ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -1-6-9-

தன்னைப் பற்றின் அளவில் இப்படி விரோதிகளைப் போக்கி இப்பேற்றினைத் தரக்கூடுமோ?’ என்னில்,
‘வெறும் அவன் படியையோ பார்ப்பது!
அருகே இருக்கிறார் படியையும் பார்க்க வேண்டாவோ? 
ந கச்சின் ந அபராத்யதி ‘குற்றம் செய்யாதவர் ஒருவரும் இலர்,’ என்பவர் அன்றோ அருகில் இருக்கிறார்?’ என்கிறார்

தரும அரும் பயனாய திரு மகளார் தனிக் கேள்வன்
பெருமை யுடைய பிரானார் இருமை வினை கடிவாரே–1-6-9-

தரும் –
இவ்வர்த்தத்தில் -இப்பொருளில்-சம்சயம் – ஐயம் இன்று.

அவ்வரும் பயனாய –
பெறுதற்கு அரிதாகச் சாஸ்த்ரங்களிலே பிரசித்தமான பிரயோஜன ரூபமானவற்றை.
அன்றிக்கே -‘பயனாய’ என்பதனை வினையாலணையும் பெயராகக் கொள்ளாது, பெயரெச்சமாகக் கொண்டு,
திருமகளுக்கு அடைமொழியாக்கி,
தருமத்தினுடைய-பரம – மேலான பிரயோஜனந்தான் ஒருவடிவு கொண்டாற்போன்று இருக்கின்ற
பெரிய பிராட்டியார் என்று பொருள் கூறலும் ஒன்று.

திருமகளார் தனிக்கேள்வன் –
பெரிய பிராட்டியாருக்குக் கணவன் ஆகையாலே-அத்விதீய  இரண்டாம் விரலுக்கு ஆள் இல்லாதபடி -நாயகனாய் இருக்கிறவன். 
அப்ரமேயம் ஹி தத் தேஜ -ஜனக குலத்தில் அவதரித்த பிராட்டியானவள் எவனுக்கு மனைவியாக இருக்கின்றாள்?
அவனுடைய திறல் வலி முதலாயின அளவிட முடியாதனவாக இருக்கின்றன,’ என்கிறபடியே.
ஸ்ரீ யப்பதி- திருமகள் கேள்வன் ஆகையாலே வரும் ஏற்றம் உள்ளது இவன் ஒருவனுக்குமே ஆதலின், ‘தனிக் கேள்வன்’ என்கிறார்.

பெருமையுடைய பிரானார் –
இலட்சுமிபதி ஆகையாலே வந்த மேன்மையுடைய உபகாரகர் ஆனவர். –
ஆஸ்ரித அநுக்ரஹமே -அடியார்கட்கு அருள் புரிதலே ஸ்வரூபமாகவுடையவர் ஆதலின், ‘பிரானார்’என்கிறார்.

இருமை வினை கடிவார்-
பேர் வாசியே யாம்படி நாம் செய்து வைத்த இருவகைப்பட்ட கர்மங்களையும் போக்குவார்.
நல்வினை தீவினைகட்குத் தம்மில் தாம்-வைஷம்யம்- வேற்றுமை உண்டேயாயினும், 
மோட்சத்திற்குத் தடை என்னும் தன்மையில்-மோக்ஷ விரோதித்வாத் த்யாஜ்யமாகா நின்றன இறே

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: