ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -3-1-8-

கீழ் பாசுரத்தில், ருத்ரன் தொடக்கமானார் ஏத்தமாட்டார்கள் என்றார்;
இப்பாசுரத்தில், ‘அவன் தனக்கும் கூட ஜனகனான பிரமன் ஸ்துதித்தாலும் அதுவும்
உனக்கு அவத்யமாம் ’ என்கிறார் என்பாருமுளர்.
‘அவனையும் கீழ் பாசுரத்திலே அருளிச்செய்தாராய், இப்பாசுரத்தில் உபய பாவனையுமுடைய அப்பிரமனைப் போலன்றிக்
கேவலம் பிரஹ்ம பாவனையேயாய் இருப்பான் ஒரு பிரஹ்மாவை-உத்ப்ரேஷித்து – கற்பித்து,
அத்தகைய பிரமன் ஏத்தினாலும்
தேவர்க்கு அவத்யமாம் இத்தனை யன்றோ?’ என்கிறார் என்று பட்டர் அருளிச் செய்வர்.

மாசூணாச் சுடர் உடம்பாய் மலராது குவியாது
மாசூணா ஞானமாய் முழுதுமாய் முழுது இயன்றாய்
மாசூணா வான் கோலத்து அமர ர்கோன் வழிப்பட்டால்
மாசூணா உன பாத மலர்ச் சோதி மழுங்காதே?–3-1-8-

மாசு உண்ணாச் சுடர் உடம்பாய் –
ஹேயப் பிரத்யநீகமாய்ச் சுத்த சத்வமாகையாலே நிரவதிக தேஜோ ரூபமான – பேரொளி உருவமான –
திவ்ய விக்கிரகத்தையுடையையாய்.

மலராது குவியாது –
’அரும்பினை அலரை’ என்னும்படியாயிருக்கும்;
அதாவது, ‘யுவாகுமார:’ என்கிறபடியே ஏக – ஒரே காலத்தில் இரண்டு-அவஸ்தையும் – நிலையும் சொல்லலாயிருக்கை.
இனி, ‘மலராது குவியாது’ என்பதற்கு,
சதைக ரூப ரூபாய -’தன் சொரூபத்திற்குத் துல்லியமான ஒரே தன்மையையுடைய திவ்விய மங்கள விக்கிரகத்தையுடையவன்’ என்கிறபடியே,
ஷய – குறைதல் -விருத்திகள் -வளர்தலின்றி இருக்கின்ற திருமேனியையுடையையாய்’ என்று பொருள் கூறலுமாம்.

மாசு உண்ணா ஞானமாய் –
ஒரு ஹேதுவாலே காரணத்தாலே மாசு ஏறக் கூடியதல்லாத ஞானத்தையுடையையாய்.
‘மலராது குவியாது’ என்பதனை இடைநிலைத் தீவகமாக இதற்கும் கூட்டுக.
ஆக, ‘உலக மக்கள் கர்மம் நிபந்தனமாக -காரணமாக-பரிக்ரஹித்த – மேற்கண்ட சரீரங்கட்கு வரக்கூடிய –
ஸ்வரூப அந்யதா பாவம் -வேறுபட்ட தன்மையுமில்லை இவன் திருமேனிக்கு;
அவர்கள் ஞானத்துக்கு வரக்கூடியதான ஸ்வபாவ அந்யதா பாவமும் -வேறுபாட்டுத் தன்மையுமில்லை இவனுடைய ஞானத்துக்கு,’ என்கை.

முழுதுமாய் –
அனுக்தமான -சொல்லப்படாத மற்றைக் குணங்களை யுடையையாய்.
இனி, இதற்கு,ஜகச் சரீரமாய் ‘உலகமே உருவமாக நிற்கும் நிலை’ என்று பொருள் கூறலுமாம்.

முழுது இயன்றாய் –
எல்லாவற்றையும் நிர்வஹித்தாய். இது, கீழ் ‘வரம்பின்றி முழுதியன்றாய்’ என்றதன் அநுவாதம்.

மாசு உண்ணா வான் கோலத்து அமரர்கோன் வழிப்பட்டால் மாசு உண்ணா உன பாதமலர்ச் சோதி மழுங்காதே –
திரோதான ஹேது -மறதி முதலிய காரணங்கள் -இல்லாத ஞான முதலான பூஷணங்களை -ஆபரணங்களை யுடையான்
ஓர் அமரர் கோனை உண்டாக்குவது, அப்படி யுண்டாக்கப்பட்ட அமரர் கோன் தான் உன்னை ஸ்துதி செய்தால்,
ஒரு சம்சர்க்கத்தாலே சேர்க்கையினாலே மாசு உண்ணக் கூடியதல்லாத உன் திருவடிகளின் பேரொளியானது,
‘இவன் ஏத்தும் அளவே இத்திருவடிகள்’ என்று மழுங்காதோ!
‘மாசூணா வான்கோலத்து அமரர்கோன்’ என்றதனால் உத்ப்ரேஷிதனான -கற்பிக்கப்பட்ட பிரமன் என்பது போதரும்.
‘எவ்வாறு?’ எனில், இப்பொழுதுள்ள பிரமனுக்குத் தனது அதிகாரத்தின் முடிவிலே ஞானத்துக்கு திரோதானம் -மறைப்பு உண்டு;
இவனுக்கு அது இல்லை என்று கூறப்படுதலின். வழிபடுதற்கு உறுப்பாகச் சொல்லப்படுகின்ற இடமாதலின்,
‘கோலம்’ என்பது ஈண்டு வழிபடுதற்கு உறுப்பான ஞானத்தைக் காட்டுகின்றது.
சதுர்முகாயு இத்யாதி -‘பிரமனுடைய ஆயுளை யுடையவனும் கோடிக்கணக்கான முகத்தையுடையவனும்
மிகவும் சுத்தமான மனத்தையுடையவனுமான ஒரு மனிதன் இருப்பானேயானால், அவன், உம்முடைய குணங்களில்
பதினாயிரத்தில் ஒரு பகுதியைச் சொல்லுவானோ, சொல்லமாட்டானோ அறிகிலோம்!’ என்பது வராஹ புராணம்.
ஆக, ‘அப்படிப்பட்ட அமரர் கோன் உன்னை ஸ்துதி செய்தால், அவனும் அடிக்கு அழிவு செய்தானாய் விடுமித்தனை,’ என்றபடி.
(அடிக்கு அழிவு – மூலஹாநி, திருவடிகட்குத் தாழ்வு; சிலேடை. )
‘அவன் அடியறிந்து மங்களாசாசனம் பண்ணுவார் ஆழ்வார்களே யாவர்,’ என்றபடி.
தம்முடைய சேஷத்துவத்திற்குத் தகுதியாக, ‘உன் திருமேனி’ என்னாது ‘உனபாதம்’ என்கிறார்.

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: