ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -3-1-5-

மூன்றாம் பாட்டுக்கும் இப்பாட்டுக்கும் நேரே சங்கதி.
நான்காம் பாட்டில் நாட்டாருடைய இழவு நடுவே பிரசங்காத் பிரஸ்துதமித்தனை.
‘கோவிந்தா’ பண்புரைக்க மாட்டேனே,’ என்று சொல்லுவான் என்?
நாட்டாருடைய பேரிழவு நிற்க; மயர்வற மதிநலம் அருளப்பெறுகையாலே நீர் வேறுபட்டவரே;
உலகத்தாரில் வேறுபட்ட அளவேயோ! விண்ணுளாரிலும் -வ்யாவருத்தர் இ றே -வேறுபட்டவரே;
ஆதலால், நீர் நம்மைப் பேசமாட்டீரோ?’ என்ன,
‘என்னை எல்லாரிலும் வேறு பட்டவனாக்கினாயித்தனை அல்லது உன்னை
ஓர் சாவதி ஆக்கிற்று இலையே- எல்லைக்குட்பட்டவனாக்கினாய் இல்லையே!’ என்கிறார்
(வரம்பின்றி முழுதியன்றாய்’ என்றதனைக் கடாக்ஷித்து ‘உன்னை ஓர்
எல்லைக்குட்பட்டவனாயில்லையே!’ என்கிறார்.)

வருந்தாத அருந் தவத்த மலர்கதிரின் சுடர் உடம்பாய்
வருந்தாத ஞானமாய் வரம்பு இன்றி முழுது இயன்றாய்;
வருங்காலம் நிகழ் காலம் கழி காலமாய் உலகை
ஒருங்காக அளிப்பாய் சீர் எங்கு உலக்க ஓதுவனே?–3-1-5-

வருந்தாத வருந் தவத்த மலர்கதிரின் சுடர் உடம்பாய் –
‘இவ் வடிவழகினை என்னால் தான் பேசலாயிருந்ததோ?’ என்கிறார்.
ஸ்வாபாவிகமாய் வருவதாய், மிகவும் விகசித -மலர்ந்த கிரணங்களையுடைய தேஜோ ரூபமாய். தவ – மிகுதி.
இனி, வருந்தாத அருந்தவத்த என்பதற்கு, ‘திருமேனியைக் கண்டவாறே அரிய தவத்தின் பலமோ?’ என்று தோன்றும்;
சிறிது மூழ்கிக் கண்டவாறே, ‘ஒரு தவத்தின் பலமன்று; ஸஹஜமான பாக்கியத்தின் பலம்,’ என்று தோன்றும் என்று பொருள் கூறலுமாம்.
முன்னைய பொருளில், ‘வரும் தவத்த’ என்றும்,
இப்பொருளில், ‘அருந்தவத்த’ என்றும் பதங்களைப் பிரித்துக்கொள்க.
மலர்ந்த கிரணங்களையுடைய ஒளியுருவமாய், அதுதன்னில் மண் பற்றைக் கழித்து,
ராக்ஷஸ தாமஸ தங்கள் கலத்தலின்றிச் சுத்த சத்வமயமாய், நிரவதிகப் பேரொளி யுருவாய்,
ஆத்ம குணங்களுக்கும் பிரகாசகமான திவ்ய விக்கிரகத்தையுடையவனாதலின், ‘மலர் கதிரின் சுடர் உடம்பாய்’ என்கிறார்.
‘ஆயின், குணங்கள் பிரகாசிப்பதற்குக் காரணம் என்னை?’ எனின்,
கர்மங்கள் காரணமாக வருகின்ற சரீரங்கள் போலன்றே,
இச்சா க்ருஹீதமான- இச்சையினாலே மேற்கொள்ளப்படுகின்ற சரீரம் இருப்பது? என்றது,
நம்மைப் போன்றவர்களுடைய சரீரங்கள் பாபத்தாலேயாயிருப்பன சிலவும்,
புண்ணியத்தாலேயாய் இருப்பன சிலவும், புண்ணிய பாவங்களாலேயாயிருத்தல் சிலவுமாக இருப்பனவாமன்றோ?
எங்கும் நிறைந்தவனாய் உலகமே உருவனாயிருக்கிற இறைவன் சரீரத்தை மேற்கொள்ளுவது
‘நாகாரணாத் காரணாத்வா காரணா காரணாந்நச
ஸரீர க்ரஹணம் வ்யாபிந் தர்மத்ராணாய கேவலம்.’–ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 1 : 50-

இச்சுலோகத்தில் ‘அகாரணம்’ என்றது, காரியத்தை; ‘காரணம் என்றது, மூலப்பிரகிருதியை;
‘காரணாகாரணம்’ என்றது, மகத்து முதலான தத்துவங்களை-
அன்றிக்கே -ஸூக சரீரமோ -துக்க சரீரமோ -உபயத்தாலுமான சரீரமோ -கம் ஸூ கம் / அகம் -துக்கம் /
துக்கம் காரணமோ -ஸூ கம் காரணமோ -ஸூக துக்கங்கள் இரண்டும் காரணமோ என்னில் இவை அத்தனையும் அன்று –
ஸரீர க்ரஹணம் வ்யாபிந் –சர்வகதனாய்-ஜகத் சரீரனாய் இருக்கிற நீ சரீர கிரஹணம் பண்ணுகிறது
தர்மத்ராணாய கேவலம்-‘காண வாராய்’ என்று விடாய்த்திருப்பார் கண்டு அனுபவிக்கைக்குத் தண்ணீர்ப் பந்தல் வைத்தபடியேயாம் என்றபடி.
ந ச ஆகார பக்தானாம் – தேவரீருடைய திவ்விய மங்கள விக்கிரகமும் தேவரீருக்கன்று;
தேவர் அடியர்களுக்காகவே பிரகாசிக்கின்றீர்,’ என வருதல் காண்க.

வருந்தாத ஞானமாய் –
ஒரு-சாதனா அனுஷ்டானத்தாலே யாதல்
மயர்வற மதிநலம் அருளப்பெற்றாதல் வந்ததன்றி,
ஸ்வதஸ் ஸர்வஜ்ஞனாய்.

வரம்பின்றி முழுது இயன்றாய் –
வரம்பு -எல்லையில்லாத எல்லாப் பொருள்களையும் நிர்வஹித்தாய். இயலுகை – நிர்வஹிக்கை.
‘உடையவனாதலின் உடைமையை நிர்வஹிக்கிறான்,’ என்றபடி. உடையவனாய்க் கடக்க நிற்கையன்றி நோக்கும்படி சொல்லுகிறார்

வருங்காலம் நிகழ்காலம் கழிகாலமாய் உலகை ஒருங்காக அளிப்பாய் சீர் எங்கு உலக்க ஓதுவன் –
காலத் த்ரயத்துக்கும் ‘முக்காலத்திற்கும் நிர்வாஹகனாய் உலகங்களை ஒருபடிப்பட ரஷித்துக் கொண்டு செல்லுகிற
உன்னுடைய கல்யாண குணங்களை என்னாலே முடியச் சொல்லித் தலைக்கட்டலாயிருந்ததோ? இல்லை,’ என்றபடி.
‘உன்னுடைய திவ்விய மங்கள விக்கிரகத்தின் வைலக்ஷண்யம் அது;
எல்லாப்பொருள்களையும்-யுகபத்-சாஷாத்கார சமர்த்தனாய் -ஒரே காலத்தில் காட்சிக்கு இலக்கு ஆக்கும்
ஆற்றலுடையவனாயிருக்கிற இருப்பு அது;
ரக்ஷகத்வம் அது;
ஏதென்று பேசித் தலைக்கட்டுவன்?’ என்கிறார்.

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: