ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -3-1-3-

’நம் பக்கல் முதல் அடியிடாத லௌகிகரை உலகத்தாரை விடும்;
உலகத்தாருக்கு வ்யவருத்தரே- வேறுபட்டவரான நீர் பேசினாலோ?’ என்ன,
‘என்னாலேதான் பேசப்போமோ?’ என்கிறார்.

பரஞ்சோதி நீ பரமாய் நின் இகழ்ந்து பின் மற்று ஓர்
பரஞ்சோதி இன்மையின் படி ஓவி நிகழ்கின்ற
பரஞ்சோதி நின்னுள்ளே படர் உலகம் படைத்த எம்
பரஞ்சோதி! கோவிந்தா! பண்பு உரைக்க மாட்டேனே–3-1-3-

பரமாய்ப் பரஞ்சோதி நீ –
பரமாய்க்கொண்டு -பரஞ்சோதி -மேலான ஒளி உருவனாயிருக்கின்றாய் நீ.
வடிவழகிலேயாதல் செல்வத்திலேயாதல் அல்பம் -சிறிது ஏற்றமுடையான் ஒருவனைக் கண்டால்,
‘உன் தனை தேஜஸ்ஸூ யுடையான் ஒருவனில்லை;
உன் தனைச் செல்வமுடையான் ஒருவனில்லை,’ என்பர்களன்றோ?
அங்ஙனன்றி, ‘இனி ஒரு வியக்தியில்- வடிவில் அவையில்லை’ என்னும்படி பூர்ணமாக உள்ளது
இவன் பக்கலிலேயாதலின், ‘பரமாய்ப் பரஞ்சோதி’ என்கிறார்.
தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி ’அந்தப் பரப்பிரஹ்மத்தினுடைய பேரொளியால் இவையெல்லாம்
பிரகாசிக்கின்றன,’ என்பது கடோபநிஷதமாகும்.

நின் இகழ்ந்து பின் மற்றோர் பரஞ்சோதி இன்மையின் படி ஓவி நிகழ்கின்ற பரஞ்சோதி நீ –
உன்னையொழிய வேறொரு பரஞ்ஜோதிஸ்ஸூ – மேலான ஒளிப்பொருள் இல்லாமையாலே
உபமான ரஹிதனாய் – அற்றவனாய் கொண்டு வர்த்தியா நின்றுள்ள நடக்கின்ற-பரஞ்ஜோதிஸ் – மேலான பேரொளி உருவன் நீ.
உலகத்தில் ஒருவனோடு ஒத்தாரும் ஒருவனோடு மேற்பட்டாரும் பலர் இருக்கவும்,
ஒருவரைப் பார்த்து ‘உனக்கு சமராதல் -ஒத்தாராதல் மிக்காராதல் உளரோ?’ என்பர்களன்றோ?
அங்ஙனல்லன் இவன்’ என்பார்,
‘நின் இகழ்ந்து பின் மற்றோர் பரஞ்சோதி இன்மையின் படி ஓவி நிகழ் நின்ற பரஞ்சோதி நீ,’ என்கிறார்.

நின்னுள்ளே படர் உலகம் படைத்த எம் பரஞ்சோதி –
உன்னுடைய சங்கல்பத்தின் -லேசத்திலே -மிகச்சிறியதொரு கூற்றிலே -கார்யாகாரமாய்க் கொண்டு
காரியத்தின் உருவமாகி-விஸ்த்ருதமாகா – விரிந்து நின்றுள்ள உலகங்களை எல்லாம் உண்டாக்கின எம் பரஞ்சோதி.
‘தனக்குங்கூட உரியன் அல்லாதான் ஒருவனை, ‘நீயேயன்றோ நாட்டுக்கெல்லாம் உரியவன்?’ என்று கூறுவர்களன்றே?
அங்ஙனல்லன் இவன்,’ என்பார், ‘நின்னுள்ளே படருலகம் படைத்த எம் பரஞ்சோதி’ என்கிறார்.
இனி, இதற்கு,புத்ரஸ்தே ஜாத ‘உனக்கு மகன் பிறந்தான்’ என்னுமாறு போன்று,
உலகங்களை யுண்டாக்கின பின்னர்த் திருமேனியிலே பிறந்த புகரையுடையவன் என்றுமாம்.
ஆக, ஸ்வாபாவிகமான மேன்மை அது;
காரணத்வ ப்ரயுக்தமான -காரணனாயுள்ள தன்மையால் வந்த புகர் இது;
இப்படியிருக்கிற மேன்மையை எல்லை காணிலும், நீர்மை தரை காண ஒண்ணாததாயிருக்கிறதே!’ என்கிறார் மேல்:

கோவிந்தா பண்பு உரைக்க மாட்டேன் –
பண்பு – உன்னுடைய பிரகாரம்-
உன்னுடைய தன்மையை என்னால் சொல்லப் போகாது; அனுபவித்துப்போமித்தனை.
‘கோவிந்தா’ என்றதனால் அவனுடைய சௌலப்யம் தோற்றுகின்றது.
‘ஏன் சொல்லப்போகாது?’ எனின்,
’நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்,’ என்கிறபடியே,
நெஞ்சால் நினைக்க ஒண்ணாதது சொல்லத் தான் போகாது இறே-

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: