ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை —1-9-8-

சகல வித்யா வேத்யனான ‘எல்லாக் கலைகளாலும் அறியப் படுகின்ற சர்வேஸ்வரன்,
பிரமாணங்களாலே காணக் கூடிய வடிவை என் கண்ணுக்கு விஷயமாக்கினான்,’ என்கிறார்.

—————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

சகல வித்யா வேத்யனான என்றது கலைகளுக்கு எல்லாம் ஆவியும் ஆக்கையும் தானே -என்றதைப் பற்ற –
இஸ் சாமா நாதி கரண்யத்துக்கு நிபந்தநம்-ப்ரதிபாத்ய ப்ரதிபாதக பாவம் –
ஆவியோடே கூடின ஆக்கையினாலே ப்ரதிபாத்யன் -என்றபடி –
ஆதித்ய வர்ணம் -கப்யாசம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ-இத்யாதிகள் பிரமாணங்கள்

———————

நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக்கு எல்லாம்
ஆவியும் ஆக்கையும் தானே அழிப்போடு அளிப்பவன் தானே
பூவியல் நால் தடந் தோளன் பொரு படை ஆழி சங்கு ஏந்தும்
காவி நன் மேனிக் கமலக் கண்ணன் என் கண்ணி னுளானே–1-9-8-

நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக்கு எல்லாம்-
ஜிஹ்வாக்ரத்தில் -நாவின் நுனியில் -விகசியா நின்றுள்ள -மலர்கின்ற –
ஞான சாதனமான -ஞானத்திற்குக் கருவியான-வித்யா – கலை – விசேஷங்களுக்கு எல்லாம்.

ஆவியும் ஆக்கையும் தானே –
ஆவி என்கிறது அர்த்தத்தை -ஆக்கை -என்கிறது சப்தத்தை
‘இப் பொருளை இச் சொல் காட்டக் கடவது’ என்று நியமித்து விட்டவன் அவன் என்றவாறு.
ஆக, சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள சம்பந்தம் அவன் இட்ட வழக்கு என்றபடி.

அழிப்போடு அளிப்பவன் தானே –
சிற்றறிவினர்களான இம் மக்களுடைய நினைவின் குற்றங்களாலும், லேகக- எழுதுங்காலத்து உண்டாகும் குற்றங்களாலும்,
பாட பேதங்களாலும், கலைகள் உருமாயும் அளவில்-சம்ஹரித்தும் – அழித்தும்,-
அபேக்ஷித விரும்புகிற காலத்தில் ஸ்ருஷ்ட்டித்தும் உண்டாக்கியும் செல்கின்றவன் தானே.
இனி, இதற்கு, ‘மற்றை அழித்தல் அளித்தல்களை அருளிச் செய்கிறார்’ என்று பொருள் கூறுவாரும் உளர்.

பூ இயல் நால் தடம் தோளன் –
பூவை ஒழியச் செல்லாத ஸுகுமார்யமுடைய திருத் தோள்கள் – கற்பகத் தரு பணைத்தாற் போன்று நான்காய்,
சுற்றுடைத்தாய் இருக்கிற திருத் தோள்களை யுடையவன்.
இனி, ‘பூ இயல் தோள்’ என்பதற்குப் ‘பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தோள்’ என்று பொருள் கூறலுமாம்.

பொரு படை ஆழி சங்கு ஏந்தும்-
பணைத்துப் பூத்த கற்பகத் தருப் போலே யாயிற்று, போருக்குக் கருவிகளான திவ்விய ஆயுதங்களைத் தரித்தால் இருக்கும்படி.
போர் செய்வதற்குக் கருவிகளாய் இருத்தலின், ‘பொரு படை’ என்கிறார்.

காவி நல் மேனி-
அவ் வாயுதங்களாலே விரோதியைப் போக்கி அனுபவிப்பிக்கும் வடிவழகு. காவி,
வடிவழகிற்கு உவமானமாக நேர் நில்லாமையாலே ‘நன் மேனி’ என்கிறார்.

கமலக் கண்ணன் என் கண்ணினுளானே
திருமேனியின் அழகாகிய பெரு வெள்ளத்திலே ஒரு சுழி போன்று திருக்கண்கள் இருத்தலின் 
‘நன்மேனிக் கமலக் கண்ணன்’ என்கிறார்.
பிராகிருத -வெளிப் பொருள்களை நுகர்ந்து போந்த இவருடைய கண்களுக்கு இறைவன் தன்னை விஷயமாக்கினான்
ஆதலின், ‘என் கண்ணினுளான்’ என்கிறார்.
இவர் கண் வட்டம் ஒழியப் புறம்பே போனால் கண் வட்டக் கள்ளனாம்
ஆதலின், ‘கண்ணினுளானே’ என ஏகாரங்கொடுத்து அருளிச் செய்கிறார்-

——————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

தோஷாதிகளால் உரு மாய்ந்த ஞானக் கலைகளை யாதாவாக ஸ்ருஷ்டிக்கைக்காக சம்ஹரிக்கும் என்றபடி –
பூவில் நால் தடம்-இதி புஜ விசேஷணம் – இயற்றப்படுவதாய் -நடத்தப்படுவதாய் -தரிக்கப்படுவதாய் –
பூவாலே இயலா நின்ற-அலங்க்ருதமான -என்றபடி -தடம் -பெருமை –
கண் வட்டம் -சஷூர் விஷய தேசம் –
கண் வட்டக் கள்வனாவது ஸ்நேஹித் தவான் சொல்லை மறுத்தால் அவன் கண் முன்னே வரப் பயப்படுமவன் –
ராம கமல பத்ராஷ -ராம -சர்வாங்க ஸூந்தர இத்யர்த்த –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: