ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -1-5-8-

இவர் இப்படி அகலப்புக்கவாறே, ‘இவர் துணிவு பொல்லாததாய் இருந்தது; இவரைப் பொருந்த விடவேண்டும்,’ என்று பார்த்து,
‘வாரீர் ஆழ்வீர், திருவாய்ப் பாடியில் நிகழ்ச்சிகளைக் கேட்டு அறியீரோ!’ என்ன,
கேட்கையில் ஊன்றிய கருத்தாலும் அவன்தான் அருளிச்செய்யக் கேட்க வேண்டும் என்னும் மனவெழுச்சியாலும்
‘அடியேன் அறியேன்’ என்றார்.
‘முன்பு ஒரு காலத்தில் பூமியை எடுத்து வயிற்றிலேவைத்தோம்;
பின்பு அதனை வெளிநாடு காண உமிழ்ந்தோம்;
அதில் ஏதேனும் சிறிது வயிற்றில் தங்கி இருக்கக்கூடும் என்று கருதித் திருவாய்ப்பாடியில் வெண்ணெயை விழுங்கினோம் காணும்,’ என்ன,
‘அதற்கு இதனைப் பரிகாரமாகச் செய்தாயோ!
அது ஒரு காலவிசேடத்திலே; இது ஒரு கால விசேடத்திலே’ என்ன,
ஆஸ்ரிதர்கள் ஸ்பர்சம் உள்ள த்ரவ்யம் – ‘அடியார்கள் தொட்ட பொருள் உனக்குத் தாரகமாகையாலே செய்தாய் அத்தனை,’ என்ன, ‘
ஆயின், அவ்வெண்ணையினைப் போன்று உம்முடைய சம்ச்லேஷமும் சேர்க்கையும் நமக்குத் தாரகங்காணும்;
ஆன பின்னர், நீர் உம்மைக்கொண்டு அகலுவீராகில், திருவாய்ப்பாடியில் வெண்ணெய் விலக்கினால் புக்க உலகம் புகுவீர்,’ என்றான்.
அவன் கருத்தைத் தாம் அறிந்தமை தோற்ற அநுபாஷிக்கிறார் இப்பாசுரத்தில்.

உண்டாய் உலகு ஏழ் முன்னமே உமிழ்ந்து மாயையால் புக்கு
உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர் உவலை யாக்கை நிலை எய்தி
மண்டான் சோர்ந்தது உண்டேலும் மனிசர்க்கு ஆகும் பீர் சிறிதும்
அண்டா வண்ணம் மண் கரைய நெய் ஊண் மருந்தோ மாயோனே?–1-5-8-

முன்னமே உலகு ஏழ் உண்டாய்-
முன்பு ஒரு காலத்திலே உலகங்கள் ஏழனையும் எடுத்து திரு வயிற்றிலே வைத்தாய்.

உமிழ்ந்து-
பின்னர் அது தன்னை வெளி நாடு காண உமிழ்ந்து.

மாயையால் புக்கு வெண்ணெய் உண்டாய் –
இச்சையால் புக்கு வெண்ணெய் உண்டாய்.
ஈண்டு ‘மாயை’ என்றது, ‘மாயா வயுநம் ஞானம்’ என்கிறபடியே, இச்சா பரியாயமான ஞானத்தை.
அது செய்யுமிடத்தில் சக்கரவர்த்தி திருமகனாய்ப் புக்கு ‘வெண்ணெய் அமுது செய்ய’ என்றால் கொடார்கள் அன்றே? ஆதலால்,

சிறு மனிசர், உவலை யாக்கை நிலை எய்தி –
ஷூத்ரரான-சிறிய மனிதர்களுடைய -ஹேயமான- தாழ்ந்த சரீரத்தினுடைய நிலையைப்
பிரகிருதி சம்பந்தமில்லாத திவ்விய திருமேனிக்கு -அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்துக்கு -உண்டாக்கிக்கொண்டு வந்து இப்படிச் செய்தாய்.
‘கறையினார் துவர் உடுக்கை கடை ஆவின் கழிகோல்கை, சறையினார்’ என்னும் நிலையுள்ள
ஆயர்கள் அளவிலே தன்னை அமைத்து வந்து கிட்டி வெண்ணெய் அமுதுசெய்தான் என்றபடி. 
சபலம் தேவி சஞ்சாதம் ஜாதோ அஹம் யத் தவோதராத் ( ‘தேவகியே நீ முற்பிறவியிற்செய்த நல்வினையானது இப்பொழுது
பலத்தைத் தந்திருக்கின்றது; நான் எக்காரணத்தால் உன்னுடைய உதரத்தின் வழியால் உண்டானேனோ’ )என்பதனால்
கர்ப்பவாசம் சொல்லியிருந்தும், 
நைஷ கர்ப்பத்வ மா பேதே ந யேன்யா மவ சத்பிரபு ( ‘இந்தக் கிருஷ்ணன் கர்ப்பவாசம் செய்யும் தன்மையை அடையவில்லை;
யோநியிலும் வசிக்க இல்லை,’ )என்றுகூறப்படுகிறான் ஆதலின், ‘யாக்கை நிலை எய்தி’ என்கிறார்.
‘இது கூடுமோ?’ எனின்,
இட்சுவாகு குலத்தவருள் ஒருவன் யாகம் செய்துகொண்டிருக்கும்போது-பிபாஸை வர்த்தித்தவாறே – தாகம் உண்டானவாறே
மந்திரத்தால் பரிசுத்தம் செய்யப்பட்ட தண்ணீரைக் குடிக்க, கருத்தரித்தது;
இது-சுக்ல சோணித ரூபத்தாலே பரிணதமாய் அன்று இறே – ஆண் பெண் சேர்க்கையால் ஆனது அன்றே!
சத்தி அதிசயத்தாலே இப்படிக் கூடக்கண்ட பின்பு,-சர்வ சக்திக்கு – ‘வரம்பில் ஆற்றலையுடைய இறைவனுக்குக் கூடாதது இல்லை,’
என்று கொள்ளத் தட்டு இல்லை.
மண்ணை அமுது செய்தது, அதன் சத்தைக்காக;
வெண்ணெய் அமுது செய்தது, உன் சத்தைக்காக.

மண்தான் சோர்ந்தது உண்டேலும் மண் கரைய மனிசர்க்கு ஆகும் நெய் பீர் சிறிதும் அண்டா வண்ணம் ஊண் மருந்தோ-
பூமியைத் திருவயிற்றிலே வைத்து உமிழ்ந்த போது தங்கியிருந்தது ஏதேனும் மண் உண்டாகிலும்,
பிற்பட்ட மனிதர்கட்கு மிகச் சிறிதும் மீதி இல்லாதபடி நெய் அமுது செய்தது அதற்கு மருந்தோ?
அதாவது, ‘உண்ட மிச்சில் சிறிதும் இல்லாதபடி-ஒன்றும் சேஷியாத படி – முழுதும் அமுது செய்யிலோ மருந்தாவது?’ என்றபடி.
இனி,-பீர் என்பது வை வர்ணயமாய்
இதனை, ‘மனிசர்க்கு ஆகும் பீர் சிறிதும் அண்டா வண்ணம் நெய் உண் மண் கரைய மருந்தோ’ என்று கொண்டு கூட்டி,
‘உண்ட மண்ணிலே சிறிது வயிற்றிலே தங்கி இருந்தால் மனிதர்கட்கு வரக்கூடிய சோகை சிறிதும் வாராதபடி
நெய்யை உண்ணுதல் மருந்தோ? அன்றே?’ என்று பொருள் கூறலுமாம்.
‘ஆயின், பின்னை எதற்காகச் செய்தோம்?’ என்னில்,

மாயோனே –
ஆஸ்ரித ஸ்பர்சமுள்ள -‘அடியார்கள் தீண்டிய பொருளால் அல்லது தாரகம் இல்லாதபடியான-
ஆஸ்ரித வியாமோஹத்தாலே – அடியார்களிடத்துள்ள பெரு மோஹத்தாலே செய்தாய் இத்தனையன்றோ?’ என்பதாம்.

இந்த பாசுரம் தான் இந்த திருவாய் மொழிக்கு நிதான பாசுரம் –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: