ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –1-5-6-

இவர்-ஆபிமுக்யம் – எதிர்முகம் செய்தவாறே, இறைவன் அல்பம் சிறிது தாழ்த்தான்;
இவர் ‘என்னை’ இழந்தாய்? கிடாய் ’ என்கிறார்.

—————

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

கீழில் பாட்டில் கைங்கர்யத்தைப் பிரார்த்திக்கிறார் என்ற பஷத்தை அவலம்பித்துக் கொண்டு –
நைவன்-என்ற பதத்தைக் கடாக்ஷித்து சங்கதி
இரண்டாம் அவதாரிகையான பக்ஷத்தில் கீழில் பாட்டுக்கு சேஷம் இப்பாட்டு –
நைவன் என்றதைக் கடாக்ஷித்து -என்னை இழந்தாய் -கிடாய் என்கிறார்

—————————-

வினையேன் வினை தீர் மருந்தானாய்! விண்ணோர் தலைவா! கேசவா!
மனை சேர் ஆயர் குல முதலே! மா மாயவனே! மாதவா!
சினை ஏய் தழைய மரா மரங்கள் ஏழும் எய்தாய்! சிரீதரா!
இனையாய்! இனைய பெயரினாய்! என்று நைவன் அடியேனே–1-5-6-

வினையேன் இத்யாதி
‘உன்னைப் பார்த்தல், என்னைப் பார்த்தல் செய்ய வேண்டாவோ?’ என்கிறார்.
வினையேன் வினை –
மற்றை-சேதனர்- மக்கள் எல்லார்க்கும் உள்ள வினைகள் போல அல்லவாயிற்று இவருடைய வினை;
அவர்கள் அனைவரும்-பகவத் சம்ச்லேஷம் – ‘பகவானைச் சேர வேண்டும்’ என்று அன்றே இருப்பது?
அகல நினைக்கிற இது உள்ளது இவர் ஒருவர்க்குமே யாதலின்‘வினையேன்’என்கிறார்.

தீர் மருந்து ஆனாய்-
‘நான் கிட்டுகை அத் தலைக்குத் தாழ்வு என்று அகலுகைக்கு அடியான வினையைப் போக்கும் மருந்து ஆனவனே –
வினையைப் போக்கிற்று எங்கு நின்றும் வந்தது என்னில்

விண்ணோர் தலைவா-
நித்தியானுபவம் பண்ணும்போது ‘நான் அயோக்கியன்’ என்று அகல வேண்டாதார்க்கு-நியாந்தாவாய் – ஏவுகின்றவனாய்
இருக்கும் இருப்பில் நின்று வந்து போக்கினான்.

கேசவா-
அதுக்கு அவ்வருகே ஒரு பயணம் எடுத்து விட்ட படி –
ஆவாம் தவாங்கே ஸம்பூதவ் தஸ்மாத் கேசவ நாமவான் ( ‘க என்னும் இது பிரமனுக்குப் பெயராம்; எல்லாரையும் ஏவுகின்றவன் நான்
ஆதலின், எனக்கு ஈசன் என்று பெயராம்; நாங்கள் இருவரும் தேவரீருடைய திருமேனியில் உண்டானோம்;
ஆதலால், ‘கேசவன்’ என்ற பெயரை அடைந்தீர்’ )என்கிறபடியே-

மனை சேர் ஆயர் குல முதலே-
அந் நிலை -திருப்பாற்கடலினின்றும் இவ்வருகே போந்து கிட்டினபடி
பஞ்ச -ஐந்து லஷம் குடி ஆகையாலே மனையோடு மனை சேர்ந்த ஆயர் பாடிக்குத் தலைவனே;
இனி, இதற்கு, ‘ஆயர்கள் மனைகளிலே வந்து சேர்ந்து, அவர்கள் குலத்துக்கு முதலானவனே’ என்று உரைத்தலுமாம்.
இனி, ‘மனை சேர் ஆயர்’ என்பதற்கு, நான்கு மூங்கில்களைக் கொண்டு போய்,
தங்கும் இடத்தில் வளைத்துத் தங்குகிற ஆயர்,’ என்றுமாம்

மா மாயவனே –
ஆய்க் குலத்திலே வந்து பிறந்து, அவர்கள் ஸ்பர்சித்த – தொட்ட பொருளே தாரகமாய்,
அது தான் களவு கண்டு புஜிக்கும்- உண்ணும் படியாய்,
அது தான் தலைக் கட்ட மாட்டாதே வாயது கையதுவாக அகப்பட்டுக் கட்டுண்டு அடியுண்டு நிற்கும் நிலை.
இவ் வெளிமைக்கு அடி சொல்லுகிறார் மேல் :

மாதவா –
அவளுடைய சேர்த்தி.

சினை ஏய் தழைய மரா மரங்கள் ஏழும் எய்தாய் –
சினை என்று பணை-கிளை / ஏய்கை -நெருங்குகை —
பணைகளோடு பணைகள் நெருங்கித் தழைத்து நினைத்தபடி இலக்குக் குறிக்க ஒண்ணாதவாறு நின்ற மரா மரங்கள்
ஏழையும் எய்தவனே! இது, மகா ராஜரை விஸ்வசிப்பித்து -நம்பச் செய்து காரியஞ்செய்தபடி.
இதனால், அடியார்கள் தன்னுடைய காத்தலில் ஐயங்கொள்வார்களாயின், அவ் வையத்தை நீக்கிக் காக்கின்றவன் –
சங்கா நிராகரணம் -என்பதனைத் தெரிவித்தவாறு.

சிரீதரா –
மராமரங்கள் எய்கைக்கு இலக்குக் குறித்து நின்ற போதைய வீர லட்சுமியைக் குறிக்கிறார்.

இனையாய்-
ஏவம்விதமான குண சேஷ்டிதங்கள் -இவ்விதமான குணங்களையும் செயல்களையுமுடையவனே.

இனைய பெயரினாய்-
அவற்றிற்கு வாசகங்களான திருப் பெயர்களை உடையவனே.

என்று நைவன் –
‘காண வேண்டும், கேட்க வேண்டும்’ என்ன மாட்டாதே – உருகுகின்றேன்.

அடியேனே –
யார் உடைமை அழிகிறது?
இவ் வுயிர் ஏதேனும் தனக்குத் தானே உரியதாகி அழிகிறதோ,
பிறர்க்கு உரிமைப்பட்டு அழிகிறதோ?
உடையவர்கள் வேண்டுமாகில் தங்கள்-வஸ்துவை – பொருளை நோக்கிக் கொள்ளுகிறார்கள் என்பார்,அடியேனே’- என்கிறார்,
உன்னால் இரட்சிக்க ஒண்ணாமல் அழிகிறதோ?
என்னால் இரட்சிக்கலாய் அழிகிறதோ?

——————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

இனைய பெயரினாய் -என்னும் அளவைப் பற்ற உன்னைப் பார்த்தல்
அடியேன் என்றதை பற்ற என்னைப் பார்த்தல்-அதாவது த்வத் ஏக ரஷ்யனான-அநந்ய கத்தி என்றவாறு –
அதவா-விண்ணோர் தலைவா வினையேன் என்ற இரண்டையும் பற்ற என்னவுமாம் –
அப்போது சர்வஞ்ஞனாய்-சர்வ சக்தியான உன்னைப் பார்த்தால் -அஞ்ஞனாய் அசக்தனான என்னைப் பார்த்தல் -என்றபடி
என் வினை என்னாமல் வினையேன் வினை -என்றதுக்கு பாவம் -சீல குணமே இதுக்கு மருந்து என்றவாறு
மனை சேர் -ஊருக்கும் ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் இடையருக்கும் விசேஷணம் ஆக்கி வியாக்யானம்
குலம்- ஊருக்கும் வம்சத்துக்கும் –
திரு அவதரித்து என்னாமல் சேர் என்றது திருவவதாரம் ஸ்ரீ வடமதுரையில் என்பதால்
இப்படி இந்த எளிமைக்கும் உபேக்ஷிக்கிறதுக்கும் என்ன சேர்த்தி யுண்டு -என்று தாத்பர்யம் –

கேசவா -ஆயர் குல முதலே -மா மாயனே -மாதவா -சிரீதரா இத்யாதிகள் குண வாசகங்கள்
மரா மரம் எய்தாய் -என்றது சேஷடித்த வாசகம்
என்று நைவன் என்கிறதுக்கு பாவம் -இனையாய் இனைய பெயரினாய் -என்ற அனந்தரம் –
குணங்களைக் கேட்க வேணும் -சேஷ்டிதங்களைக் காண வேணும் -என்று சொல்ல ப்ராப்தமாய் இருக்க –
பல ஹானியாலே நைவன் என்றபடி
கேட்க என்றது -கண்டபோதே வினவும் நல் வார்த்தைகளை –
ஆர் உடைமை -இத்யாதி வாக்ய த்வய உக்தமான அந்நிய சேஷத்வ நிவ்ருத்தியையும்
ஸ்வ ஸ்வா தந்த்ர நிவ்ருத்தியையும் வ்யுத்க்ரமேண அருளிச் செய்கிறார்

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: