ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -1-7-2-

‘சர்வேஸ்வரனை ஆஸ்ரயித்து ஷூத்ர – சிறிய பயனைக் கொண்டு போவதே!’ என்று கேவலனை நிந்தித்தார்;
அவன்தன்னையே பற்றி இருக்குமவர்களுக்கு அவன் தான் இருக்கும் படியை அருளிச்செய்கிறார் இப்பாசுரத்தில்

வைப்பாம் மருந்தாம் அடியரை வல் வினைத்
துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடான் அவன்
எப்பால் எவர்க்கும் நலத்தால் உயர்ந்து உயர்ந்து
அப்பா லவன் எங்கள் ஆயர் கொழுந்தே–1-7-2-

வைப்பாம் –
ஆடு அறுத்துப் பலியிட்டு-‘-அரைப்பையாக்கி -பணப்பையாக்கி,- இஷ்ட விநியோக அர்ஹமாம்படி –
தான் விரும்பிய காலத்தில் நுகர்தற்குச் -சேமித்து வைக்கும் சேமநிதி போன்று,
ஒருவன் நினைத்த வகைகள் எல்லாம் அநுபவிக்கலாம்படி இறைவன் தானே தன்னை
இஷ்ட விநியோகத்திற்குத் தகுதி ஆக்கி வைப்பவன் ஆதலின், ‘வைப்பாம்’ என்கிறார்.
இதனால், பிராப்யத்வம் கூறியபடி.

மருந்தாம் –
‘ஆயினும்,-ஷூத்ர – சிறிய விஷயங்களையும் உண்டு அறுக்க மாட்டாத இவ்வுயிர்கட்கு அன்றோ
சர்வாதிகனான தன்னை விஷயம் ஆக்குகிறான்?
இவன் அவ்விறைவனை அனுபவிக்கும்படி என்?’ என்னில்,
அக்குறைகள் வாராதபடி அனுபவ விரோதிகளைப் போக்கித் தன்னை அனுபவிக்கைக்குத் தகுதியான
சத்தி யோகத்தையுங் கொடுத்துத் தன்னையும் கொடுக்குமவன் ஆதலின், ‘மருந்தாம்’ என்கிறார்.
இதனால், பிராபகத்வம் கூறிய படி.

ஆக ‘வைப்பாம் மருந்தாம்’ என்னும் இவ்விரண்டாலும் பிராப்யத்துவமும் பிராபகத்துவமும் அருளிச்செய்தார் ஆவர்.

ய ஆத்மதா பலதா — ‘இறைவன் தன்னைக் கொடுக்கிறான்; தன்னை அனுபவிப்பதற்குத்
தக்க வலிமையையுங் கொடுக்கிறான்,’ என்பது வேத மொழி.
‘இப்படிச் செய்வது யார்க்கு?’ என்னில்,
அடியரை-
ந நமேயம் ‘வணங்கமாட்டேன்’ என்னும் நிர்ப்பந்தம் தவிர்ந்தார்க்கு,
இனி, இதற்கு, ‘அவனைப்பற்றி வேறு ஒரு பயனைக் கொண்டு அகலாமல், அவன்தன்னையே பற்றி
அவன் படிவிடப் ஜீவித்து இருப்பாரை அடியார்கள்’ என்று பொருள் கூறலுமாம்.

வல்வினை துப்பு ஆம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடான்-
வலிய வினைகளிலே கொண்டுபோய் மூட்டுகைக்கு ஈடான வலிய இந்திரியங்கள் ஐந்தாலும் துஞ்சக்கொடான்.
இனி, புலன் ஐந்தும் துஞ்சக்கொடான் என்பதற்கு, ‘ஐந்து இந்திரியங்களிலும் புக்குத் துஞ்சக்கொடான்’ என்று பொருள் கூறலுமாம்.
துப்பு -என்று சாமர்த்தியம்
‘அவன் என்கிறது யாரை? அவன்தான் இப்படிச் செய்ய எங்கே கண்டோம்?’ என்னில், அதனை விரித்து விளக்குகிறார் மேல் :

எப்பால் எவர்க்கும் –
எல்லா இடத்திலும் உண்டான எல்லார்க்கும். ஸ்தான பேதங்களாலும் -இட வேற்றுமையாலும்-மனுஷ்யாதி தேக பேதங்களாலும் –
உடல் வேற்றுமையாலும் வரக்கூடிய சில உயர்வுகள் உள அன்றே?
பூமியைப் போன்றது அன்றே சுவர்க்கம்; மனிதர்களைப் போல் அல்லரே தேவர்கள்;
இவ்விரண்டும் அடங்க ‘எப்பால் எவர்க்கும்’ என்கிறார்.
எப்பால் -எல்லா இடத்திலும் என்றபடி -‘அப்பால், இப்பால்’ என்பன போன்று ‘பால்’ என்பது இடத்தைக் காட்டும்.
எல்லா இடத்திலும் உண்டான எல்லாருக்கும்

நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பாலவன் –
ஆனந்தத்தாலே மேலே மேலே சென்று, பின்னையும் அது தன்னைச் சொல்லப் புக்கால் 
யாதோ வாசோ நிவர்த்தந்தே -‘எந்த ஆனந்த குணத்தினின்றும் மனத்தோடு வாக்குகள் திரும்புகின்றனவோ’ என்கிறபடியே
மீள வேண்டும்படியான -ஆனந்த பிராஸுர்யம் -ஆனந்தத்தின் மிகுதியை யுடையவன்,
அதாவது,-சத குணி ஸ்தோத்ர க்ரமத்தாலே அப்யஸ்யமானமாகா நின்றுள்ள நிரதிசய ஆனந்த யுக்தன் – –
மனிதர்களுடைய ஆனந்தத்தைக்காட்டிலும் நூறு மடங்கு அதிகம் தேவர்களுடைய ஆனந்தம்;
அவர்களுடைய ஆனந்தத்தைக்காட்டிலும் நூறு மடங்கு அதிகம் இந்திரனுடைய ஆனந்தம்;
அவனுடைய ஆனந்தத்தைக்காட்டிலும் நூறு மடங்கு அதிகம் சிவனுடைய ஆனந்தம்;
அவனுடைய ஆனந்தத்தைக் காட்டிலும் நூறு மடங்கு அதிகம் பிரமனுடைய ஆனந்தம் என்று இப்படி
ஏற்றிக்கொண்டே சென்று கூறப்படுகின்றதாய், இதைக் காட்டிலும் மேம்பாடு இல்லாததாய் உள்ள
ஆனந்தத்தையுடையவன் என்றபடி,
‘ஆனந்தமய’ என்னக் கடவது இ றே

எங்கள் ஆயர் கொழுந்தே –
‘இப்படி -சர்வாதிகனானவன் -அறப் பெரிய இறைவன்-இதர சஜாதீயனாய் மற்றையாரோடு ஒத்த சாதியையுடையவனாய்
வந்து அவதரித்தது, தன்னை ஆஸ்ரயித்தார்- அடைந்தவர்கள்-விஷய ப்ரவணராய் –
ஐம்புல ஆசையினராய் முடியும்படி விட்டுக் கொடுக்கவோ?
தான் சோக மோகங்களை அனுபவிக்கிறது, தன்னைப் பற்றினார் சோக மோகங்களை அனுபவிக்கைக்காகவோ?
மேன்மைக்குஎல்லையானவன் தாழ்வுக்கு எல்லையாயினது, இவர்களைக் கேட்டினை அனுபவிக்கவிடவோ?-
அநர்த்தப்பட விடவோ என்கிறார்.

எங்கள் ஆயர் கொழுந்தே
கிருஷ்ணன் திருவவதரித்த ஊரில் உள்ளாரோடு தமக்கு ஒரு-பிராகிருத – சரீர சம்பந்தத்தினை விரும்பி, 
‘எங்கள் ஆயர்’ என்கிறார்.
அன்றி, எங்கள் – அவதாரந்தான் அடியார்களைக் காப்பதற்காகவே எடுக்கப்பட்டது ஆதலானும்,
வெண்ணெய் களவு கண்டு புசித்ததனால் நகரம் கலங்கிய செய்தி பழையதாக எழுதிக் கிடக்கவும்,
அதனைக் கூறிய அளவில் ‘எத்திறம்’ என்று மோகித்தவர் இவரே ஆதலானும், எங்கள் கொழுந்து’ என்கிறார்
என்று கொண்டு, ‘எங்கள்’ என்பதனைக் கொழுந்திற்கு அடைமொழி ஆக்கலுமாம்.
இனி, தான், பிரமன் முதலிய தேவர்கட்குத் தலைவனாக இருத்தலால் உளதாய பெருமையைப் போன்றே,
ஆயர்தங்களுக்குத் தலைவனாய் இருத்தலால் உளதாய பெருமையையும் பெருமையாக நினைக்கிறான் என்பார், 
‘ஆயர் கொழுந்தே’ என்கிறார் எனலும் ஒன்று. ஆயர் கொழுந்து – ஆயர்கட்கு முதல்வன்

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: