ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -1-7-4-

இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை’ என்று அடியிலே நீர் அபேக்ஷித்தபடியே இறைவன் திருவருள் செய்ய,
‘மாயப் பிறவி மயர்வு அறுத்தேன்’ என்று பிறவி அற்ற தன்மையினை நீரே கூறினீரே!
இனி, இறைவனை விட்டுப் பிடித்தல் பொருத்தம் உடைத்து அன்றோ?’ என்ன,
‘நான் என்ன ஹேதுவால் – காரணத்தால் விடுவேன்?’ என்கிறார்.

மயர்வு அற என் மனத்தே மன்னினான் தன்னை
உயர் வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையை
அயர்வு இல் அமரர்கள் ஆதிக் கொழுந்தை என்
இசைவினை என் சொல்லி யான் விடு வேனோ?–1-7-4-

மயர்வு அற –
அஞ்ஞானமானது -அறிவின்மையானது வாசனையோடே போக

என் மனத்தே மன்னினான் தன்னை –
இன்னமும் மயர்வு குடி கொள்ள ஒண்ணாது என்று என்னுடைய மனத்திலே புகுந்து-
ஸ்தாவரப் பிரதிஷ்டையாக – நிலையியற் பொருளைப் போன்று இருந்தவனை,
செடி சீய்த்துக் குடி ஏற்றின படை வீடுகளை விடாதே இருக்கும் அரசர்களைப் போன்று,
‘புறம்பேயும் -ஒரு கந்தவ்ய பூமி -சேரத் தக்க இடம் உண்டு’ என்று தோற்ற இராமல் இருக்கின்றான்
ஆதலின், ‘மனத்தே’ எனப் பிரிநிலை ஏகாரம் கொடுத்து ஓதுகின்றார். ‘இப்படி இருந்து செய்கிறது என்?’ என்னில்,

உயர் வினையே தரும் – 
ஞான விஸ்ரம்ப பத்திகளைத் தாராநின்றான்.
இனி, இதற்கு, -யமாதிகள் -யமன் முதலானோர் தலைகளிலே அடியிடும்படியான –
உத் கர்ஷத்தை -சிறப்பைத் தாராநின்றான்’ எனலுமாம்.

தரும்
தந்து சமைந்தானாய் இராது மேன்மேலும் தந்து கொண்டே யிருக்கின்றான்
ஆதலின், ‘தந்து’ என்னாது ‘தரும்’என்கிறார்.
‘ஆயின், பத்தியை மேன்மேலும் தருவானோ?’ என்னில், 
‘காதல் கடல்புரைய’,
‘காதல் கடலின் மிகப்பெரிதால்’, 
‘நீள்விசும்பும் கழியப் பெரிதால்’, 
‘சூழ்ந்தனிற் பெரிய என் அவா’ என்பன இவருடைய திருவாக்குகள்.

ஒண் சுடர்க் கற்றையை –
இதனால், எனக்கு உபகரித்தானாய் இருத்தல் அன்றியே,
‘தான் உபகாரங்கொண்டான்’ என்னுமிடம் வடிவில் புகரிலே தோற்ற ‘இராநின்றான்’ என்கிறார்.
இனி, இதனால், தம்மை வசீகரித்த அழகை அருளிச் செய்கின்றார் என்று கூறலுமாம்.
தேஜாசாம் ராசி மூர்ஜிதம் ‘வலிமை பெற்ற ஒளியின் தொகுதி போன்றவன்’ என்பது ஸ்ரீ விஷ்ணு புராணம்.
‘இப்படித் தன் பேறாக உபகரித்தவன், தன் உபகாரங்கொள்வார் இல்லாதான் ஒருவனோ?’ என்னில்,

அயர்வு இல் அமரர்கள் ஆதிக்கொழுந்தை-
இறைவனை நுகரும் நுகர்ச்சிக்கு-பகவத் அனுபவ விஸ்ம்ருதிக்கு ப்ராக பாவத்தை யுடையராய் –
மறதி என்பதனை எப்பொழுதும் இல்லாதவர்களாய்,
அந்நுகர்ச்சிக்குப் பிரிவு வருமோ என்ற ஐயமும் இல்லாதவர்களாய்-பகவத் அனுபவத்துக்கு விச்சேத சங்கை இன்றிக்கே –
தாங்கள் பலராய் இருக்கின்ற நித்தியசூரிகட்குத்
தாரகம் முதலானவைகள் எல்லாம் தானேயாய் இருக்கின்றவன்.
இதனால், தான் அருளாத அன்று, தங்கள் -சத்தை கொண்டு -ஆன்மாவைக் கொண்டு ஆற்றமாட்டாதாரை
ஒரு நாடாகவுடையவன் என்கிறார்.

என் இசைவினை –
‘நான் அல்லேன்’ என்று அகலாதபடி  என் இசைவு தானாய்ப் புகுந்தவனை.

என் சொல்லி யான் விடுவேன் – 
1-‘சிறிது மயர்வு கிடந்தது’ என்று விடவோ? -மயர்வு அற
2-‘மயர்வைப் போக்கித் தான் கடக்க இருந்தான்’ என்று விடவோ?- என் மனத்தே மன்னினான்
3-‘எனக்கு மேன்மேலென நன்மைகளைப் பண்ணித் தந்திலன்’ என்று விடவோ? உயர் வினையே தரும்
4-‘தான் செய்த உபகாரத்துக்குக் கைம்மாறு-ப்ரத்யுபகாரம் – கொள்ள இருந்தான்’ என்று விடவோ? -ஒண் சுடர்க் கற்றையை
5-‘வடிவழகு இல்லை’ என்று விடவோ? -ஒண் சுடர்க் கற்றையை
6-‘மேன்மை போராது’ என்று விடவோ? -அயர்வு இல் அமரர்கள் ஆதிக் கொழுந்தை
7-‘இப்பேற்றுக்கு-கிருஷி பண்ணினேன் – முயற்சி செய்தேன் நான்’ என்று விடவோ? என் இசைவினை
எதனைச் சொல்லி நான் விடுவேன்?’ என்கிறார்.

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: