ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -2-10-11-

நிகமத்தில்‘இத்திருவாய் மொழி கற்றாரை, இத் திருவாய் மொழி தானே –
ஜென்மத்தை -பிறப்பினைப் போக்கி அழகர் திருவடிகளிலே சேர்த்து விடும்,’ என்கிறார்.

பொருள் என்று இவ் உலகம் படைத்தவன் புகழ் மேல்
மருள் இல் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே–2-10-11-

பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ்மேல் மருள் இல்வண் குருகூர் வண்சடகோபன் சொன்ன ஆயிரம் –
ப்ரயோஜனப்படும் -பயன்படும் என்று இல்வுலகங்களை உண்டாக்கினவனுடைய கல்யாண குணங்கள் விஷயமாக –
அஞ்ஞான கந்தமும் -அறிவின்மையின் வாசனையும் இல்லாத ஆழ்வாரால் அருளிச்செய்யப்பட்ட ஆயிரம்.
இவற்றை உண்டாக்கி-கரண களேபரங்களை – உடல் உறுப்புகளைக் கொடுத்து விட்டால்,
கொடுத்த உறுப்புகளைக் கொண்டு-சப்தாதி விஷயத்தில் – ஐம்புல இன்பங்களில் -ப்ரவணராய் -ஆசை யுடையராய்க்
கை கழியப் புக்கால், ‘நம் நினைவு தப்பியது அன்றோ?’ என்று நெகிழ்ந்து கை வாங்குகை யன்றி,
‘ஒருநாள் அல்லா ஒருநாளாகிலும் பயன்படாதோ?’ என்று பலகாலும் உண்டாக்கா நிற்கும் –
ஆதலால் -, ‘பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன்’ என்கிறார்.
மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர் ஆகையாலே, அவனுடைய குண விஷயமாக
மருள் இல்லாதவர் ஆதலின், ‘மருளில் சடகோபன்’ என்கிறார்.
‘பிரபந்தமோ?’ எனில்,

தெருள் கொள்ளச் சொன்ன ஓர் ஆயிரம் –
மருள் உண்டாய்க் கழிய வேண்டிற்று இவர்க்கு.
இவருடைய பிரபந்தத்தைக் கற்றார்க்கு-அப்யசித்தார்க்கு – முதலிலே அறிவின்மை தான் இல்லை.
கேட்டார்க்குத் தெளிவைப் பிறக்கும்படி அன்றோ அருளிச் செய்தது?
தம்முடைய ஞானத்துக்கு அடி, சர்வேஸ்வரன்;
இவர்களுடைய ஞானத்திற்கு அடி, தாம் என்றபடி.
‘பிரபந்தந்தான் செய்வது என்?’ என்னில்,

அருளுடையவன் தாள் அணைவிக்கும்.
அருளை யுடையவன் திருவடிகளிலே சேர்த்துவிடும்.
அருளைக் கொண்டே பரம்பொருளை நிரூபிக்கவேண்டி இருத்தலின், ‘அருளையுடையவன்’ என்கிறார்.

முடித்து –
அது செய்யுமிடத்துச் சம்சார சம்பந்தத்தை வாசனையோடே போக்கித் திருவடிகளிலே சேர்த்து விடும்.
ஒரு ஞானலாபத்தைப் பண்ணித் தந்துவிடுதலே அன்றி,
அர்த்த கிரியாகாரியாய் இருக்குமாதலின், ‘முடித்தே’ என ஏகாரங் கொடுத்து அருளிச் செய்கிறார்-

முதற்பாட்டில், ‘திருமலையாழ்வாரைக் கடுக ஆஸ்ரயியுங்கோள் அடைமின்,’ என்றார்;
இரண்டாம் பாட்டில், ‘திருமலையோடு சேர்ந்திருக்கின்ற ஸ்ரீ பதியை -திருப்பதியை ஆஸ்ரயியுங்கோள் அடைமின்,’ என்கிறார்;
மூன்றாம் பாட்டில், ‘அதனோடு சேர்ந்த அயன்மலை அமையும்,’ என்றார்;
நான்காம் பாட்டில், ‘திரிதந்தாகிலும்’ என்கிறபடியே ‘மீண்டும் திருமலையை ஆஸ்ரயியுங்கோள் அடைமின் என்றார்;
ஐந்தாம் பாட்டில், ‘அதனோடு சேர்ந்த புறமலையை ஆஸ்ரயியுங்கோள் அடைமின்’ என்றார்;
ஆறாம் பாட்டில், ‘திருமலைக்குப் போகும் மார்க்க சிந்தனை -வழியை நினைத்தலே அமையும்,’ என்றார்;
ஏழாம் பாட்டில், ‘அவ்வழியோடு சேர்ந்த திருமலையை ஆஸ்ரயியுங்கோள் அடைமின்,’ என்றார்;
எட்டாம் பாட்டில், ‘நித்தியசூரிகளுக்குக் கூட ப்ராப்யம் – அடையத் தக்கது,
ஆகையால், திருமலையே பரம ப்ராப்யம் அடையத் தக்கனவற்றுள் உயர்ந்தது’ என்றார்;
ஒன்பதாம் பாட்டில், ‘திருமலையைத் தொழக்கடவோம்’ என்கிற துணிவே வேண்டுவது என்றார்;
பத்தாம் பாட்டில், ‘எல்லாப்படியாலும் திருமலையாழ்வாரை-ஆஸ்ரயிக்கையே புருஷார்த்தம் -அடைதலே பேறு,’ என்று தலைக்காட்டினார்;
நிகமத்தில் இது கற்றார்க்குப் பலம் அருளிச்செய்தார்.

இரண்டாம் பதிகத்தில்
முதல் திருவாய்மொழியாலே, ‘மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர் அணியை’ என்கிறபடியே,
‘விலக்ஷண விஷயமாகையாலே பிரிந்தாரைக் கண்ணாஞ்சுழலை இடப் பண்ணும்,’ என்றார்;
இரண்டாம் திருவாய்மொழியாலே, ‘கூடினாலும் அதனைப் போன்று மறப்பிக்கும்,’ என்றார்;
மூன்றாம் திருவாய்மொழியால், ‘கூடிய பொருள் தான் நிரதிசய ஸூகரூபம்,’ என்றார்;
நான்காம் திருவாய் மொழியில், அவ்விஷயத்துக்குத் தேசிகரோடு அனுபவிக்கப் பெறாமையாலே –
மோஹங்கதரானார்- மோகத்தை அடைந்தார்;
ஐந்தாம் திருவாய்மொழியால், தாம் ஆசைப்பட்டபடியே வந்து கலந்தமை சொன்னார்;
ஆறாம் திருவாய் மொழியால், தம் இழவுக்கும் அவன் அதி சங்கை கொள்ளும் என்றார்;
ஏழாம் திருவாய்மொழியால், தம்முடைய சம்பந்தி சம்பந்திகளையும் விஷயீ கரித்த-ஏற்றுக் கொண்டபடியைச் சொன்னார்;
எட்டாம் திருவாய்மொழியால் அவனுடைய மோக்ஷ ப்ரதத்துவத்தை அருளிச்செய்தார்;
ஒன்பதாம் திருவாய்மொழியால், பிராப்ய நிஷ்கர்ஷம் பண்ணினார்;
பத்தாம் திருவாய்மொழியால், நிஷ்கர்ஷித்த- அறுதியிட்ட பிராப்யத்தைப் பெறுகைக்குத் -லபிக்கைக்கு
திருமலையாழ்வாரை -ஆஸ்ரயிக்க அடையச் சொன்னார்.

கிளர் ஒளி சேர் கீழ் உரைத்த பேறு கிடைக்க
வளர் ஒளி மால் சோலை மலைக்கே – தளர்வறவே
நெஞ்சை வைத்துச் சேரும் எனும் நீடு புகழ் மாறன் தாள்
முன் செலுத்துவோம் எம் முடி–திருவாய்மொழி நூற்றந்தாதி-20-

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: