ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -2-10-3-

உத்தேசியத்துக்கு இவை எல்லாம் வேண்டுமோ?
திருமலையோடு சேர்ந்த அயல் மலையை அடைய அமையும்’ என்கிறார்.

பயன் அல்ல செய்து பயன் இல்லை நெஞ்சே!
புயல் மழை வண்ணர் புரிந்து உறை கோயில்,
மயல் மிகு பொழில் சூழ் மாலிருஞ் சோலை
அயன் மலை அடைவது அது கருமமே–2-10-3-

பயன் அல்ல செய்து பயன் இல்லை –
இவர் பயன் இல்லாதனவாக நினைத்திருக்கிறது பரமபதத்தில் இருப்பையும் அல்லாத அவதாரங்களையும்.
ஸூ ஸூ கம் கர்த்தும் – – ‘செய்வதற்குச் சுகரூபமாக இருப்பது’ என்கிறபடியே,
செயலும் பலமும் இரண்டும் பிரயோஜனம் ஆயிற்றுத் தாம் பற்றின விஷயம் இருப்பது.
அன்றியே, ‘பிரயோஜனம் இல்லாதனவற்றைச் செய்து ஒரு பிரயோஜனம் இல்லை’ எனலுமாம்; என்றது,
சாதன தசையிலும் துக்க ரூபமாய், பல வேளையிலும் துக்கம் கலந்ததாய் இருக்கிற சுவர்க்காதி உலகங்களையும்,
அவற்றைப் பெறுதற்குரிய சாதனங்களையும் குறித்தபடி.

நெஞ்சே –
விஷயாந்தரத்துக்கும் -வேறு விஷயங்களுக்கும் இவ்விஷயத்துக்கும் உண்டான நெடுவாசி நீ அறிந்ததே அன்றோ?
இனி, பந்த மோக்ஷங்கள் இரண்டற்கும் நெஞ்சு பொதுவாய் இருத்தலின், அதனை நோக்கி, ‘நெஞ்சே’ என்கிறார் எனலுமாம்.
‘இவ்வளவிலும் இவ்விஷயத்தை அகலுகைக்குக் காரியம் பார்த்தது நீயே அன்றோ?’ எனலுமாம்.

புயல் மழை வண்ணர் புரிந்து உறைகோயில் –
பயனான விஷயம் தான் இருக்கிறபடி –
வர்ஷூகவாலாகஹம் – மழை பெய்கிற மேகம் போன்று இருக்கிற வடிவழகையுடையவர்
அவ்வடிவழகை -சர்வ ஸ்வதானம் பண்ணி– முற்றிலும் அனுபவிக்கக் கொடுத்துக்கொண்டு வாழ்கின்ற கோயில்
இனி, வர்ஷூகவாலாகஹம்-‘மேகம் போன்று-ஜல – தண்ணீர்,ஸ்தல – நிலம் என்ற விபாகம் -வேற்றுமை இன்றி
எல்லார்க்கும் முற்றிலும் அனுபவிக்கக் கொடுத்துக் கொண்டு வாழ்கிற கோயில்’ எனலுமாம்.
இதனால், பிராப்ய பிராபகங்கள் தமக்கு ஒருவனேயாய் இருக்கிறபடியைத் தெரிவித்தவாறு. பயனான விஷயந் தான் இருக்கிறபடி.

மயல் மிகு பொழில் சூழ் –
சோலைச் செறிவாலே புக்கார்க்கு இருண்டு இருக்கும்படியான சோலைகள் சூழ்ந்த.
இனி, மயல் மிகு –போக்யதா ப்ரகரஷத்தாலே – இனிமையின் மிகுதியாலே மனத்தை இருளப் பண்ணும் என்று பொருள் கூறலுமாம்.

மாலிருஞ்சோலை அயன்மலை –
திருமலையினது சம்பந்தத்தையே தனக்குப் பெயராக உடைத்தான மலை.
அகஸ்திய பிராதா ‘அகஸ்தியருக்கு உடன் பிறந்தவர்’ என்னுமாறு போன்று ‘மாலிருஞ்சோலை அயன்மலை’ என்கிறார்.

அடைவது அது கருமமே –
‘அஃதொன்றுமே செய்யத் தக்கது;
அல்லாதவை அடையச் செய்யத் தகாதன’-அகர்தவ்யம் – என்கிறார்.

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: