ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -2-10-4-

கர்ம பந்தத்தைப் போக்கி ஆஸ்ரிதரானவர்கள் அடிமை செய்து வாழுகைக்கு ஈடாம் படி
சர்வேஸ்வரன் வர்த்திக்கிறதிருமலையை ஆஸ்ரயிக்கையே சத்ருசம் என்கிறார் –

கரும வன்பாசம் கழித்து உழன்று உய்யவே
பெருமலை எடுத்தான் பீடுறை கோயில்
வருமழை தவழும் மாலிரும் சோலை
திருமலை யதுவே யடைவது திறமே –2-10-4-

கரும வன்பாசம் கழித்து உழன்று உய்யவே
இது நம்மால் செய்து தலைக் கட்டப் போமோ -திருமலையை ஆஸ்ரயிக்கும் அது ஒழிய -என்று
இங்கனே ஆழ்வான் ஒரு உருவிலே பணித்தானாம்
அங்கனம் நிர்வஹிக்கக் கடவது
அன்றிக்கே –
கரும வன் பாசம் கழிக்கைக்காகவும் -உழன்று உய்க்கைக்காகவும் என்று இங்கனே எம்பெருமானார் அருளிச் செய்யும் படி
முராசூரன் -நரகாசுரன் அமைச்சன் -அநேக மாயிரம் பாசங்களாலே தன்னை மறைய வரிந்து கொண்டு இருந்தால் போலே
யாயிற்று அவித்யாதிகளால் தன்னை மறைய வரிந்து கொண்டு இருக்கும் படி
கர்மமாகிற வலிய பாசங்களைக் கழிக்கைக்காகவும் -தன் பக்கல் கைங்கர்யத்தைப் பண்ணி உஜ்ஜீவிக்கைக்காகவும்
பரித்ராணாயா சாதூனாம் -என்கிறபடியே விரோதிகளைப் போக்கி உஜ்ஜீவிப்பிக்கை இறே அவதாரங்களுக்கு பிரயோஜனம்

பெருமலை எடுத்தான் பீடுறை கோயில்
அரியன செய்தும் ஆஸ்ரித ரஷணம் பண்ணுமவன்
கோப கோபீ ஜன சங்குலம் அதீவார்த்தம் –என்று இடையரும் இடைச்சிகளும் நோவுபட ஒரு மலையை எடுத்து நோக்கினவன்
அந்த ஐஸ்வர்யத்தோடு நித்ய வாசம் பண்ணுகிற கோயில் –
கல் எடுத்து கல் மாரி காத்தான் -ஆதேயம் -ஆதாரம் இரண்டு திருமலைகள்
பெரு மலை
பஞ்ச லஷம் குடியும் நிழலிலே ஒதுங்கலாம் படி இறே மலையின் பரப்பு
பீடு –
பெருமை -அதாவது ஐஸ்வர்யம் -ஆபத்சகத்வாதிகள்
பசுக்களுக்கும் இடையருக்கும் ரஷகன் ஆகையாலே வந்த ஐஸ்வர்யம் தோற்ற வர்த்திக்கும் கோயில்

வரு மழை தவழும் மாலிரும் சோலை
சமுத் வஹந்தஸ் சலிலாதி பாரம் பலாகி நோ வாரி தரா நதந்த-மஹத் ஸூ ஸ்ருன்கேஷூ மஹீ தராணாம்
விச்ரம்ய விச்ரம்ய புன ப்ரயாந்தி–மால்யவானில் -பிரச்வரண கிரியில்
பெருமாள் இளைய பெருமாள் இடம் சொன்ன வார்த்தை என்கிற படியே
சூற் பெண்டுகள் சுரம் ஏறுமா போலே யாயிற்று மேகங்கள் சஞ்சரிப்பது
ஊர்க்கு இரண்டாயிற்று மழை-
நின்ற இடத்தில் நின்று வர்ஷிப்பதொரு மேகமும் -போவது வருவதுமாய் இருப்பதொரு மேகமும்
புயல் மழை வண்ணர் -என்றது இறே

திருமலை யதுவே யடைவது திறமே
மாலிரும் சோலை யாகிற திருமலையை ஆஸ்ரயிக்கும் இதுவே திறம்
செய் திறம் -செய்ய அடுப்பது இதுவே
மாலிரும் சோலையை உடைத்தான திருமலையை -என்னுதல்
மால் -என்று பெருமை —இருமை என்றும் பெருமை –ஓன்று ஒக்கத்திலே ஓன்று பரப்பிலே –

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: