ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை — -1-10-2-

பரம பத்திக்கும் பரிகணனைக்கும் ஒக்க முகங்காட்டுவான்’ என்கிறார்.

——————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

காதன்மையால் எண்ணிலும் வரும்-என்கிற பதங்களைக் கடாக்ஷித்து அவதாரிகை –

—————

கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
எண்ணிலும் வரும் என் இனி வேண்டுவம்
மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும்
விண்ணுமாய் விரியும் எம் பிரானையே–1-10-2-

காதன்மையால் தொழில் கண்ணுளே நிற்கும் –
பரம பத்தி யுடையவர்களாகித் தொழுதால், அவர்கள் கண் வட்டத்துக்கு அவ் வருகு போக மாட்டாதே நிற்பான்.
தன்னை ஒழியச் செல்லாமையை யுடையராய்க் கொண்டு தொழுதால்,
தானும் அவர்களை ஒழியச் செல்லாமையை யுடையனாய்
அவர்கள் கண் வட்டத்தினின்றும் கால் வாங்க மாட்டாமல் நிற்பான் என்பார், 
‘கண்ணுள்ளே, என ஏகாரங் கொடுத்து அருளிச் செய்கிறார்

எண்ணிலும் வரும் –
கடம்’ படம், ஈஸ்வரன்’ என்றால், ‘நம்மை ‘இல்லை’ என்னாமல், இவற்றோடு ஒக்க
பரிகணித்தான் -எண்ணினான் அன்றே?’ என்று வரும்.
அன்றிக்கே, ‘இருபத்து நான்காவது தத்துவம்-அசித்து, இருபத்தைந்தாவது தத்துவம்-ஆத்துமா,
இருபத்தாறாவது தத்துவம் ஈஸ்வரன் என்றால்,
‘நம்முடைய உண்மையையும் இவற்றைப் போன்று இசைந்தான் அன்றே?’ என்று வந்து முகங்காட்டுவான் என்று கூறலுமாம்.
அன்றிக்கே, ‘இருபத்துநான்கு, இருபத்தைந்து, இருபத்தாறு’ என்று எண்ணினால், 
‘இருபத்தாறு யானே’ என்று வருவான் என்று பொருள் கூறலும் ஒன்று. 
அன்றிக்கே, நம்முடைய எண்ணை மிஞ்சி வரும் என்று கோடலுமாம்.

‘வரும்
வந்தால் நிற்குமது இல்லை; இவன் ‘போ’ என்ற போதும் அதற்கும் தகுதியாக வரும் என்பார் ‘வரும்’ என்கிறார்.

என் இனி வேண்டுவம்-‘
பரம பத்திக்கும் எண்ணுதற்கும் ஒக்க முகங்காட்டுவானான பின்னர் எனக்கு ஒரு குறை உண்டோ?’ என்கிறார்.
‘இறைவன், இவ் வாத்துமாப் பக்கல் -அப்ரதிஷேதத்துக்கு வெறுப்பின்மைக்குக்-அவசரம் – காலம்
பார்த்திருந்து முகங்காட்டுவானான பின்பு,
இவனுக்கு நன்மை தரும் காரியங்களில் இவன்-ஹிதாம்சமாக செய்ய வேண்டுவது ஒன்று உண்டோ?’ என்றபடி.
இப்படி இருக்கிற பகவானுடைய ஸ்வரூபத்தைப் புத்தி பண்ணுகையே, இவன் பிரபந்தன் ஆகையாவது.
இறைவன், தன்னுடைய ஸ்வரூபத்தை உபதேசித்து, ‘உன்னால் வரும் இழவுக்கு அஞ்ச வேண்டா ‘மாஸூச:’ என்றது போன்று,
இவரும் இறைவனுடைய ஸ்வரூபத்தை நினைந்து, ‘என் இனி வேண்டுவம்?’ என்கிறார்.
இவற்றால், அப்ரதி ஷேதமே- வெறுப்பின்மை ஒன்றுமே பேற்றுக்கு வேண்டுவது,
அதற்குப் புறம்பான யோக்கியதை அயோக்கியதைகள் பயன் அற்றவை என்பது பெறுதும்.

ஸ்ரீ வேல்வெட்டி நம்பியார், ஸ்ரீ‘நம்பிள்ளையைப் பார்த்துப் ஸ்ரீ‘பெருமாள் கடலைச் சரணம் புகுகிற காலத்தில்
கிழக்கு இருத்தல் முதலிய சில நியமங்களோடே சரணம் புக்கார்;
ஆதலின், இப் பிரபத்தி உபாயம், வேறு சாதனங்களைப் போன்று,
சில நியமங்கள் வேண்டி இருக்கிறதோ?’ என்று கேட்க,
சமுத்திரம் ராகவோ ராஜா சரணம் கந்தும் அ ர்ஹதி ( ‘அரசரான இராகவர் கடலைச் சரணம் அடையத் தக்கவர்’ ) என்று
ஸ்ரீ பெருமாளுக்கு உபதேசித்தான் ஸ் ரீவிபீஷணாழ்வான்;
அவன் தான் ஸ்ரீ பெருமாளைச் சரணம் புகுகிற இடத்தில், கடலில் ஒரு முழுக்கிட்டு வந்தான்’ என்று இல்லை;
‘ஆக, இத்தால், சொல்லிற்றாயிற்று என்?’ என்னில்,
ஸ்ரீ ‘பெருமாள் இஷ்வாகு குலத்தராய் ஆசாரத்தில் மேம்பட்டவராகையாலே, சில நியமங்களோடே சரணம் புக்கார்;
ஸ்ரீ விபீஷ்ணாழ்வான் இராக்கதர் குலத்தனாகையாலே, நின்ற நிலையிலே சரணம் புக்கான்;
ஆகையாலே, யோக்கியனுக்கு அயோக்கியதை சம்பாதிக்க வேண்டா,
அயோக்கியனுக்கு யோக்கியதை சம்பாதிக்க வேண்டா;
ஆகையாலே, சர்வாதிகாரம் இவ் வுபாயம்’, என்று அருளிச் செய்தார்.
பகவானுடைய பிரபாவத்தை அறிந்த நன் ஞானமுடையார்க்கு ‘இதுவே பொருள்’ என்று தோன்றும்:
‘கேவலம் கிரியா மாத்திரத்துக்கே பலத்தைக் கொடுக்கும் ஆற்றலுள்ளது’ என்று இருப்பார்க்கு
‘இப்பொருள் -அநுப பன்னம் -பொருத்தம் அன்று’ என்று தோன்றும்.

மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும் விண்ணும் ஆய் விரியும் எம்பிரானை-
காரணமான ஐம்பெரும்பூதங்கட்கும் உள்ளீடாய்-பஹு ஸ்யாம்-  நான் பலவாக விரிகிறேன்’ என்கிறபடியே,
தன் மலர்த்தியே ஆகும்படி இருக்கிற உபகாரகன்.
நல் வாயு
காற்று எல்லாவற்றையும் தரிக்கச் செய்வது ஆதலின், ‘ நல் வாயு ’ என்கிறார்.
விண்ணுமாய் –
இவற்றுக்கு அந்தராத்மா என்றபடி
விரியும்
பஹு ஸ்யாம் -‘நான் பல பொருள்களாக விரிகின்றேன்,’ என்பது சுருதியாதலின், ‘விரியும்’ என்கிறார்.

எம்பிரான்
எனக்கு உபகாரகன் -பிரதிமையை த்வீதையாக்கி எம்பிரானை -என்று கிடக்கிறது

எம்பிரான்-கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில், எண்ணிலும் வரும் என் இனி வேண்டுவம்?’ 
‘தன்னை ஒழிந்த எல்லாப் பொருள்களும் தன் சங்கல்பத்தைப் பற்றி உளவாம்படி இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன்,
தன் பக்கல் ஆசை சிறிதுடையார் சங்கல்பத்தைப் பற்றித் தான் உளனாம்படி இருப்பானான பின்பு,
இவ் வாத்துமாவிற்கு ஒரு குறை யுண்டோ?’ என்கிறார்.

————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

காதன்மை -நமஸ் யந்தஸ் ச மாம் பக்த்யா -என்கிற பக்தி –
கண்ணுள்ளே நிற்கும் -என்கையாலே காதன்மை என்று –பரம பக்தியே விவஷிதம் –
எண்ணிலும் -மநோ ரதம்–ஸங்க்யை -ஸங்க்யை பக்ஷத்தில் மூன்று வித நிர்வாகங்கள்
எண்ணை மிஞ்சி வருகையாவது -எண் இன்றிக்கே இருக்க வருகை –
எருது கெடுத்தார்க்கும் ஏழே கடுக்காய்
ஈனாப் பெண்ணுக்கும் ஏழே கடுக்காய்
படை எடுத்த மன்னருக்கும் ஏழே கடுக்காய்
பாவியேன் குன்றி அகப்பட்டுக் கொண்டேனே –
எண்ணிலும் வரும் என்றதால் பிரபத்தி விவஷிதம் என்று பலிதம் –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: