ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –1-5-9-

‘நீர் தண்ணிதாக நினைத்திருக்கிற உம்முடைய உடம்பு, திருவாய்ப்பாடியில் யசோதை முதலாயினாருடைய
வெண்ணெயைப் போன்று தாரகங்காணும்’ என்றான்;
‘பாவ பந்தமுள்ளவர்களுடைய வெண்ணெய் உனக்குத் தாரகம்; அஃது இல்லாத என்னுடைய ஸ்பரிசம் உனக்கு நஞ்சு’ என்றார்;
‘நஞ்சோ தான், நஞ்சானமை குறை இல்லையே?’ என்றான் இறைவன்;
இவரும் ‘இது நஞ்சே; இதற்கு ஒரு குறை இன்று,’ என்றார்;
‘ஆயின், பூதனையினுடைய நஞ்சு தாரகமான நமக்கு ஆகாதது இல்லை காணும்,’ என்றான்;
என்ன, பொருந்துகிறார்.
இனி, ‘பூதனையை முடித்தது போன்று ‘நான் அல்லேன்’ என்று அகலப் புக்க
என் நிர்ப்பந்தத்தைப் போக்கினான்,’ என்பாரும் உண்டு –

—————————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

அயோக்யதா அனுசந்தானம் பண்ணி அகலுகிறதுக்கு ஈஸ்வரன் சமாதானம் பண்ணுகிற பிரகரணத்திலே
பூதநா நிராசனம் சொல்லுகிறதுக்கு பாவம் இரண்டு வகையாக அருளிச் செய்கிறார் –
கீழ்ப் பாட்டோடு சங்கா சமாதான ரூபேண முந்தின அவதாரிகை –விடப்பால் அமுதாவில் நோக்கு
இரண்டாவது -கீழில் பாட்டில் சேர விட்டமையை சித்தவத்கரித்து த்ருஷ்டாந்த பரம் -இதில் தீய வஞ்சப் பேய் என்கிறதில் நோக்கு
தம்மான் என்னச் செய்தே என்னம்மான் என்றதின் தாத்பர்யம் –
தண்ணிதாக நினைத்து இருக்கிற உடம்பு என்றான் கீழில் பாட்டிலே -என்றபடி –
விடப்பால் அமுதா என்றதின் தாத்பர்யம்-நமக்கு ஆகாதது இல்லை காணும் என்றான் என்னப் பொருந்துகிறார் இதில் என்கிறார்

——————

மாயோம் தீய அல வலைப் பெருமா வஞ்சப் பேய் வீயத்
தூய குழவியாய் விடப்பால் அமுதா அமுது செய்திட்ட
மாயன் வானோர் தனித் தலைவன் மலராள் மைந்தன் எவ்வுயிர்க்கும்
தாயோன் தம்மான் என் அம்மான் அம்மா மூர்த்தியைச் சார்ந்தே–1-5-9-

மாயோம் –
இனி அகன்று மாயக் கடவோம் அல்லோம்;
‘பிரிகை யாவது – விநாசம்’ என்று இருக்கையாலே ‘மாயோம்’ என்கிறார்.
இது, ‘நானும் என்னோடு சம்பந்தமுடையாரும் முடியக் கடவோ மல்லோம்,’ எனப் படர்க்கையை
உளப் படுத்திய உளப் பாட்டுப் பன்மை.
இனி, இறைவனை உளப் படுத்தியதாகக் கொண்டு, ‘இரண்டு தலையையும் அழித்துக் கொள்ளக் கடவோம் அல்லோம்’
என்று பொருள் கூறலுமாம்.

தீய அலவலைப் பெருமா வஞ்சப் பேய் வீய-
ஸ்தந்யம் தத் விஷ சம் மிஸ்ரம் ரஸ்யமாஸீஜ் ஜகத் குரோ ( ‘பூதனையை முடித்து உலகத்துக்கு ஒரு தலைவனைத் தந்த
உலக குருவான ஸ்ரீ கிருஷ்ணனுக்கு விஷத்தோடு கூடிய அம் முலைப்பால் சுவை யுடையதாயிற்று,’ ) என்கிறபடியே,
உலகத்துக்கு வேர்ப் பற்றானவனை ‘முடிக்கப் பார்த்த நெஞ்சில் தீமையையுடையளாய், ஸ்ரீ யசோதைப் பிராட்டியைப் போன்று
அன்பு தோற்றப் பலவாறு பேசிக்கொண்டு -ஜல்பித்திக் கொண்டு -வருகின்றவளாய், –
ஸ்வதஸ் சர்வஞ்ஞனான – தனக்குத்தானே முற்றறிவனானவனும் ‘தாய்’ என்று பிரமிக்கும்படி தோற்றின
பெரிய வஞ்சனை யுடையவளான பூதனை முடியும்படியாக.

தூய குழவியாய்-
ஐஸ்வரியமான மேன்மையும் நடையாடா நிற்கவும், அது தோற்றாதபடி கலப்பு அற்ற பிள்ளைத் தனத்தை யுடையனாய்.
‘இவனுக்குப் பிள்ளைத் தனத்தில் குறை இல்லையாகில், அதன் காரியம் காணாது ஒழிவான் என்?’ என்னில்,

விடப்பால் அமுதா அமுது செய்திட்ட-
விஷம் அமிருதாம் முகூர்த்தத்திலே யாயிற்றுப் பிறந்தது.
‘ஆயின், அவள் இறக்கும்படி எங்ஙனம்?’ எனின், 
தர்மியை வேறு ஒன்று ஆக்க ஒண்ணாமையாலே விரோதித்த அசுரக் கூட்டங்கள் இறந்தார்கள் இத்தனை –
ஆஸூரப் ப்ரக்ருதிகள் முடிய பிராப்தம் –

மாயன் –
விஷம் அமிருதாம்படி புசித்துத் தன்னைத் தந்து நன்மை உண்டாக்கின ஆச்சரியத்தை யுடையவன்.
எனக்கும் அல்ல -பிறர்க்கும் அல்ல -அவனுக்கே -என்று அவள் அநந்யார்ஹம் ஆக்குகையாலே அம்ருதம் ஆயிற்று –
‘பூதனையுடைய விஷம் அமிருதமாம்படி அமுது செய்தவன் தான் யார்?’ என்னில்,

வானோர் தனித் தலைவன் –
அயர்வு அறும் அமரர்களுக்குத் தனித் தலைவன் ஆனவன்.

மலராள் மைந்தன்
‘தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்று அமரர் ஆட் செய்வார்,’ என்கிறபடியே,
அவர்கள் விரும்பித் தொண்டுகளைச் செய்யப் பெரிய பிராட்டியாரும் தானுமாக இருக்குமவன்.

மைந்தன் –
அவளுக்கு மிடுக்கானவன்.
இனி, இதற்கு, ‘அவளுடைய சேர்த்தியினாலே நித்தியமான புதிய யௌவனத்தை யுடையவன்’ என்று பொருள் கூறலுமாம்.

எவ்வுயிர்க்குந் தாயோன் –
எல்லா உயிர்கட்கும் தாய் போன்று பரிவை யுடையவன் ஆனவன்,

தம்மான் –
சர்வேஸ்வரன்.

என் அம்மான் –
நான் தன்னை அகன்று முடிந்து போகாதபடி நோக்கினவன்.
இனி, ‘நித்திய சூரிகளும் மற்றும் உள்ள எல்லா ஆத்துமாக்களும் ஒரு தட்டும்
நாள் ஒரு தட்டுமாம்படி என் பக்கலிலே விசேடமான திருவருளைச் செய்தவன்’ என்பார், ‘என் அம்மான்’ என்கிறார் எனலுமாம்.

அம்மா மூர்த்தியைச் சார்ந்து-
விலக்ஷணமான திருமேனியை யுடைய அம் மகா புருஷனைக் கிட்டி, ‘கிட்டி மாயோம்’ எனக் கூட்டுக.

———————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

பிரியோம் -இதி ஸ்தாநே -மாயோம்-
அலவலை-பஹு ஜல்பம் / பெரு -என்றும் மா என்றும் -மீ மிசைச் சொல் -மிகவும் வஞ்சனை என்றாய்
இவளுடைய வஞ்சனாத்திக்யத்தின் எல்லையை அருளிச் செய்கிறார்
வஸ்து ஸ்வரூபத்தாலே முடிந்தாள்-அமரர் தம் அமுதே அசுரர்கள் நஞ்சே-என்று அன்றோ தர்மி ஸ்வரூபம் என்று கருத்து
நம்மை உண்டாக்கின -என்றது நம் சத்தையை உண்டாக்கின என்றவாறு –
மைந்தன் -மிடுக்கன் -யவ்வனம் உள்ளவன் –
மூர்த்தி சப்தம் விக்ரஹத்துக்கும் ஸ்வாமிக்கும் வாசகம் –
அம்மா மூர்த்தியை -அந்த விலக்ஷண விக்ரஹ யுக்தனை -அந்த மஹா புருஷனை –
சஹஸ்ர சீர்ஷத்வாதி விஸிஷ்ட விக்ரஹ யுக்தனாகவும் வேதஹமேதம் புருஷம் மஹாந்தம் என்று மஹா புருஷனாகவும்
ஸ்ரீ புருஷ ஸூக்தாதிகளிலே அவனுக்கு பிரசித்தி உண்டு இறே
தீய அலவலை-என்று தொடங்கி -அம்மா மூர்த்தியைச் சார்ந்து மாயோம் என்று அன்வயம் –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: