ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –1-5-7-

நைவன்’ என்றார்; இவரை நைவிக்க மனம் இல்லாமையாலே வந்து முகங்காட்டினான்;
அவனைப் பார்த்து ‘நம்மால் வரும் குணாதிக்யமும் -குணத்தின் மேன்மையும் -இவனுக்கு வேண்டா,’ என்று அகலுகிறார்.

———————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

இதனின் மிக்கோர் அயர்வுண்டே -என்ற பதங்களைக் கடாக்ஷித்து அவதாரிகை –
அடியேன் சிறிய ஞானத்தன் -என்று அகலும் போது இப்பாட்டில் அவன் முகம் காட்டினான் ஆக வேணும் என்றபடி –
நம்மால் வரும் குணாதிக்யம் என்றது அயோக்யரான தம்மை விஷயீ கரிக்கையாலே வரும் சர்வாதிகாரத்வ ரூப குணாதிக்யம் என்றபடி

———————-

அடியேன் சிறிய ஞானத்தன் அறிதல் ஆர்க்கும் அரியானைக்
கடிசேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனைச்
செடியார் ஆக்கை அடியாரைச் சேர்தல் தீர்க்கும் திருமாலை
அடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கோர் அயர்வுண்டே!–1-5-7-

அடியேன் சிறிய ஞானத்தன் –
சம்சாரிகளில் அறிவு கேடர் -சர்வஞ்ஞர் -‘முற்றறிவினர்’ என்னும்படியன்றோ என் அறிவு கேடு!
‘அல்லேன்’ என்று அகலும் இவர், ‘அடியேன்’ என்கிறது, வாசனையாலே.
அன்றிக்கே , ‘அடியேன்’ என்கிறது, அடிமைக்கு இசைந்து அன்று;
ஆத்துமாவிற்கு ஞான ஆனந்தங்களைப் போன்று சேஷத்வத்தை -அடிமையையும் நிரூபமாக நினைந்திருக்கையாலே.
‘நான்’ என்பது போன்று ‘அடியேன்’ என்கிறார் எனலுமாம்.

சிறிய ஞானத்தன் –
அத்யல்ப -மிகச் சிறிய அறிவினையுடையவன்.

அறிதல் ஆர்க்கும் அரியானை-
எத்துணை வியக்கத்தக்க அறிவினையுடையராய் இருப்பார்க்கும் அறியப் போகாதவன்-
ஸ்வதஸ் சர்வஞ்ஞனான- இயற்கையிலேயே முற்றறிவினையுடைய தனக்கும் அறியப் போகாதவன்; 
‘தனக்கும் தன் தன்மை அறிவு அரியான்’ அன்றோ?
தாம் இறைவனைச் சேர்தல், தமஸ்- இருளுக்கும்-பிரகாசங்கள் – ஒளிக்கும் உள்ள சேர்த்தியைப் போன்றது என்பார்,
தம்மைச் ‘சிறிய ஞானத்தன்’ என்றும், இறைவனை ‘அறிதல் ஆர்க்கும் அரியானை’ என்றும் அருளிச் செய்கிறார்

கடி சேர் தண் அம்துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னை-
நாள் செல்ல-பரிமளம் – வாசனை ஏறி வருகின்ற திருத்துழாய் மாலை புனைந்தவனை.
அறிய அரிய பொருளுக்கு அடையாளம் திருத்துழாய் மாலை.

கண்ணனை-
அறிய அரியனாயிருந்தும் ஆயர்கட்கும் ஆய்ச்சிகட்கும் தன்னை எளியன் ஆக்கி வைத்தவனை.

செடி ஆர் ஆக்கை அடியாரைச் சேர்தல் தீர்க்கும் திருமாலை-
செடி -பாபம் /ஆர்தல் -மிகுதி -பாபம் மிக்கு இருக்கிற சரீரம் -நோய் எல்லாம் பெய்ததோர் ஆக்கை இறே
அன்றிக்கே-ஜரா மரண மோஷாய மாம் ஆஸ்ரித்ய யதந்தி யே ( ‘முதுமை மரணம் இவற்றினின்று விடுபடும் பொருட்டு
என்னை அடைந்து வழிபடுகின்றார்கள்’ )என்கிறபடியே,
அவனையே உபாயமாகப் பற்றித் தூறு மண்டின சரீரத்தை அறுத்துக் கொள்ளும் அடியார் உண்டு கேவலர்;
அவர்களுக்கு அதனைத் தவிர்த்துக் கொடுக்கும் ஸ்ரீ மானை – திருமகள் கேள்வனை.
‘ஆயின், அவர்கள் அடியாரோ?’ என்னில், தலைவனுக்கு அதிசயத்தை விளைக்குமவர்களே அடியார் ஆவர்;
தம்மைப் போன்று கிட்டித் தலைவனுக்குத் தாழ்வினை விளைக்கப் பாராமல், பிறவியாகிற தளையை அறுத்துக்கொண்டு
கடக்க நிற்கின்றவர்கள் அவர்கள் ஆதலின், அவர்களையே அடியவர்கள் என்று இருக்கிறார்.
‘நன்று; உமக்கு இப்போது வந்தது என்?’ என்ன,

அடியேன் காண்பான் அலற்றுவன்-
‘அடியேன்’ என்று அலற்றுவன்,
‘காண வேண்டும்’ என்று அலற்றுவன்.

இதனின் மிக்க ஓர் அயர்வு உண்டே –
உண்டியே உடையே என உகந்து ஓடும் இம் மண்டலத்தாரோடு சேர்ந்து திரிந்த -சம்சாரியாக இருந்த -நாளில்
அறிவே நன்றாக இருந்தது அன்றே!
‘அது நன்றாயினவாறு என்?’ என்னில், அப்போது கடக்க நின்று பகவத் தத்துவத்தைக் குறி அழியாமை வைத்தேன்;
இப்போது அன்றோ நான் கிட்டி அழிக்கப் பார்த்தது! இதனைக் காட்டிலும் அறிவு கேடு உண்டோ?-

—————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

அகன்று போகிறவர் -அடியேன் -என்பதற்கு இரண்டு வகையான –
வாசனையால் அடிமைக்கு இசையாத திசையிலும் -வாஸ்தவமான ஆகாரம் போகாது இறே-
கடி சேர் -வர்த்தமானம் ப்ரத்யயர்த்தம் நாள் செல்ல நாள் செல்ல -இத்யாதி –
பாபம் மிக்கு இருக்கிற சரீரம் -பாப கார்யமான நோய் மிக்கு –
தூறு மண்டுகை -தூறு போலே மண்டுகை -மாறி மாறிப் பல பிறப்பைச் சொன்ன படி –
சேர்த்தல் தீர்க்கும் என்கையாலே செடியார் ஆக்கை சேர்த்தால் தீர்க்கைக்காக அடிமைப் பட்டவர்கள் என்று சித்திக்கும் இறே –
என்னைப் போலே இல்லாமல் அவத்ய அபாவத்தை விளைக்கிறவர் ஆகையால் அதிசயத்தை விலைக்குமவர்கள் என்று தாத்பர்யம் –
அதிகாரி சதுஷ்ட்யத்துக்கும் புருஷகாரம் அவரஜனீயம் என்பதால் திருமால் -என்கிறார்
என்னுடைய சம்பந்தமே அவனை அழிக்குமதாய் இருக்க அவனுக்கு என்னோடே ஓரு சம்பந்தம் உண்டாக்கச் சொல்லுவன்-
அடியேன் என்று அலற்றுவன் -அதுக்கும் மேலே காண்பான் -காண வேண்டும் என்று அலற்றுவன் –
நான் கண்டால் அவத்யமாம் படி இருக்கிற விஷயத்தை காண வேணும் என்பதாகா நின்றேன் இதில் காட்டில் அறிவு கேடு உண்டோ –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: