ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -3-1-1-

மூன்றாம் பத்து -முதல் திருவாய்மொழி – ‘முடிச்சோதி’-பிரவேசம்

முதற்பத்தால், பகவத் கைங்கரியம் புருஷார்த்தம் என்று அறுதியிட்டார்:
இரண்டாம்பத்தால், அந்தக் கைங்கரியத்தில் களை அறுத்தார்:
களை அறுக்கப்பட்ட அந்தக் கைங்கரியமானது பாகவத சேஷத்துவ பர்யந்தமான
பகவத் கைங்கரியம் என்கிறார் இம்மூன்றாம் பத்தால்.

பொருளென்றிவ் வுலகம் படைத்தவன் புகழ்மேல் மருளில் வண்குருகூர் வண்சடகோபன்’ என்று
‘அவனுடைய கல்யாண குணவிஷயமாக அஞ்ஞானம் இல்லை’ என்றார் கீழில் திருவாய்மொழியில்:
அக்குணாதிக- அக் குணங்கள் நிறைந்திருக்கின்ற நற்குணக்கடலான – விஷயம் தன்னில்
ஓர் அஞ்ஞானம் அனுவர்த்திக்கிற -தொடரும் -படி சொல்லுகிறார் இத்திருவாய்மொழியில்.
‘ஆயின், இது முன்னர்க் கூறியதற்கு முரணாகாதோ?’ எனின்,
கீழ் கர்மங் காரணமாக வரக்கூடிய அஞ்ஞானம் இல்லை என்றார்;
இங்குத்தை அஞ்ஞானத்துக்கு அடி, விஷய வைலக்ஷண்யமாயிருக்கும்.
நித்ய ஸூரிகளுக்கும் உள்ளதொரு சம்சயமாகும் இது.

ஆங்கார வாரம் அது கேட்டு அழலுமிழும்
பூங்கார் அரவணையான் பொன்மேனி – யாங்காண
வல்லமே யல்லமே மா மலரான் வார் சடையான்
வல்லரே யல்லரே வாழ்த்து.’

ஸ்வரூப அனுபந்தியாய் -சொரூபத்திலே கட்டுப்பட்டதாயிருப்பதொரு -சம்சயமாகையாலே
சொரூபமுள்ளதனையும் நிற்பதொன்றேயன்றோ –
ஆகவே இந்த அஞ்ஞானம் தியாஜ்யம் அன்றே-இது? ஆதலின், முரணாகாது.

கீழே திருவாய்மொழியில், திருமலையை அனுபவித்துக் கொண்டு வந்தவர்,
‘வடமாமலையுச்சியை’ என்னுமாறு போன்று, திருமலையில்-ஏக தேசம் – ஒரு பகுதி என்னலாம்படியாய்,
கற்பகத்தரு பல கிளைகளாய்ப் பணைத்துப் பூத்தாற்போன்று நிற்கிற அழகருடைய
ஸுந்தர்யத்தை – அழகினை அனுபவிக்கிறார் இத்திருவாய்மொழியில்.
அனுபவிக்கிறவர், வேதங்களோடு வைதிக புருஷர்களோடு பிரமன் சிவன் முதலானவர்களோடு வேற்றுமையறத் –
ஸ்வ யத்னத்தால் -தம் முயற்சியால் காணுமன்று காணவொண்ணாதபடி இருக்கிற இருப்பையும்,
அவன் தானே கொடுவந்து காட்டுமன்று -ஜென்ம வ்ருத்தாதிகளால் -பிறப்புத் தொழில் முதலியவைகளால்
குறைய நின்றார்க்கும் காணலாயிருக்கிற இருப்பையும்-அனுசந்தித்து விஸ்மிதராகிறார் –

———————————-

அழகருடைய திவ்விய அவயவங்கட்கும் திரு அணிகலன்களுக்கும் உண்டான ஸூ கடிதத்வத்தை –
பொருத்தத்தின் மிகுதியைக் கண்டு விஸ்மிதராகிறார் ஆச்சரியப்படுகிறார்.

முடிச் சோதியாய் உனது முகச் சோதி மலர்ந்ததுவோ !
அடிச் சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ !
படிச் சோதி ஆடை யொடும் பல் கலனாய் நின் பைம்பொன்
கடிச் சோதி கலந்ததுவோ ! திருமாலே ! கட்டுரையே–3-1-1-

முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ –
உன்னுடைய திருமுகத்திலுண்டான தேஜஸ்ஸானது திருமுடியின் தேஜஸாய்க்கொண்டு விகசிதமாயிற்றோ- மலர்ந்ததுவோ!
உன்னுடைய திரு அபிஷேகத்தின் தேஜஸ்ஸானது திருமுகத்தின் தேஜஸாய்க் கொண்டு விகசிதமாயிற்றோ மலர்ந்ததுவோ!
என்றும் வரக்கடவது
சேஷபூதனுக்கு முற்படத்தோற்றுவது, தன்னுடைய சேஷத்துவத்திற்கு -பிரதிசம்பந்தியான -எதிர்த்தொடர்புடைய
இவனுடைய சேஷித்துவமேயாதலின், அச் சேஷித்துவத்திற்கு ப்ரகாசகமான திரு அபிஷேகத்தின் அழகை முன்னர் அனுபவிக்கிறார்.-
அது போர வீசிற்று –

அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ –
திருவடிகளின் தேஜஸ்ஸானது தேவர் நின்ற ஆசன பத்மமாய்க்கொண்டு -விகசிதமாயிற்றோ –
நீ நின்ற தாமரை அடிச்சோதியாய்க் கொண்டு விகசிதமாயிற்றோ
நீ நின்ற ஏக ரூபமானவனும் – ஒரே தன்மையனான இவனும் நீரிலே நின்றாற்போன்று
ஆதரித்து நிற்கின்றானாதலின், ‘நீ நின்ற’ என்கிறார்.
இவனுடைய சேஷித்துவத்திற்குப் பிரகாசமான திருமுடியின் அழகு திருவடிகளிலே போர வீசியது:
ஆதலின், திருமுடியின் அழகினை அனுபவித்தவர் அதனையடுத்துத் திருவடியின் அழகினையனுபவிக்கிறார்.
இது பிராப்யத்தினுடைய-சரம அவதி – முடிவு நிலமாதலின், அவ்வருகு போக்கில்லையே?
ஆதலின், திருவடிகளின் பேரொளியானது மேல் ஏறக் கொழித்தது.
கடலுக்குள் பட்டதொரு த்ருணம்-ஒரு துரும்பு ஒரு திரை ஒரு திரையிலே தள்ளக்கிடந்து அலையுமாறு போன்று,
ஓரழகு ஓரழகிலே தள்ளக் கிடந்து அனுபவிக்கிறார் இதில்.

‘படிச்சோதி பல்கலனாய்க் கலந்ததுவோ –
திருமேனியின் அழகு பல ஆபரணங்களாகிக் கலந்ததுவோ!
பல ஆபரணங்களின் அழகு திருமேனியின் அழகாய்க் கலந்ததுவோ!
படி – திருமேனி.

சோதியாடை, நின் பைம்பொன் கடிச்சோதியாய்க் கலந்ததுவோ!
கடிச்சோதி, சோதி ஆடையாய்க் கலந்ததுவோ!

இனி, ‘நின் பைம்பொன் கடிச்சோதி, படிச்சோதி ஆடையொடும் பல் கலனாய்க் கலந்ததுவோ!’ என்று
ஒரே தொடராகக் கொண்டு,
‘உன்னுடைய அழகியதாய் ஸ்ப்ருஹணீயமான- விரும்பத் தக்கதான திவ்யத் திரு வரையிலுண்டான-
திருக் கடிப்பிரதேசத்தில் உண்டான தேஜஸ்ஸானது , ஸ்வாபாவிகமான தேஜஸை யுடைத்தான
திருப்பீதாம்பரம் தொடக்கமான பல திருவாபரணங்களாய்க் கொண்டு சேர்ந்ததுவோ!’ என்று பொருள் கூறலுமாம்.
படி – இயற்கை.
இனி, ‘படிச்சோதி கலந்ததுவோ!’ என்பதற்குப் படியாணியான தேஜஸ் என்னவுமாம்.
ஆக, ‘நீரிலே நீர் கலந்தது போன்று -பேத க்ரஹணத்துக்கு -வேற்றுமையறிதற்குப் பொருத்தமற்றதாயிருக்கிறது–
அனுபபத்தியாய் இருக்கை – ; முடியவில்லை,’ என்றபடி.

திருமாலே கட்டுரையே –
இதுவும் ஒரு சேர்த்தியழகு இருக்கிறபடி.
‘அகலகில்லேன்’ என்று பிரியமாட்டாமலிருக்கிற பிராட்டியும், ஸ்வதஸ் ஸர்வஜ்ஞனான நீயுங்கூட விசாரித்து
இதற்கு ஒரு போக்கடி அருளிச்செய்ய வேண்டும்.
இன்று அனுபவிக்கப் புக்க இவர், என்றும் ஓரியல்வினர் என நினைவரியவர்’ என்பர்;
என்றும் அனுபவிக்குமவர்கள் ‘பண்டிவரைக் கண்டறிவதெவ்வூரில் யாம்?’ என்றே பயிலாநிற்பர்கள்;
ஸ்வதஸ் ஸர்வஜ்ஞனான இறைவன் 5தனக்கும் தன் தன்மையறிய அரியனாய்’ இருப்பான்;’
ஆக, இப்படி இன்று, அனுபவிக்கப் புக்க இவரோடு, என்றும் அனுபவிக்குமவர்களோடு, இவன் தன்னோடு
வேற்றுமையில்லை-இந்த சம்சயம் அனுவர்த்திகைக்கு – இந்த ஐயம் தொடர்வதற்கு;
தமக்கு இந்த சம்சயம் அறுதியிடவொண்ணாதது போலவே அவர்களுக்கும் என்றிருக்கிறார்; ஆதலின்,
‘திருமாலே கட்டுரையே’ என்கிறார். கட்டுரையே – ‘சொல்ல வேணும்’ என்றபடி.

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: