ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -1-7-3-

ப்ரயோஜனாந்தர பரரான கேவலரை நிந்தித்தார் முதற்பாசுரத்தில்;
இரண்டாம் பாசுரத்தில், அநந்ய பிரயோஜனர் திறத்தில் அவன் இருக்கும்படியை அருளிச் செய்தார்.
‘இவ்விருதிறத்தாரில் நீவிர் யாவிர்?’ என்ன,
‘நான் ப்ரயோஜனாந்தர பரன் அல்லேன்; அநந்ய பிரயோஜனனாய் அவனைப் பற்றினேன்,’ என்று
நேர்கொடு நேரே சொல்லவும் மாட்டாரே; ஆதலால்,
‘அவனை அனுபவியாநிற்க,விரோதி தன்னடையே போய்க்கொண்டு நின்றவன் நான்,’ என்கிறார் இப்பாசுரத்தில்.

ஆயர் கொழுந்தாய் அவரால் புடை உண்ணும்
மாயப் பிரானை என் மாணிக்கச் சோதியைத்
தூய அமுதைப் பருகிப் பருகி என்
மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே–1-7-3-

ஆயர் கொழுந்தாய் –
ஆயர்கட்குப் பிரதாநனாய் இருக்கும் இருப்பை அருளிச்செய்தார் கீழ் -;
இங்கு, அவர்களில் ஒருவனாய் -ஏக தேசஸ்தனாய் -இருக்கும்படியைச் சொல்லுகிறார்.
அதாவது, – அவர்கள் வேராக–தான் கொழுந்தாய்- இருக்குமவன் என்கிறார்.
இதனால், வேரிலே வெப்பம் தட்டினால் கொழுந்து முற்படவாடுவது போன்று,
காட்டிலே பசுக்களின் பின்னே திரிகின்ற ஆயர்கட்கு அடி கொதித்தால்
ஸ்ரீகிருஷ்ணன் முகம் முதற்கண் வாடும் என்பதனைத் தெரிவித்தபடி.

அவரால் புடை உண்ணும்-‘
திருவாய்ப்பாடியில் உள்ள ஐந்து லட்சம் குடிகளிலும் ஸ்ரீ கிருஷ்ணனை நியமிக்க உரியர் அல்லாதார் இலர்’ என்பார்,
அவனால் அல்லது அவளால் என்று கூறாது, ‘அவரால்’ எனப் பன்மை வாசகத்தால் அருளிச்செய்கிறார்.
‘மரத்தாலே ஓர் அடி அடிப்பார் போலேகாணும்’ என்று பட்டர் அருளிச்செய்யும்படி.

மாயப் பிரானை –
அவாப்த ஸமஸ்த காமனான சர்வேஸ்வரன், தனக்கு ஒரு குறை உண்டாய் வந்து அவதரித்து,
ஆஸ்ரிதர் ஸ்பர்சமுள்ள பொருளால் அல்லது தரியாதானாய்,
அதுதான் நேர்கொடு நேர் கிடையாமையாலே களவு காணப் புக்குத்
தலைக்கட்டமாட்டாதே வாயது கையது ஆக அகப்பட்டுக்
கட்டுண்டு
அடியுண்டு நிற்கும் நிலையை நினைத்து ‘மாயப்பிரானை’ என்கிறார்.

என் மாணிக்கச் சோதியை-
அடியார்கள் கட்டி அடிக்க அடிக்க களங்கம் அறக் கடையுண்ட மாணிக்கம் போன்று,
திருமேனி புகர் பெற்று வருகிறபடி.
‘ஆயின், அடி யுண்டால் புகர்பெறக் கூடுமோ?’ எனின், 
‘கண்ணியார் குறுங்கயிற்றால் கட்ட வெட்டு என்று இருந்தான்’ என்கிறபடியே,
‘கட்டின அளவிற்கு வெட்டு என்று இருக்குமவன், கட்டி அடிக்கப் புக்கால் புகர் பெறச் சொல்ல வேண்டுமோ?’ என்க.

என் சோதியை
அப்புகரைத் தனக்கு முற்றூட்டு ஆக்கினான் ஆதலின், ‘என் சோதியை’என்கிறார்.

தூய அமுதைப் பருகிப் பருகி –
தேவர்கள் அதிகாரிகளாய், பிரமசரியம் முதலிய நியமங்கள் வேண்டி,-
ஸக்ருத் ஸேவ்யமாய் – ஒவ்வொரு காலவிசேடங்களில் உண்ணக்கூடியதாய் இருக்கும் அவ்வமிர்தத்தைக்காட்டிலும்,
சர்வாதிகாரமுமாய், ஒரு நியதியும் வேண்டாமல் எப்பொழுதும் நுகரக்கூடியதாய் இருக்கும்
இவ்வமிர்தத்தின் வேறுபாட்டினைக் காட்டுவார், ‘தூய அமுது’ என்கிறார்.

என் மாயப்பிறவி மயர்வு அறுத்தேன் –
ஆச்சரியமான பிறவு காரணமாக வரும் அறிவின்மையை வாசனையோடே போக்கினேன்.
பிறவிக்கு ஆச்சரியமாவது,ஒருபடிப்பட்டு இராமை.
‘மயர்வை அறுத்தவன் இறைவனாக இருக்க, ‘அறுத்தேன்’ என்று தம் தொழிலாகக் கூறல் பொருந்துமோ?’ எனின், 
‘இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை’ என்று விரும்பியவர் தாமேயாதலின்,’ -அபேக்ஷித்தபடியே -விரும்பியவாறே
பல அனுபவம் தம்மது ஆகையாலே ‘அறுத்தேன்’ எனத் தம் தொழிலாக அருளிச் செய்கிறார்.

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: