ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் /ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை —1-9-5-

விரோதி நிரசன சீலனாய் ‘மாற்றாரை மாறு அழிக்க வல்லவனாய்,-
சர்வ ஸ்ரஷ்டாவானவன் – எல்லாப் பொருளின் தோற்றத்திற்குங்காரணனாய் உள்ளவன்
என் ஹ்ருதயஸ்தன்- மனத்தினன் ஆனான்,’ என்கிறார்.

——————

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

உயிர் செக உண்ட பெருமான் நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாக
ஒக்கவும் தோன்றிய ஈசன் மாயன் என் நெஞ்சி னுளானே-பதங்களைக் கடாக்ஷித்து அவதாரிகை

——————-

ஒக்கலை வைத்து முலைப்பால் உண் என்று தந்திட வாங்கிச்
செக்கஞ் செக அன்று அவள் பால் உயிர் செக உண்ட பெருமான்
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாக
ஒக்கவும் தோன்றிய ஈசன் மாயன் என் நெஞ்சி னுளானே–1-9-5-

ஒக்கலை வைத்து –
பரிவுடைய ஸ்ரீ யசோதைப் பிராட்டியைப் போன்று தூக்கி எடுத்து மருங்கிலே வைத்து.

முலைப்பால் உண் என்று தந்திட –
‘முலைக்கண் நெரித்து-கிலேசப்படா – வருத்தப்படா- நின்றேன்; உண்,’ என்று -உறுக்கிக் -அதட்டிக் கொடுக்க; 
அஸ்மான் ஹந்தும் ‘ஸ்ரீ இராமனைக் கொல்ல வருகின்றான்’ என்று கூற வேண்டிய இடத்தில்,
அவரைக் கொல்லுதலைத் தங்களைக் கொல்லும் கொலையாக நினைத்து,
‘நம்மைக் கொல்ல வருகிறான்’ என்று ஸ்ரீ சுக்கிரீவன் முதலியோர் கூறியது போன்று,
ஈண்டும்,ஸ்ரீ கிருஷ்ணனுக்குக் கொடுத்த நஞ்சு தமக்குக் கொடுத்தது போன்று இருத்தலால் ‘தந்திட’ என்கிறார்.
இனி, தருகை, கொடுக்கையாய் வழங்குகையாலே ‘தந்திட’ என்றார் எனலுமாம்.

வாங்கி –
அவள் முலை கொடா விடில் தரியாதாளாய்க் கொடுத்தாற்போன்று,
இவனும் முலை உண்ணா விடில் தரியாதானாய் உண்டான் ஆதலின், ‘வாங்கி’ என்கிறார்.

செக்கச் செக
செக்கம் என்று -மரணம். -அவள் கோலின மரணம் ‘ அவள் தன் பக்கலிலே பலிக்கும்படி’ என்று கூறலும் ஆம்.
செக்கம்-சிவப்பு- ஆதாவது, சீற்றம்
‘இலங்கை செந்தீ உண்ணச் சிவந்து’ என்று சீற்றத்தைச் சிவப்பாக அருளிச்செய்தார் ஸ்ரீ திருமங்கை மன்னனும்.
இனி, செக்கஞ்செக என்றது – செக்கச்சிவக்க என்றாய், ‘முலை கொடுத்த உபகாரத்தின் ஸ்ம்ருதியாலே – நினைவாலே
திரு அதரத்தில் பழுப்புத் தோற்றப் புன்முறுவல் செய்த’ என்றுமாம்

அன்று-
ஜகத் உப சம்ஹாரம் – உலகமே அழியப் புக்க அன்று;
இனி, இதற்கு ‘தனியிடத்தில் இவள் நலியப் புக்க அன்று’ என்றுமாம்.

அவள் பால் உயிர் செக-
அவளுடைய ஹேய தாழ்ந்த சரீரத்தைப் பற்றி நிற்கிற உயிர். பால்-ஏழனுருபு. செக-முடியும்படி.
இனி, ‘அவள் பால் உயிர் செக’ என்பதற்கு, ‘அவள் பாலும் உயிரும் முடியும்படி என்றுமாம். 
‘முலையூடு உயிரை, வற்ற வாங்கி உண்ட வாயான் வதரி வணங்குதுமே,’ என்றார் ஸ்ரீ திருமங்கை மன்னனும்.
‘முலை உண்டான்’ என்றால் ‘முலைப்பால் உண்டான்’ என்று பொருள் படுமாறு போன்று,
‘முலையூடு’ என்ற இடத்தும் ‘முலை’ என்றது முலைப் பாலை.

உண்ட பெருமான் – 
ஸ்தந்யந்தத் விஷ சம் மிச்ரம் ரஸ்ய மாசீஜ் ஜகாத் குரோ ‘முலையின் வழியே வருகின்ற விஷம் கலந்த பாலைக் குடித்து,
அவளை முடித்து, உலகிற்கு எல்லாம் குருவாகிய தன்னைத் தந்தவன்’ என்கிறபடியே,
அவள் முலை உண்டு அவளை முடித்து, உலகிற்கு ஒரு சேஷியைத் தந்தவன்.

நக்கபிரானோடு அயனும் இந்திரனும் முதலாக ஒக்கவும் தோற்றிய ஈசன் –
தன் கூட்டத்துக்கும் உபகாரகனாய்ப் பிரசித்தனாய் இருக்கிற சிவனோடே கூட, அவனுக்கும் தந்தையான பிரமனும்,
அவனுக்கு இப்பால் உள்ள இந்திரன் தொடக்கமாக இங்கேயுள்ள எல்லாரையும்,
அத்திக்காயில் அறுமான் போன்று ஒன்றாக அரும்பிக்கும்படி பண்ணின ஸ்ரீ சர்வேஸ்வரன்.

மாயன்-
ஸ்ருஷ்டமான -உண்டாக்கிய உலகத்திலே அநுப் பிரவேசம் முதலான ஆச்சரியமான செயல்களை யுடையவன்.
சர்வ சரீரியாய் இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் அன்றோ

என் நெஞ்சின் உளான் –
என் சரீரத்தில் ஏக தேசத்தை ஓரிடத்தைப் பற்றி நின்றான்.

——————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

முலை கொடுத்தால் ஓக்கலையிலே வைத்துக் கொடுக்கையாலே அனுக்த ஸித்தமாய் இருக்க-
ஒக்கலை வைத்து -என்று விசேஷித்தது பரிவின் கார்யம் என்றவாறு –
தந்திட உண்ட என்னாமல் வாங்கி என்றது ஆதார அதிசய உத்போதனம் இறே பலம் –
செக-போக என்ற அர்த்தத்தில் இரண்டு நிர்வாகமும் சிவப்பாய் மிகவும் சிவக்க என்று மூன்றாவது நிர்வாகம் –
அத்திக்காயில் அறுமான்-உதும்பரமாகை -அத்திக்காயில் கொசுக்கள் ஏக காலத்திலே உத்பன்னமாம் –
மாயன் -சர்வ சரீரீ என் நெஞ்சின் உளான் -ஏக தேசத்தைப் பற்ற –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: