ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -2-10-2-

‘திருமலையோடு சேர்ந்த திருப்பதியைக் கிட்டுதலே பரம பிரயோஜனம்’ என்கிறார்.
இனி, ‘மாலிருஞ்சோலையைச் சேர்ந்த பதி’ என்னாது,
‘மாலிருஞ்சோலையாகிய பதியைக் கிட்டுதலே பரம பிரயோஜனம்’ என்கிறார் எனலுமாம்.

சதிர் இள மடவார் தாழ்ச்சியை மதியாது,
அதிர் குரல் சங்கத்து அழகர் தம் கோயில்
மதி தவழ் குடுமி மாலிருஞ் சோலைப்
பதியது ஏத்தி எழுவது பயனே–2-10-2-

சதிர் இள மடவார் தாழ்ச்சியை மதியாது –
சதிர் இள மடவார் விஷயமாக நீங்கள் செய்யும் தாழ்ச்சியை ஒன்றாகப் புத்தி பண்ணாமல்.
இனி, ‘சதிர் இள மடவார் தாங்கள் பண்ணும் தாழ்ச்சியைப் புத்தி பண்ணாமல்’ என்றுமாம்.
தாழ்ச்சி – தாழ்ச்சி தோற்ற இருக்கும் வார்த்தைகளும் செயல்களும்.

‘சதிரிள மடவார்தாழ்ச்சியை’ என்னுமிவ்விடத்தில்
‘பணிமின் திருவருள் என்னும்அம் சீதப் பைம்பூம் பள்ளி அணிமென் குழலார் இன்பக் கலவி அமுதுண்டார்’(திருவாய். 4. 4. 5.)
‘பாண்தேன் வண்டு அறையும் குழலார்கள் பல் லாண்டு இசைப்ப
ஆண்டார் வையமெல்லாம் அரசாகி முன் ஆண்டவரே
மாண்டார் என்று வந்தார் அந்தோ மனை வாழ்க்கை தன்னை
வேண்டேன் நின்னடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே!’(பெரிய திருமொழி. 6. 2 : 5.)

மதித்தால், பிரயோஜனம் இல்லாமையே அன்று; மேல் நரகம், இங்கு -சிஷ்ட கர்ஹை -மேன்மக்களால் நிந்திக்கப்படுதல்.
மேலும், ‘பக்தா நாம்’ என்கிறபடியே, பரார்த்தமாய் -பிறர்களுக்கு உரியதாய் நிரதிசய போக்கியமாய் இருக்கும் விஷயம் அன்று;
ஆதலின், ‘மதியாது’ என்கிறார் என்னுதல்.
சதிராவது, பிறரை அகப்படுத்திக் கொள்ளுகைக்கு ஈடான விரகு;
அதாவது, செத்துக் காட்டவுங்கூட வல்லராய் இருக்கை.
சதிரையும் பருவத்தின் இளமையையும் காட்டி ஆயிற்று அகப்படுத்துவது.
மேல், ‘கிளர் ஒளி இளமை’ என்றாரே அன்றோ?
அப்பருவம் கண்ட இடத்தே இழுத்துக்கொள்ளும் முதலைகள் ஆயிற்று விஷயங்கள்

அதிர் குரல் சங்கத்து அழகர் தம் கோயில் –
திருக்கையின் ஸ்பர்சத்தால் எப்பொழுதும் ஒக்க முழங்குகின்ற ஸ்ரீ பாஞ்சஜன்னியத்தைத் திருக்கையிலே யுடையராய்
அச் சேர்த்தி அழகாலே அது தன்னையே தமக்குத் திருநாமமாக உடையவர்-

‘அதுதன்னையே தமக்குத் திருநாமமாக உடையவர்’ என்றது, ‘சங்கத்தழகர்’ என்ற பெயரைக் குறித்தபடி.
இனி, ‘பாண்டியர்களால் வளர்க்கப்பட்ட முதற்சங்கம் இடைச்சங்கம் கடைச்சங்கங்கட்குத் தலைவராகிய அழகர்’ என்றுமாம்.
‘அங்கத் தமிழ் மறை ஆயிரம் பாடி அளித் துலகோர்
தங்கட்கு வீடு அருளும் புருடோத்தமன் தண் வகுளத்
தொங்கற் பராங்குசன் தாளிணை மாலிருஞ் சோலை மலைச்
சங்கத் தழகர் அந்தாதி நடாத்தத் தலைக் கொள்வனே.’என்றார் திவ்விய கவி.-(அழகரந்தாதி. காப்பு)

ஆஸ்ரித ரக்ஷணத்துக்கும் பாங்கான நிலம்’ என்று திருவுள்ளத்திலே விரும்பி,
‘என்னது’ என்று ஆதரித்து வசிக்கிற கோயில்.

மதி தவழ் குடுமி மாலிருஞ்சோலை பதி யது –
சூற்பெண்டுகள் சுரம் ஏறுமாறு போன்று சந்திரன் தவழ்ந்து ஏறுகின்ற சிகரத்தையுடைய திருமலையாகின்ற பதியை.
இனி, ‘மாலிருஞ்சோலைப்பதி’ என்பதற்கு,
‘மாலிருஞ்சோலையில் பதி’ என்று, ‘திருப்பதி’ என்று பொருள் என்றுமாம்.

ஏத்தி எழுவது பயன் –
சொரூபத்திற்குத் தகுதியான அனுரூபமான விருத்தி விசேஷத்தைப் பண்ணிப் பிழைக்குமிதுவே -உஜ்ஜீவிக்குமதுவே
இவ்வாத்மாவிற்குப் பிரயோஜனம் -பயன்;
அல்லாதவை நிஷ்ப்ரயோஜனம் – பயன் அற்றவை.
பிரயோஜனம் -பயன் என்றது, ப்ராப்யம் -‘அடையத்தக்கது’ என்றபடி.

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: