ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -3-1-2-

அழகருடைய ஸுந்தர்யத்துக்கு- அழகிற்கு-சத்ருசம் – ஒப்பு இல்லாமையாலே
உலகத்தார் செய்யும் துதிகள் அங்குத்தைக்கு-அவத்யமாம் – தாழ்வேயாமித்தனை,’ என்கிறார்.

கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா;
சுட்டுரைத்த நன் பொன் உன் திரு மேனி ஒளி ஒவ்வாது;
ஒட்டுரைத்து இவ் உலகுன்னைப் புகழ்வு எல்லாம் பெரும்பாலும்
பட்டுரையாய்ப் புற்கு என்றே காட்டுமால் பரஞ்சோதீ!–3-1-2-

கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா –
‘சொல்லில், தாமரைச் ஜாதியாக உன்னுடைய திருக்கண்களுக்கும் திருவடிகளுக்கும் திருக்கைகளுக்கும் ஒப்பாக மாட்டாது.
அனுபவித்துக் குமிழி நீர் உண்டு போம் இத்துணையே அன்றிச் சொல்லப் போகாது,’ என்பார், ‘கட்டுரைக்கில்’ என்கிறார்.
கட்டுரைக்கில் – கட்டுரை என்பது ஒரு சொல்.
‘தாமரை ஜாதியாக ஒப்பாக மாட்டாது,’ என்பார்,
‘தனித்தனியே ஒவ்வோர் வியக்திக்கும் -கூட ஒப்பாகமாட்டாது’ என்பார்,
‘கண் பாதம் கை’ எனத் தனித் தனியாக பிரித்தும் அருளிச்செய்கிறார்.
‘ஆயின், பாதாதி கேசமாகக் கூறாது, ‘கண் பாதம் கை’ எனக் கூறல் யாது கருதி?’ எனின்,
குளிர நோக்குவன கண்கள்; நோக்கிற்குத் தோற்று விழுமிடம் திருவடிகள்; விழுந்தவனை எடுத்து அணைப்பன திருக்கைகள்.
ஆதலின், இம்முறையே ஓதுகிறார்.
இனி, ந சாஸ்திரம் நைவ ச க்ரம- ‘மேம்பட்ட பத்தியையுடையவனுக்குச் சாஸ்திரமும் இல்லை, முறையும் இல்லை,’ என்பவாகலின்,
பிரபத்தி நிஷ்டரான இவர் திருவாயிலும் அம்முறை கெட வருகின்றன-
இனி, கீழ் திருப்பாசுரத்தில், முடிச்சோதி அடிச்சோதி கடிச்சோதிகளை அனுபவித்தார்;
இவர் அனுபவத்துக்குப் பாசுரமிட்டுச் சொல்லுவார் ஒருவராகையாலே,
அனுபவித்த அம்முறையே ‘கண் பாதம் கை’ என்று இத்திருப்பாசுரத்தில் அருளிச்செய்கிறார் என்றுமாம் – ‘
நின் கண்’ என்கையாலே, ‘உனது முகச் சோதி’ என்றதனை நினைக்கிறது;
‘பாதம்’ என்கையாலே ‘அடிச் சோதி’ என்றதனை நினைக்கின்றது;
‘கை’ என்றதனால், ‘கடிச் சோதியை’ நினைக்கின்றது.
ஈண்டுக் ’கை’ என்றது, நடு அனுபவித்த அழகுக்கு உபலக்ஷணம்.

சுட்டு உரைத்த நன்பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது –
காய்ச்சி ஓடவைத்து உரைத்த நன்றான பொன்னானது உன்னுடைய ஸ்வபாவிகமான திவ்ய விக்கிரகத்தின் ஒளிக்கு ஒப்பாகாது.
சாதாரணமான பொன் உவமை சொல்லத் தக்கதன்றாதலின், ‘சுட்டு உரைத்த நன்’ என்று
மூன்று அடைகொடுத்து சிஷித்து அருளிச் செய்கிறார் –
இத்தனை அடை கொடுத்தாலாயிற்று ஒப்பாகச் சொல்லப் பாத்தம் போராதது;
ருக்மாபம் -‘பரம்பொருள் ஓடவைத்த பொன்னின் நிறமுடையவன்’ என்பது மநு ஸ்மிருதி.

ஒட்டு உரைத்து –
உனக்கு ஒப்பாகச்சொல்லி. /ஒட்டாவது – கூடுகை; /அதாவது – சேர்க்கை: ஒப்பாயிருத்தல்.

இவ்வுலகு –
காண்கிற இவற்றிற்கு மேற்பட அறியாத இவ்வுலகத்தார்-லௌகிகர்- .
‘இவ்வுலகத்திலுள்ள பொருள்களின் வைலக்ஷண்யமும் அறியாதவர்கள்’ எனலுமாம்.
மஞ்சா க்ரோஸந்தி ‘கட்டில் கத்துகிறது’ என்பது போன்று, ’இவ்வுலகு புகழ்வு’ என்கிறார்.

உன்னை –
ஸாஸ்த்ர ஏக சமைதி கம்யனாய் -சாஸ்திரங்களாலேயே அறியக் கூடியவனாய்,
அவை தாமும் புகழப்புக்கால், யாதோ வாசோ நிவர்த்தந்தே
’அந்த ஆனந்த குணத்தினின்றும் வாக்குகள் திரும்புகின்றனவோ?’ என்னும்படி மீளும்படியான உன்னை.

புகழ்வு எல்லாம் –
உள்ளதுஞ்சொல்லி,-இல்லாதவற்றை யெல்லாம் இட்டுக் கொண்டு சொல்லப்படுகின்றவையெல்லாம்.

பெரும்பாலும் –
மிகவும். ‘அனேகமாய்’ என்றபடி.

பட்டு உரையாய் –
பட்டது உரைக்கை,
‘நெஞ்சில் பட்டதைச் சொல்லுதல்:
விஷயத்தைப் பாராமல் -பிரதிபன்னத்தை- தோன்றியதைச் சொல்லுதல்’ என்றபடி.

புற்கென்றே காட்டும் –
புன்மையையே காட்டாநின்றது.
‘ஆயின், இவன் தோன்றியதைச் சொன்னானாய் விஷயத்தில் -ஸ்பர்சியாதே -தீண்டாமலே இருக்குமாகில்,
அங்குத்தைக்குப் புன்மையே காட்டும்படி என்?’ என்னில்,
இரத்தினத்தை அறியாதான் ஒருவன், ‘குருவிந்தக் கல்லோடு ஒக்கும் இது,’ என்றால்,
அவ்வளவே அன்றோ அவனுக்கு அதனிடத்தில் பிரதிபத்தி – மதிப்பு? அவ்வழியாலே அதற்குத் தாழ்வேயாகும்.
அப்படியே, இவன் பண்ணும் ஸ்துதிகள் இங்குத்தைக்குத் தாழ்வேயாக முடியும்.
இங்குத்தைக்குப் புன்மையாகக் காட்டுகைக்குக் காரணம் என்?’ என்னில்,

பரஞ்சோதீ –
நாராயண பரஞ்சோதி -’நாராயணன் மேலான ஒளியுருவன்’ என்கிறபடியே,
அவன்-சர்வ வஸ்து – எல்லாப் பொருள்கட்கும்-விசஜாதீயன் – வேறுபட்ட ஜாதியன் ஆகையாலே.

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: