ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -2-10-5-

திருமலைக்குப் புறம்பான மலையை அடைகையே நல் விரகு – நல்லுபாயம்’ என்கிறார்.

திறமுடை வலத்தால் தீவினை பெருக்காது,
அறம் முயல் ஆழிப் படையவன் கோயில்
மறுவில் வண் சுனை சூழ் மாலிருஞ் சோலைப்
புற மலை சாரப் போவது கிறியே–2-10-5-

திறமுடை வலத்தால் தீவினை பெருக்காது –
திரண்ட பலத்தாலே ப்ரயோஜனாந்தர ப்ரவணமாகிற – வேறு பயன்களை ஆசைப்படுதலாகிற-
மஹா பெரிய பாவத்தைக் கூடுபூரியாமல். திறம் – சமூகம் -கூட்டம்./ வலம் -பலம் –

அறம் முயல் ஆழ்ப்படையவன் கோயில்
லஷ்மணஸ்ய ச தீமத ‘அறிவுடைய இலக்குமணன்’ என்கிறபடியே, -சர்வேஸ்வரனிலும்
ஆஸ்ரிதர் -அடியார்களைப் பாதுகாத்தலிலே முயலாநின்றுள்ள திரு ஆழியை ஆயுதமாக உடையவன் வந்து வாழ்கிற தேசம்.
சர்வேஸ்வரன் கடைக்கணித்துவிட அரை ஷணத்திலே வாராணசியை தஹித்து எரித்து
வந்து நின்றவன் ஆதலின், ‘அறம் முயல் ஆழி’ என்கிறார்.

மறு இல் வண் சுனை சூழ் மாலிருஞ்சோலை புறமலை சாரப் போவது கிறியே –
ரமணீயம் பிரசன்ன ஆம்பு சன் மனுஷ்ய மநோ யதா ‘பெரியோர்களுடைய மனத்தைப் போன்று
தெளிந்த தண்ணீரையுடையது’ என்கிறபடியே,
மறு அற்று, ஆழ்வார் திருவுள்ளம் போன்று தெளிவையுடைத்தாய், தர்ச நீயமாய் -காட்சிக்கு இனியதாய்,
ஊற்று மாறாத சுனைகளாலே சூழப்பட்ட மாலிருஞ்சோலைப் புறமலை சாரப் போகும் இதுவே-
பகவத் ப்ரத்யாசத்தி – பகவானை அடைதலை -வேண்டியிருப்பார்க்கு
வருத்தம் அற -லபிக்கலாம் -அடையக்கூடிய நல்விரகு.

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: