ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -2-9-9-

மிக்கார் வேத விமலர் விழுங்கும்’ என்று நித்திய சூரிகள் நித்ய அனுபவம் பண்ணும் படியை அனுசந்தித்தார்
அவர்களோடு ஒத்த சம்பந்தம் தமக்கு உண்டாயிருக்க, இழந்திருக்கிறபடியையும் அனுசந்தித்து அநர்த்தப்பட்டேன் -என்கிறார்.

யானே என்னை அறிய கிலாதே,
யானே என் தனதே என்று இருந்தேன்;
யானே நீ:என்னுடைமையும் நீயே;
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே!–2-9-9-

யானே – ‘
அவன் எதிர் சூழல் புக்குத் திரியாநிற்க, நானே கிடீர் விநாசத்தைச் சூழ்த்து கொண்டேன்?’ என்கிறார்.
‘என் இழவு பகவானுடைய செயலால் வந்தது அன்று,’ என்பார், ‘யானே’ எனப் பிரிநிலை ஏகாரம் கொடுத்து அருளிச் செய்கிறார் .

என்னை அறியகிலாதே-
ராஜ குமரன் வேடன் கையிலே அகப்பட்டுத் தன்னை வேடனாக பிரதிபத்தி பண்ணுமா போலே ,
சர்வேஸ்வரனுக்கு பிரகார பூதனான என்னை அறியாமல்.

யானே என்றனதே என்று இருந்தேன் –
‘அவனும் அவன் உடைமையும்’ என்று இருக்கை தவிர்ந்து, ‘நானும் என் உடைமையும்’ என்று வகுத்துக் கொண்டு போந்தேன்.
இப்படி நெடுநாள் போருகிற இடத்தில் ஒருநாள் அநுதாபம் பிறத்தலும் கூடும் அன்றே?
அதுவும் இன்றி, க்ருதக்ருத்யனாய் -செய்ய வேண்டுமவற்றை எல்லாம் செய்து முடித்தவனாய்
நிர்ப்பரனாய் இருந்தேன் என்பார் ‘இருந்தேன்’ என்கிறார்.
‘தீவினையேன் வாளா இருந்தேன்’ என்றார் பெரிய திருவந்தாதியில்.
அஹம் சர்வம் கரிஷ்யாமி ‘நான் எல்லாத் தொண்டுகளையும் செய்வேன் என்கைக்குச் சம்பந்தம் உண்டாய் இருக்க,
ஒரு காரியமும் இல்லாதாரைப் போன்று கையொழிந்திருந்தேன்; ‘முடிந்தேன்’ என்றது போன்று இருக்கின்றது;
ஒரு நாளை இழவே போந்ததாக இருக்க, அநாதிகாலம் இழந்து போந்தேன் என்பார், ‘ஒழிந்தேன்’ என்கிறார்.
பொருளின் உண்மை அங்ஙனம் அன்றோ?’ அர்த்த தத்வம் என்ன -என்ன,

யானே நீ – யானும் நீயே.
’அஹம் மனுரபவம் ஸூர்யச்ச -நான் மநு ஆகிறேன், நான் சூரியனும் ஆகிறேன்’ என்னா நிற்பார்கள் ஆயிற்று முக்தர்
மத்தஸ் சர்வம் அஹம் சர்வம் -‘எல்லாப் பொருள்களும் என்னிடத்திலிருந்து உண்டாயின.’
எல்லாப் பொருள்களும் நானே’ -என்னா நிற்பார் சம்சாரத்தில் தெளிவுடையார்
இங்ஙனம் கூறுகைக்குக் காரணம் என்னை?’ எனின்
அஹம் ப்ரஹ்மாஸ்மி -நான் ராஜ புத்ரன் -என்னுமா போலே -நான் ப்ரஹ்மம் -என்னலாம் படி இறே சம்பந்தம் இருப்பது –
‘ஆயின், ‘அப்பொருள் வாசுதேவன்’ என்றதோ?’ எனின்,-
ச வா ஸூ தேவ-அது வாசுதேவனுக்குச் சரீரம் என்றபடி

என் உடைமையும் நீயே –
யஸ்யை தே தஸ்ய தத் தநம் ‘இவர்கள் எவனுக்கு உடையவர்களோ அவனுக்கு இவர்கள் அந்தச் செல்வம்’ என்கிறபடியே,
‘என் உடைமையும் நீயே’ என்கிறார்.
‘இது எங்கே பரிமாறக் கண்டு சொல்லும் வார்த்தை?’ என்ன,
‘நித்தியசூரிகள் முழுதும் இப்படி அன்றோ உன்னை அனுபவிப்பது?’ என்கிறார் மேல்:

வானே ஏத்தும் எம் வானவர் ஏறே –
அவர்கள் தங்கள் சேஷத்வ தன்மைக்குத் தகுதியாக அடிமை செய்யா நிற்க,
இவனும் தன் சேஷித்துவத்தால் வந்த உதகர்ஷம் தோற்ற இருக்கும் இருப்பு.

எம் வானவர் ஏறே’ என்று
‘எனக்கும் அவர்களோடு ஒத்த பிராப்தி -சம்பந்தம் உண்டாயிருக்க, இழந்து அநர்த்தப்பட்டேன் ’ என்பார், ‘எம் வானவர் ஏறே’ என்கிறார்.
‘வான்’ என்பதனைக் மஞ்சா க்ரோஸந்தி -‘கட்டில் கத்துகிறது’ என்பது போல ஆகுபெயர் .

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: