ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை —1-7-9-

‘தானும் கில்லான்’ என்ற -பிரசங்கம் – கூறுதல் தான் என்? –
ஏக த்ரவ்யம் -ஒரே பொருள்- என்னலாம்படியான இவ்வுயிரைப் பிரிக்கும்படி எங்ஙனே?’ என்கிறார். 

————————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

அமரத் தழுவிற்று இனி அகலுமோ -என்றதைக் கடாக்ஷித்து அவதாரிகை அருளிச் செய்கிறார் –

—————————–

அமரர் முழு முதல் ஆகிய ஆதியை
அமரர்க்கு அமுது ஈந்த ஆயர் கொழுந்தை
அமர அழும்பத் துழாவி என் ஆவி
அமரத் தழுவிற்று இனி அகலுமோ?–1-7-9-

அமரர் முழு முதல் ஆகிய-
நித்திய ஸூரிகளுடைய ஸ்வரூபம் ஸ்திதி முதலானவைகள் தன் அதீனமாம்படி இருக்கிறவனை.

ஆதியை-
இது தொடங்கி லீலா வீபூதியை விஷயமாய் இருக்கிறது
‘தன் பக்கலுள்ள பாவ பந்தம் -சத்தா ப்ரயுக்தம் இன்றிக்கே –
ஆத்துமாவை விட்டுப் பிரிக்க முடியாதது என்பதனை அறியாமல்- இருக்கிறவர்கட்கும்
தன்னை வழிபடுகைக்கு உறுப்பாகக் கரணங்களையும்-களேபரங்களையும் – உடல்களையும் கொடுக்குமவனை.
‘ஆதியை’ என்பது முதலைப் பற்றியது.
‘‘அமரர்க்கு முழுமுதல்’ என்றவர், ‘லீலா விபூதிக்கு ஆதியை’ என்னக் காரணம் யாது?’ எனின்,
இவ்வுலகில் உள்ளார்க்கும் நித்திய ஸூரிகளைப் போன்று சம்பந்தம் உண்டாயிருக்கவும்,
இவர்கட்கு இச்சை இல்லாமையாலே, யோக்கியதையைப் பண்ணிக் கொடுக்குமளவே செய்கிறான்
ஆதலின், ‘ஆதியை’ என்கிறார் .

அமரர்க்கு அமுது ஈந்த-
அவன் கொடுத்த கரணங்களைக்கொண்டு, ‘எங்களுக்கு நீ வேண்டா; உப்புச் சாறு அமையும்,’ என்பார்க்குக்
கடலைக் கடைந்து அமிருதத்தைக் கொடுக்குமவனை.

ஆயர் கொழுந்தை-
‘அவ் வமிருதம் வேண்டா, நீ அமையும்,’ என்பவர்கட்காக வந்து அவதரித்துத் தன்னைக் கொடுக்குமவனை.

என் ஆவி அமர அழும்பத் துழாவி அமரத் தழுவிற்று-
இப்படி இரண்டு உபய விபூதி யுக்தனாய் இருக்கிறவனைக் கிட்டிச் செறிந்து எங்கும் புக்கு அனுபவித்து,
எனது உயிரானது-ஏக த்ரவ்யம் – ஒரே பொருள் என்னலாம்படி கலந்தது.

இனி அகலுமோ-
இரண்டு பொருளாகில் அன்றோ பிரித்தல் இயலும்?
ஆயின், ஸ்வரூபத்தால் ஐக்கியம் சொல்லுகிறாரோ?’ என்னில்,
பிரகாரமும் பிரகாரியும் ஒரே பொருள் என்னும் புத்தி பிறந்தால் பிரிக்கப் போமோ?’ என்கிறார்;
‘ஆயின், ஜாதி குணங்களை அன்றோ பிரித்தல் இயலாது?
உயிர் உடல்கள் ஆகிற இரு பொருள்களைப் பிரித்தல் இயலாது என்றல் பொருந்துமோ?’ எனின்,
ஜாதி குணங்களைப் போன்று பொருளுக்கும் நித்ய தத் ஆஸ்ரயத்வம் உண்டாகில் பிரிக்கப் போமோ?’ என்றபடி
நித்திய தத் ஆஸ்ரயத்வ புத்தி பிறந்தால்’ என்றபடி.
நித்ய தத் ஆஸ்ரயத்வம்-எப்பொழுதும் ஒரு பொருளை மற்றொரு பொருள் சேர்ந்தே இருத்தல்.
ஈண்டு, விளக்கு, விளக்கின் ஒளி என்னும் இரண்டும், இரண்டு பொருள்களாய் இருப்பினும்,
‘ஒன்றனை விட்டு ஒன்றைப் பிரிக்க முடியாமல் இருக்குமே –

———————

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

அமரருடைய முழுவதுக்கும் முதலாகிய என்பதைத் திரு உள்ளம் பற்றி அருளிச் செய்கிறார் –
கொழுந்து -போக்யதா பரம் -/ அமர -அமர்ந்து -கிட்டி /அழும்ப -அழும்பி-செறிந்து – /துழாவி -எங்கும் புக்கு அனுபவித்து /
அமரத் தழுவிற்று -ஏக திரவ்யம் என்னலாம் படி பொருந்தக் கலந்து –
ஸ்வரூப ஐக்கியம் இல்லை -பிரகார பிரகாரி பாவேந ஏகத்வ புத்தி பிறந்தால் என்றபடி –
பிரபா பிரபாவத் திருஷ்டாந்தம் -இரண்டும் த்ரவ்யம் இறே
நித்ய தத் ஆஸ்ரயத்வ புத்தி உண்டாகில்-ஸ்வா பாவிக சேஷ சேஷி பாவ ஞானம் உண்டான பின்பு
தத் அனுபவ கைங்கர்யங்களை இழந்து தரித்து இருக்கை எங்கனே என்று தாத்பர்யம் –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: