார்.

கையும் திருவாழியுமான அழகு காண ஆசைப்பட்டிருக்கும் களிறு ஆதலின், ‘காதல் களிறு’ என்கிறார்.
’சதுர்த்தந்தி’ என்னுமாறு போன்று, காதல் இதற்கு நிரூபகமாக இருக்கிறபடி.

இதன் கையில் பூ செவ்லியழியாமல் திருவடிகளில் இடுவித்துக்கொண்டானாதலின் ‘அளிப்பான்’ என்கிறார்.

திருவடியின் வேகம் நினைவிற்கும் முற்பட்டாயிற்று இருப்பது;
அவன் வேகமும் போராமல் அவனையும் இடுக்கிக்கொண்டு வந்து விழுந்தானாதலின், ‘புள் ஊர்ந்து தோன்றினை’ என்கிறார்.
இடர்ப்பட்டார் தாமாகத் தமக்குத் தோன்றியது போன்றிருத்தலின், ‘தோன்றினையே’ என்கிறார்.

மழுங்காத ஞானமே படையாகத் தோன்றினையே-
இதனால், ‘திருவாழியைக் காட்டிலும் மிக அண்மையிலிருக்கிற சங்கல்ப ரூப ஞானத்தையோ நினைத்தது,’ என்கிறார்.

மழுங்காத ஞானமே படையாக –
பலப்பல காரியங்களிலே ஏவா நின்றாலும் மழுங்குதல் இல்லாமல் புகர் பெற்று வருகின்ற சங்கல்ப ரூப ஞானமே கருவியாக.

மலர் உலகில் தொழும்பாயார்க்கு –
திருநாபிக் கமலத்தை அடியாகவுடைத்தான இவ்வுலகத்தில் -சேஷபூதரானவருக்கு -அடியரானார்க்கு.-
அளித்தால் உன் சுடர் சோதி மறையாதே –
இருந்தவிடத்தேயிருந்து சங்கல்ப ரூப ஞானத்தாலே பாதுகாத்தாயாகில், ‘யானை இடர்ப்பட்ட மடுவின் கரையிலே
அரை குலையத் தலை குலைய உணர்த்தி அற்று வந்து விழுந்தான்,’ என்கிற நிரவதிக தேஜஸ்ஸானது இழந்ததேயன்றோ!
சிற்றாட்கொண்டான் என்பார், ‘மறையாதே’ என்பதற்கு ‘மறையும் மறையும்’ என்று அருளிச் செய்வர்.

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: