ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை — -1-7-8-

‘நான் விடேன், அவன் விடான்’ என்பன போன்று கூறுதல் எற்றிற்கு?
இனி, அவன் தான் ‘பிரிப்பன்’ என்னிலும் அவனுடைய கல்யாண குணங்களிலே அகப்பட்ட
என் நெஞ்சை அவனாலும் பிரிக்கப் போகாது’ என்கிறார்.

——————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

என்னுடை நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் -என்ற பதங்களைக் கடாக்ஷித்து
சங்கதி அருளிச் செய்கிறார்

————————–

என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நல் நெஞ்சம்
தன்னை அகல்விக்கத் தானும் இங்கு இல்லான் இனிப்
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை
முன்னை அமரர் முழு முதலானே–1-7-8-

என்னை நெகிழ்க்கிலும் –
மயர்வு அற மதிநலம் அருளப்பெற்ற என்னைத் தானே அகற்றல் அரிது.
இவ்வரிய செயலைச் செய்யினும்.

என்னுடை நல்நெஞ்சம் தன்னை அகல்விக்க-
‘நெஞ்சே இயற்றுவாய் எம்மொடு நீ கூடி’ என்றும், 
‘தொழுது எழு என் மனனே’ என்றும் சொல்லலாம்படி அவன் பக்கலிலே உட்புகுந்த நெஞ்சந்தன்னை அகல்விக்க.

தானும் கில்லான்
சர்வ சக்தி என்னா, எல்லாம் செய்யப்போமோ? ஏன்? செய்து போந்திலனோ பல் நெடுங்காலம்?’ என்ன,

இனி-
அவனும் இனி மேல் உள்ள காலம் மாட்டான். 
‘இனி’ என்கிற ‘உரப்பு எதனைப் பற்ற?’ என்னில், அதற்குக் காரணம் அருளிச் செய்கிறார் மேல்:

பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை முதலான்-
நப்பின்னைப் பிராட்டியுடைய நெடிதாய்ச் சுற்றுடைத்தாய்ப் பசுமையை யுடைத்தாயுள்ள மூங்கில் போன்று இருக்கின்ற
தோளோடே அணைக்கையால் வந்த பெருமையை யுடையவன்.

முன்னை அமரர் முழு முதலான்-
யத்ர அர்ஷய பிரதமஜா யே புராணா  ‘ஞானவான்களும் முன்னர்த் தோன்றியவர்களும்
ஆதி முதற்கொண்டே முதியராய் இருந்தும் புதியராய்த் தோன்றுகிறவர்களுமான நித்திய ஸூரிகள் எங்கு உள்ளார்களோ,
அந்தப் பரம பதத்தில்’ என்கிறபடியே, பழையராய் இருந்துள்ள நித்திய ஸூரிகளுடைய
ஸ்வரூபம் ஸ்திதி முதலானவைகள் தன் அதீனமாம்படி இருக்கிறவன்.
ஆதலால், ‘தானும் கில்லான்’ என முடிக்க.

எனவே, ‘ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டி புருஷகாரமாக நித்திய ஸூரிகள் ஓலக்கம் இருக்க
அடிமை புக்கு அந்தப்புரப் பரிகரமான இவ் வாத்துமாவை அகற்றப் போகாது,’ என்றபடியாம்.
ஹர்யர்ஷ கண சந்நிதவ் இனி, ‘முதுமை நிறைந்த வானரங்களின் கூட்டத்தில் சூளுறவு செய்தான்’ என்கிறபடியே,
நித்திய ஸூரிகள் முன்னிலையில் சூளுறவு செய்தான்;
ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டி புருஷகாரம் அகற்றும்படி எங்ஙனே?’ எனலுமாம்.

———————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

யதி சப்தார்த்தம் -மயர்வற மதி நலம் அருள பெற்ற தன்னை -என்றவாறு –
சர்வ சக்தி -என்றது தானின் அர்த்தம் –
நெடும் காலம் -சம்சாரத்தில் வைத்த காலம் –
முன்னை அமரர் -ருஷாய -ஞானி ந -பிரதமஜா -புராணா-புர அபி நவ-நித்ய போக்யா
முழு -ஸ்வரூப ஸ்திதியாதிகள் எல்லாவற்றுக்கும் -முதல் -காரணமாய் இருக்கிறவன் -என்றபடி –
அவர்கள் சந்நிதியில் என்றது நித்ய ஸூரிகள் சந்நிதியில் என்றபடி –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading