ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –1-9-2-

‘என் பரிசரத்தில் சுற்றுப் புறத்தில் வசித்தவன், அது சாத்மித்தவாறே பொறுத்தவாறே
என் அருகே வந்து நின்றான்,’ என்கிறார்.

——————

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

சாத்மிக்க சாத்மிக்கப் பரிமாறும் என்றதையும் இங்கேயும் ஸூசிப்பியா நின்று கொண்டு –
என் அருகிலான் -என்ற பாதத்தை கடாக்ஷித்து சங்கதி அருளிச் செய்கிறார் –

————————

சூழல் பல பல வல்லான் தொல்லை அம் காலத்து உலகைக்
கேழல் ஒன்றாகி இடந்த கேசவன் என்னுடை அம்மான்
வேழ மருப்பை ஒசித்தான் விண்ணவர்க்கு எண்ணல் அரியான்
ஆழ நெடுங்கடல் சேர்ந்தான் அவன் என் அருகலிலானே–1-9-2-

சூழல் பல பல வல்லான் –
இங்குச் சூழல் என்றது, அவதாரத்தை.
சேதநரை அகப்படுத்திக் கொள்ளுமது ஆகையாலே அவதாரத்தைச் ‘சூழல்’ என்கிறார்.
ஜாதி பேதத்தையும் அவாந்தர பேதத்தையும் நோக்கிப் ‘பல பல’ என்கிறார்.
கர்மம் செய்ய வல்லது அன்று, அனுக்கிரகம் செய்ய வல்லது;
ஆதலின், கர்மம் காரணமாகப் பிறக்குமவனுக்கும் முடியாத பிறவிகளை எடுப்பவன் ஆதலால்,‘வல்லான்’ என்கிறார்.
அவற்றுள், ஒரு சூழல் சொல்லுகிறார் மேல்:

தொல்லை அம் காலத்து உலகைக் கேழல் ஒன்றாகி இடந்த கேசவன்-
ஸ்ரீ வராக கல்பத்தின் ஆதியிலே ஆதலில் ‘தொல்லை’ என்கிறார்.
தன் வடிவைக் கண்ணுக்கு இலக்கு ஆக்கின காலமாதலின், ‘அம் காலம்’ என்கிறார்.
‘ஒரு ஸ்ரீ திருவடி, ஸ்ரீ திருவனந்தாழ்வானுக்காகத் தான் இங்ஙனம் செய்தானோ! 
உலகை-
சங்கல்பத்துக்கும் பாத்தம் போராத பூமிக்காகச் செய்தான்,’ என்பார், ‘உலகை’ என்கிறார்;
கேழல்-
தன் மேன்மையோடு அணைந்து இருப்பது ஒரு வடிவைத் தான் கொண்டானோ!’ என்பார், ‘கேழல்’என்கிறார்.
ஒன்றாகி-
பின்னர், சர்வ சத்தியான தானே ‘இவ் வடிவைக் கொள்ளவேண்டும்’ என்னிலும் ஒண்ணாதபடி
இரண்டு அற்றதாய் இருந்தது ஆதலின், ‘ஒன்றாகி’ என்கிறார்.
அதாவது, பூமி பிரளயத்தில் அகப்பட்டவாறே, நீருக்கும் சேற்றுக்கும் பின் வாங்காத வடிவைக் கொண்டான்;
அது அவன் கொண்ட வடிவாகையாலே அழிவுக்கு இட்ட வடிவு தனக்கே ஆலத்தி வழிக்க வேண்டியிருக்கின்றது என்றபடி. 
‘பன்றியாம் தேசு’ என்பர் சூடிக் கொடுத்த சுடர்க்கொடியார். 
பன்றியின் ஜாதிக்கு உள்ளது ஒரு குணமாயிற்றுச் செருக்கு.
இடந்த-
ஸ்ரீ யபதி -திருமகள் கேள்வன் அவ்வடிவைக் கொண்டால் செருக்குச் சொல்ல வேண்டாவே! ஆதலின், ‘இடந்த’ என்கிறார்.
அதாவது, ‘அண்டப்பித்தியிலே சேர்ந்த பூமியைப் புக்கு எடுத்துக்கொண்டு ஏறினான்,’ என்பதாம்.
கேசவன்-
அப்போதைத் திருமேனியும் உளை மயிருமாய் நின்ற நிலையினை நினைந்து. ‘கேசவன்’என்கிறார். கேசம் – மயிர்.

என்னுடை அம்மான் –
சம்சாரப் பிரளயங்கொண்ட என்னை எடுத்தவன்.

வேழம் மருப்பை ஒசித்தான் –
குவலயாபீடத்தினுடைய தந்தங்களை வருத்தம் இன்றி முறித்தவன்.
அப்படியே, என்னுடைய மத களிறுகளாகிய ஐம் பொறிகளையும் சேரி திரியாமல் செய்தவன் என்பதனைக் குறித்தபடி.
விரோதி நிரசன சீலன் என்றபடி

விண்ணவர்க்கு எண்ணல் அரியான் –
தனியே குவலயாபீடத்தோடே போர் செய்தவன், பிரமன் சிவன் இவர்கள் மனத்தின் எண்ணத்திற்கும் அப்பாற்பட்டவன்.

ஆழம் நெடுங்கடல் சேர்ந்தான் –
அந்தப் பிரமன் முதலாயினாருடைய கூக் குரல் கேட்கத் திருப் பாற் கடலிலே சாய்ந்தருளினவன்.
உறுத்தாமைக்கு ஆழமும், 
‘தாளும் தோளும் முடிகளும் சமன் இலாத பல பரப்பி’ வேண்டினபடி கண் வளர்ந்தருளுகைக்கு நெடுமையும் கூறுவார்,
‘ஆழ நெடுங்கடல்’ என்கிறார்.

அவன் என் அருகலிலான் –
‘பிரமன் சிவன் முதலானவர்கட்குப் போல, அதூர விப்ரக்ருஷ்டமாயும் -சேய்மையும் அணிமையும் இல்லாத
நடுவிடத்திலும் நிற்கின்றான் இலன், அருகில் இருக்கின்றான்’ என்பார், ‘அருகலிலான்’ என்கிறார்-
‘வாரி சுருக்கி மத களிறு ஐந்தினையும், சேரி திரியாமல் செந் நிறீ இ’ (முதல் திருவந். 47.)

—————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

சேதனரை சூழ்ந்து கொள்ளுமவை சூழல்-என்றபடி -கீழ் போலே சூழல் என்றது பரிசர வாசி அன்று –
கேழல் ஒன்றாகி -என்று அவதாரத்தைச் சொல்லுகிற பிரகரணம் ஆகையால் அவதார வாசகம் –
இப்போது ஹர்ஷ தசை ஆகையால் தம்மைச் சூழ்த்துக் கொள்ளுகிற இதுக்கு உபபாதகமாக
அவதாரங்களை அருளிச் செய்கிறார் –
நிர்வேத தசையில் -மம மாயா துரத்யயா -பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ –
நெறி காட்டி நீக்குதியோ இத்யாதிகளை சொல்லுமே –
வல்லான் -புத்தி பூர்வ கரண சாமர்த்தியம் -இச்சா நிபந்தம் -கர்மா நிபந்தம் இல்லையே –
அனுக்ரஹம் நித்யமாமாம் போலே தத் கார்யமான இச்சையும் நித்யம் –
பரார்த்தமாக அநேக அவதாரங்கள் உண்டு என்றபடி –
தோற்றிற்று ஒன்றான வடிவைக் கொண்டாலும் அத்விதீயமாக இருக்குமே –
பன்றியாம் தேஜஸ்ஸூ ஆஸ்ரித அர்த்தமாகத் தன்னை அழிய மாறுகையாலே வந்த தேஜஸ்ஸூ
உலகை இடந்த கேசவன் என்னுடை அம்மான் -என்று கூட்டி பாவம் –
அருகலிலான்-அருகான இடத்திலே யானான் -என்றபடி -அருகல் -அந்திகம் –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: