ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -2-10-7-

திருமலையைச் சென்று கிட்டி நிரந்தர வாசம் -எப்பொழுதும் அங்கு வாசம் -செய்கையே
இவ் வாத்மாவுக்கு வெற்றி,’ என்கிறார்.

நலம் என நினைமின் நரகு அழுந்தாதே
நிலம் முனம் இடந்தான் நீடு உறை கோயில்
மலம் அறு மதி சேர் மாலிருஞ் சோலை
வலம் முறை எய்தி மருவுதல் வலமே–2-10-7-

நலம் என நினைமின் –
நான் சொல்லுகிற வார்த்தையை நன்மை என்று புத்திபண்ணுங்கோள்.
இனி, ‘விலக்ஷணமான புருஷார்த்தம் -இவ்வுலக விஷயங்களுக்கு எல்லாம் வேறுபட்ட சிறப்பினையுடைய
உறுதிப்பொருள் என்று புத்தி பண்ணுங்கோள்’ என்று கூறலுமாம்.

நரகு அழுந்தாதே –
பிரிவால் வரும் கிலேச அனுபவம் பண்ணாமல் – துன்பத்தை நுகராமல்.
‘ஆயின், ‘நரகு’ என்பது, பிரிவுத் துன்பத்தைக் காட்டுமோ?’ எனின்,
நரகங்களும் இவர்களுக்கு-வ்யவஸ்திதமாய் – முடிவு செய்யப்பட்டனவாய் அன்றோ இருப்பது?
யஸ் த்வயா ஸஹ ச ஸ்வர்க்க ‘காட்டில் போமது துக்கம்; படை வீட்டிலே இருப்பது சுகம்’ என்று அருளிச்செய்தார் பெருமாள்;
அங்ஙனம் அன்று, ஸூக துக்கங்கள் வ்யக்தி – வடிவந்தோறும் -வ்யவஸ்திதமாய் -முடிவு செய்யப்பட்டதாய்க்காணும் இருப்பது;
‘உம்மோடு கூடிய யாதொரு வாசம் உண்டோ, அது ஸூகமாகிறது; உம்மை ஒழியப் படை வீட்டில் இருக்கும் இருப்புத் துக்கமாகிறது;
இதிஜாநந் – தந்தாமுக்கு இல்லாதவை பிறர் பக்கலிலே கற்று அறிய வேணும் காணும்;
பராம் பிரீதிம் – உம்மைப்போல் நிறுத்து அல்லகாணும் என்னுடைய பிரீதி இருப்பது?’ என்று கூறினார் இளையபெருமாள்.
‘நன்று; நம்மில் உனக்குப் பிரீதி-பரையாக- மிக்கது எனச்சொன்னாய்; அதற்கு நம்மைச் சொல்லுகிறது என்?’ என்ன,
‘கச்ச ராம மயா ஸஹ. ‘என்னோடு கூடிப் புறப்படும்’ என்றும்,
‘அக்ர தஸ்தே கமிஷ்யாமி – நான் புறப்பட்டபடியே, என்னை முன்னே போக விட்டுப் பின்னே வரப்பாரும்,’ என்றும் கூறுகிறார் மேல்.
‘ஆயின், பிராட்டிமார்க்கு அன்றோ பிரிவு நரகமாகத் தோற்றும்?
ஆடவரான இவர்க்கு அப்படித் தோற்றுமோ?’ எனின்,
நச சீதா த்வயா ஹீ நா ‘இராகவரே! உம்மாலே பிரிந்திருக்கப் பெற்ற பிராட்டி இலள் ஆவள்;
நானும் அவ்வாறே; பிழைத்திருப்போமேயாயின், தண்ணீரினின்றும் எடுக்கப்பட்ட மீன் போல
ஒரு முகூர்த்த காலமே உய்ந்திருப்போம்’ என்றார் அன்றே இளையபெருமாள்?

நிலம் முனம் இடந்தான் நீடு உறை கோயில் –
வராஹ கல்பத்தின் ஆதியிலே மஹா வராகமாய், அண்டப் பித்தியிலே சேர்ந்து உரு மாய்ந்த பூமியை ஒட்டு விடுவித்து
எடுத்துக்கொண்டு ஏறின நிருபாதிக ஸௌஹார்த்தமுடையவன்.
அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதியாதே நித்ய வாசம் செய்கிற தேசம்.

மலம் அறு மதி சேர் மாலிருஞ்சோலை –
சந்திர பதத்துக்கு அவ்வருகே வளர்ந்து நிற்கையாலே அவன் போம்போது சிகரங்களிலே தேய்ப்புண்டு
சாணையிலே இட்டாற்போன்று களங்கம் அறுகின்ற மாலிருஞ்சோலை.
இனி, ‘மல மறு மதிசேர்’ என்பதற்குத்
‘திருமலையாழ்வார் தாம் ஞான லாபத்தை உண்டாக்குவர்’ என்று, திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச்செய்வர்.

வலம் முறை எய்தி மருவுதல் வழக்கே –
காலயவநன் ஜராசந்தன் முதலியோர்களைப் போலே அன்றி, அனுகூலமான முறையிலே கிட்டி மருவுதல் வலம்:
வலம் -வரம்- பலவத்ரம் -ஸ்ரேஷ்டம் என்னுதல் – வரம் என்ற சொல்லின் திரிபு என்றவாறே –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: