ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -3-1-4-

மேற்பாசுரத்தில், தாம் ‘உரைக்க மாட்டேன்’ என்றார்;
இவனுடைய போக்யதாதிசயம் இருந்தபடியால் சிலராலே கிட்டலாயிருந்ததில்லை;
இனி சம்சாரிகள் இழந்து நோவுபட்டுப் போமித்தனையன்றோ என்று
அழகருடைய அழகின் மிகுதி இவரைப் பேசுவிக்கப் பேசுகிறார்.

மாட்டாதே ஆகிலும் இம் மலர் தலை மா ஞாலம் நின்
மாட்டு ஆய மலர் புரையும் திரு வுருவம் மனம் வைக்க
மாட்டாத பல சமய மதி கொடுத்தாய்; மலர்த் துழாய்
மாட்டே நீ மனம் வைத்தாய்; மா ஞாலம் வருந்தாதே?–3-1-4-

இம் மலர்தலை மாஞாலம் நின்மாட்டாய மலர்புரையும் திரு உருவம் மனம் வைக்க மாட்டாதேயாகிலும் –
திருநாபிக் கமலத்தை அடியாக வுடைத்தான இப் பெரிய உலகமானது உன்னுடைய நிதி போலச் ஸ்லாக்கியமாய்
மலர்ந்த புஷ்பத்தினுடைய ஸூகுமாரமாயிருந்துள்ள திருமேனியிலே நெஞ்சை வைக்க மாட்டாதே யாகிலும்.
ஆகிலும் -என்றது மாட்டாதே இருக்கச் செய்தேயும் என்றபடி –
‘உலகம் மாட்டாமைக்குக் காரணம், -ஸ்ருஜ்யத்வ -படைக்கப்படுதல், கர்ம வஸ்யத்வங்கள் -கர்மங்கட்குக் கட்டுப்பட்டிருத்தல்’ என்பார்,
‘இம் மலர்தலை மாஞாலம்’ என்கிறார்.
மாடு – செல்வம். மாடு என்பது மாட்டு எனத் தன்னொற்று மிக்கது.
இனி, ‘நின் மாட்டாய’ என்பதற்கு ‘உன்னிடத்திலேயான’ என்று பொருள் கூறலுமாம்.
முதற்பொருளில் மாடு என்பது பெயர்ச்சொல்;
இரண்டாவது பொருளில் உருபிடைச்சொல்.
இனி, ‘மாட்டாய’ என்பதனை ‘மட்டு ஆய’ என்ற சொல்லின் நீட்டல் விகாரமாகக் கொண்டு,
மத்வ உத்ஸ -திருவடிகளில் தேனினுடைய வெள்ளம் பெருகுகிறது,’ என்கிறபடியே,
மதுஸ்யந்தி -தேனின் பெருக்குப் பெருகுகிறது ஆகையாலே,
நிரதிசய போக்யமான திருமேனி என்று பொருள் கூறலும் ஒன்று. மட்டு-தேன்.
அதாவது, ‘கர்மம் காரணமாகப் படைக்கப்பட்ட சேதநர்கட்குக் கர்ம சம்பந்தமற்றால் அனுபவிக்கும் உன் திருமேனியிலே
நெஞ்சை வைக்க முடியாதன்றோ?
ஆதலால், இதுதானே போரும் கேடு; இக்கேட்டிற்கு மேலே,’ என்றபடி.

நின் திருவுருவம் மனம் வைக்க மாட்டாத பல சமய மதி கொடுத்தாய் –
உன் திருமேனியிலே மனத்தை வைக்க மாட்டாதவையாய்,
அவைதாம் பலவாய் இருக்கின்ற சமயமுண்டு –மதாந்தரங்கள் – வேறு மதங்கள்;
அவற்றின் பக்கலிலே மனத்தை வைக்கப் பண்ணினாய்.
இதற்கு, ‘உன் திருமேனியிலே மனத்தை வைக்கவொண்ணாதபடி புறமான பல சமய மதி பேதங்களையும்
செய்துவைத்தாய்,’ என்று பொருள் கூறலுமாம்;
திரு உருவம் மனம் வைக்க -என்ற இடம் கீழும் மேலும் இரண்டு இடங்களிலும் அன்வயித்து பொருள் –
அதாவது, ‘பண்டே உன்னை யறியாத சம்சாரிகளுக்கு மதி பேதங்களை உண்டாக்கினாய்,’ என்றபடி.
இவையித்தனையும்-அஸத் ஸமமாம் – பயனற்றுப் போமன்றோ, நீதான் இவற்றுக்கு வந்து கிட்டலாம்படி இருந்தாயாகில்?

மலர்த்துழாய் மட்டேநீ மனம் வைத்தாய் –
‘உன் திருவுள்ளத்தையும் கால் தாழப் பண்ணவல்ல திருத் துழாய் தொடக்கமான போக்ய ஜாதத்திலே திரு வுள்ளத்தை வைத்தாய்.
இதனால், உன்னுடைய போக்கியதை சிலரால் கிட்டலாய் இருந்ததோ?’ என்கிறார்.
மாடு என்கிற இத்தை மாட்டு என்று கிடக்கிறதாய் -மாடு – இடம்; ‘அதன் பக்கல்’ என்றபடி.

மா ஞாலம் வருந்தாதே –
‘இப்பெரிய பூவுலகமானது-மஹா பிருத்வியானது – இங்ஙனம் நோவுபட்டுப் போமித்தனையேயோ!’ என்கிறார்.
கர்ம வசியராகையாலே -கர்மங்கட்குக் கட்டுப்பட்டவர்களாகையாலே, அவர்களாகவே உன் பக்கல் மனத்தினை வைக்க மாட்டிற்றிலர்;
அதற்கு மேலே நீ பல விலக்கடிகளையும் உண்டாக்கி வைத்தாய்;
நீயோ,நிரதிசய போக்ய ஜாதத்திலே பிரவணன் ஆனாய்;
உன்னை விட்டால், பின்னை புத்தி நாஸாத் ப்ரணச்யதி ’நினைவு தவறுவதால் புத்தி நாசமடைகிறது;
புத்தி நாசத்தினால் நாசமடைகின்றான்,’ என்கிறபடியே
‘புத்தி நாசமடைவதற்குரிய பொருள்களில் -விஷயங்களில் -இவர்கள் பிரவணர்களாய்
இங்ஙனம் நோவுபட்டே போமித்தனையாகாதே!’ என்கிறார்-

பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம் விரி கமல உந்தி யுடை விண்ணவனை- சிலப்பதிகாரம்.

வணங்கும் துறைகள் பலபல வாக்கி மதி விகற்பால்
பிணங்கும் சமயம் பலபல வாக்கி அவை அவை தோறு
அணங்கும் பலபல வாக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
இணங்கு நின்னோரை இல்லாய்! நின் கண் வேட்கை எழுவிப்பனே.’ திருவிருத்தம்

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: