ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -1-6-6-

‘அவன் படி இதுவாக இருக்க, அவனை விட்டு-பிரயோஜனாந்தரத்தை – வேறு பலன்களைக் கொண்டு அகலுவதே!’ என்று-
ப்ரயோஜனாந்தர பரரான – வேறு பலன்களை விரும்பிய தேவர்களை நிந்திக்கிறார்.

அமுதம் அமரர்கட்கு ஈந்த நிமிர் சுடர் ஆழி நெடுமால்
அமுதிலும் ஆற்ற இனியன் நிமிர் திரை நீள் கடலானே–1-6-6-

அமுதம் அமரர்கட்கு ஈந்த
‘என்ன பரம உதாரனோ!’ என்கிறார்.
‘நீ வேண்டா; எங்களுக்குச் சாவாமைக்கு பரிஹாரம் – -உரிய பொருளை உண்டாக்கித் தரவேண்டும்,’ என்றவர்களுக்கு
அவர்கள் உகந்த பொருளைக் கொடுத்து விடுவதே!
அவர்கள் பிரயோஜனத்தை அருவருத்து, தாம் உகந்த பிரயோஜனத்துக்கு உண்டான-வ்யாவ்ருத்தி – வேறு பாட்டினை அருளிச்செய்கிறார்;

நிமிர் சுடர் ஆழி நெடுமால்-
இவருடைய அமிர்தம் இருக்கிறபடி. 
‘நால் தோள் அமுதே’ அன்றோ இவர்க்கு அமுது? 
அமுது என்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்’ என்கிறபடியே, கையுந்திருவாழியுமாய் அன்றோ அவருடைய அமிருதம் இருப்பது?
தேவர்கள் விரும்பிய பலனைத் தலைக்கட்டிக் கொடுக்கையாலே உண்டான புகர் திரு ஆழியிலே தோற்றும்படி இருத்தலின், 
‘நிமிர்சுடர் ஆழி’ என்கிறார்.
‘வேறு ஒரு பலனேயாகிலும் நம் பக்கல் கொள்ளப் பெற்றோமே!’ என்று கொண்ட பெருமோகத்தின்
மிகுதி தோன்ற நிற்றலின், ‘நெடுமால்’ என்கிறார்.

அமுதிலும் ஆற்ற இனியன்-
தேவர்கள் வாசி அறிவார்களாகில் இவனை அன்றோ பற்றுதல் வேண்டும்? ஆற்ற இனியன்-
மிகவும் இனியன். 
நாம் திருவழுதி நாடு தாசர், ‘இத்தேவ சாதி வெறும் மரையோ? ‘உப்புச் சாறு கிளருவது எப்போதோ?’ என்று
கவிழ்ந்து பார்த்துக் கிடப்பதே இவன் அழகையும் இனிமையையும் விட்டு!’ என்பராம்.

நிமிர் திரை நீள் கடலானே –
அஸந்நிஹிதன் ‘அண்மையில் இலன்’ என்றுதான் விடுகிறார்களோ!
அவ்வமிருதம் உண்டாகிற கடலிலே அன்றோ அவன் சாய்ந்தருளினான் என்பார், ‘கடலான்’ என்கிறார்.
‘தன் வாசி அறியாது இருப்பார்க்கும் எழுப்பிக் காரியங் கொள்ள லாம்படி கண்வளர்ந்தருளுகிறான் என்றபடி. 
‘தாளும் தோளும் முடிகளும் சமன் இலாத பலபரப்பி’ என்கிறபடியே, கண் வளர்ந்தருளுகைக்குத் தகுதியான பரப்பையுடைத்தாய்,
ஸ்வ சந்நிதானத்தாலே – தனது ‘சம்பந்தத்தாலே அலைகள் கொந்தளிக்கிற கடல் என்பார், ‘நிமிர்திரை நீள்கடலான்’என்கிறார். 
‘மாலும் கருங்கடலே என் நோற்றாய்?’ என்பது பொய்கையார் திருவாக்கு.

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: