ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை — -1-6-5-

திரியட்டும் -மீண்டும்- தாம் அதிகரித்த – மேற்கொண்ட காரியத்திலே போந்து,
சர்வேஸ்வரன், தன் பக்கல் சிலர் வந்து கிட்டினால்
‘இவர்கள்-ப்ரயோஜனாந்தரத்தை – வேறு பலன்களைக் கொண்டு அகலுவர்களோ,
நம்மையே-பிரயோஜனமாக – பலமாகப் பற்றுவார்களோ?’ என்று ஆராய்ந்து,
தன்னையே-பிரயோஜனமாக – பலமாகப் பற்றினவர்களுக்குத்
தானும் -நிரதிசய போக்யனாய் -எல்லையற்ற இனியனாக இருப்பான் என்கிறார்-

——————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

விள்கை விள்ளாமை விரும்பி உள் கலந்தார்க்கு ஓர் அமுதே -என்றதைக் கடாக்ஷித்து அவதாரிகை
அம்பரீஷனைப் பரீஷித்த பிரகாரத்தை அனுசந்திப்பது
ஆராய்ந்து -விரும்பி என்றதிலே நோக்கு –

—————————–

கொள்கை கொளாமை இலாதான் எள்கல் இராகம் இலாதான்
விள்கல் விளாமை விரும்பி உள் கலந்தார்க்கு ஓர் அமுதே–1-6-5-

கொள்கை கொளாமை இலாதான் –
‘இவன்-ஜென்ம – பிறவியாலும் -விருத்த -தொழிலாலும் -ஞானத்தாலும் உயர்ந்தவன் ஒருவன்;
இவனிடத்தில் அந்தரங்கத் தொண்டினைக் -விருத்தியைக் -கொள்வோம்;
இவன் அவற்றால் தாழ்ந்தான் ஒருவன்; இவனிடத்தில் புறத் தொழில் கொள்வோம்’ என்னுமவை இல்லாதான்.
திரு உள்ளத்தால் தானே நினைந்து இருக்குமோ என்னில் –

எள்கல் இராகம் இலாதான்-
திருவுள்ளத்தாலே சிலரை இகழ்ந்திருத்தல், சிலரை ஆதரித்தல் செய்யான். 
‘ஈடு எடுப்பும் இல் ஈசன்’ என்ற இடத்தில்-ஸ்வீகார சமயத்தில் – ‘ஏற்றுக் கொள்ளும் சமயத்தில் குறை பாரான்’ என்றார்;
இங்குக் ‘கைங்கரியம் கொள்ளுமிடத்தில் -பரிமாற்றத்தில் -தரம் இட்டுக் கொள்ளான்’ என்கிறார்.
அவன் பார்ப்பது இஃது ஒன்றுமேயாம்; அஃது, யாது?’ எனின்,

விள்கை –
பிரயோஜனங்களைக் கொண்டு விடுகை.

விள்ளாமை –
அநந்ய பிரயோஜனகை -வேறு பலன்களை விரும்பாமை.

விரும்பி-
ஆதரித்து.

உள் கலந்தார்க்கு-
அவனையே பிரயோஜனமாக-பலமாகப் பற்றி அவனுடனே ஒரு நீராகக் கலந்தார்க்கு.

ஓர் அமுதே-
அத்விதீயமான ஒப்பு அற்ற அமிர்தமாய் இருப்பான்; 
ஆரா அமுதே’ இறே –

———–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

கொள்கை கொளாமை-அங்கீ கரிக்கையும் அங்கீ கரியாமையும் / எள்கல்-உபேக்ஷிக்கை / இராகம் -ஆதரிக்கை /
புனர் யுக்தி இல்லாமையை இங்கு பரிமாற்றத்தில் -கைங்கர்யம் கொள்ளும் இடத்தில் என்று அருளிச் செய்கிறார்
விள்கை விள்ளாமையை விரும்புகையாவது நிரூபிக்கை / விள்கை தன்னை விடுகை / விள்ளாமை -தன்னை விடாமல் இருக்கை
விள்ளாமல் உள் கலந்தார்க்கு -ஓரு நீராகக் கலக்கையாவது அவன் சந்தத்தை அறிந்து சந்த அனுவ்ருத்தி பண்ணுகை

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: