ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை — -1-6-3-

அவனுடைய இஸ் ஸ்வபாவத்தை அனுசந்தித்து -நினைந்து, தாம் அதிகரித்த காரியத்தை மறக்கும்படி
தம்முடைய மனம் வாக்குக் காயங்களுக்கு அவன் பக்கல் உண்டான -ப்ராவண்யத்தை -காதற் பெருக்கினை
அருளிச் செய்கிறார்-

——————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

கீழும் மேலும் பரோபதேசமாய் இருக்க இப்பாட்டும் மேற்பாட்டும் ஸ்வ அனுபவமாய் இருக்கிறதுக்கு சங்கதி –
இஸ் ஸ்வபாவம் -என்றது கீழ் இரண்டு பாட்டிலும் சொன்ன ஸ்வாராதந ஸ்வ பாவத்தை என்றபடி
தாம் அதிகரித்த கார்யம் -பரோபதேசம் –

——————

ஈடும் எடுப்பும் இல் ஈசன் மாடு விடாது என் மனனே
பாடும் என் நா அவன் பாடல் ஆடும் என் அங்கம் அணங்கே–1-6-3-

ஈடும் எடுப்பும் இல் ஈசன்
சிலரை-உபேக்ஷித்தல் – வெறுத்தல், சிலரை-ஸ்வீ கரித்தல் – ஏற்றுக்கோடல் செய்யாத சர்வேஸ்வரன்.
இறைவனுக்கு ஆத்துமாக்கள் பக்கல் உண்டான சம்பந்தம் சர்வ சாதாரணமாய் இருக்கையாலே சிலரை விடப்போகாது அன்றே?
தேவா நாம் தானவா நாம் ச சாமான்யம் அதிதைவதம் ( ‘தேவர்கட்கும் தானவர்கட்கும் நீயே தெய்வம்’ என்கிறபடியே,)
ஸ்வீ கரிக்கும் – ஏற்றுக்கொள்ளுமவன் பக்கலுள்ள சம்பந்தம் விடுமவன் பக்கலிலும் உண்டு ஆதலின், 
‘ஈடும் எடுப்பும் இல் ஈசன்’ என்கிறார்.

ஈசன் மாடு விடாது என் மனனே –
ஒரு சாதனத்தைக் கருதிக் கிட்டினேனாகில் அன்றே பலம் கைப் புகுந்தவாறே விடுவேன்?
நான் அதிகரித்த – மேற்கொண்ட காரியத்துக்கு எனக்கு நெஞ்சு ஒழிகிறது இன்று.
‘மனத்தின் துணை வேண்டுமோ உமக்கு’? 
‘நா இயலால் இசை மாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன்’ என்பது அன்றோ உம்முடைய தன்மை?
ஆதலால் உம்முடைய மனத்தோடு படாத சொற்களே அமையாதோ எங்களுடைய நலனுக்கு?’ என்ன,

பாடும் என் நா அவன் பாடல் –
என்னுடைய வாக் இந்த்ரியமும் – நாவும் மனம் மேற்கொண்ட காரியத்தையே மேற்கொண்டது.
‘ஆயின், உம்முடைய ஹஸ்த முத்திரை அமையாதோ எங்களுக்குப் பொருள் நிச்சயம்-அர்த்த நிச்சயம் – பண்ணுகைக்கு?’ என்ன,

ஆடும் என் அங்கம் அணங்கே –
அதுவும் அவன் விஷயத்திலேயே பிரவணம் அன்பு கொண்டதாயிற்று.

———–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

ஈடு -இட்டு வைக்கை -இடுதல் -உபேக்ஷிக்கை / எடுப்பு -ஸ்வீ காரம் / ஈசன் -சம்பந்தமே ஹேது இரண்டுக்கும்
நாவினுடைய உக்தியால் கான ரூபவான சந்தர்ப்பங்களை இட்டு ஏத்துகையாகிற நண்ணுதலைப் பெற்றேன் –
மனசைப் போலே பகவத் விஷயத்தில் ப்ரவணமாயிற்று என்றபடி
அணங்கு -தெய்வப்பெண்-அப்சரஸ் ஸூ போலே ஆடும் –தைவாவிஷ்டமும்

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: