ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –1-5-4-

‘அவன் படி இதுவாய் இருந்தது; இனி நீர் செய்யப் பார்த்தது என்?’ என்ன,
‘நாம் அகலப் பார்த்தால் உடையவர்கள் விடுவார்களோ?’ என்கிறார்.
அத்யந்த நிரபேஷனாய் இருந்து வைத்து – (‘வேண்டுதல் என்பது மிகச் சிறிதும் இல்லாதவனாய் இருந்தும்,) –
ஸ்ருஷ்ட்டி யாதி அநேக யத்னங்களைப் பண்ணி (படைத்தல் முதலிய அநேக முயற்சிகளைச் செய்து )
என்னைத் தனக்கு ஆக்கிக் கொண்ட குணங்களாலே என்னை-விஷயீகரித்தவன் – அடிமை கொண்டவன்,
இனி, ‘நான் அல்லேன்’ என்னிலும், தன்னுடைய சௌசீல்ய குணத்தால் என்னை விடான்,’ என்று –
ஸமாஹிதராகிறார்- சமாதானத்தை அடைந்தவர் ஆகிறார்-

——————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

எம்பெருமான் என்றது சம்பந்த அபிப்ராயம் என்னும் கருத்தால் –
உடையவனாகையாலே ஸுசீல்யாதிகளைக் காட்டிச் சேர்த்துக் கொண்டான் என்றபடி
த்விதீய அவதாரிகை -எம்பெருமான் ஸுசீல்ய அபிப்ராயம் -ஸுசீல்யத்தாலே சேர்த்துக் கொண்டு
அத்தாலே பெறாப் பேறு பெற்றவனாக இருக்கிறான்
வானோர் பெருமான் என்றதை பற்ற அத்யந்த நிரபேஷனாய் -என்றது
அவன் படி இதுவாய் இருந்தது -ஸூ சீலனாகையாய் இருந்தது –
நீர் செய்யப் பார்த்தது என் -என்றது அகலப் பார்த்தீரோ -என்றபடி –

——————

தானோர் உருவே தனி வித்தாய்த் தன்னின் மூவர் முதலாய
வானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றுமாய்த்
தானோர் பெருநீர் தன்னுள்ளே தோற்றி அதனுள் கண்வளரும்
வானோர் பெருமான் மா மாயன் வைகுந்தன் எம் பெருமானே–1-5-4-

தான் ஓர் உருவே தனி வித்தாய்-‘
சதேவ சோம்யே தமக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் (சோம பானம் செய்தற்குரிய சுவதே கேதுவே,
காணப் படுகிற இவ் வுலகமானது படைப்பதற்கு முன்னே ‘சத்து’ என்று சொல்லக் கூடியதாய்,
நாம ரூபங்கள் இன்மையின் ஒன்றாய், அடையத்தக்க இரண்டாவது பொருள் வேறு இல்லாததாய் இருந்தது,’ )என்கிறபடியே 
இங்கும், இரண்டாவது இன்மையைக் காட்டுகிற ‘தான் ஓர் தனி’ என்னும் பதங்கள் மூன்று உண்டாய் இருந்தன;
‘இச்சொற்களுக்குப் பயன் யாது?’ எனின்,
படைத்தலை அருளிச் செய்வதனால் காரண விஷயமாகக் கிடக்கின்றன. மூன்று காரணங்களும் தானே என்கை. 
‘தான்’ என்கிற இதனால், உபாதானாந்தரம் -முதற்காரணம் வேறு இல்லை என்கை. 
‘ஓர்’ என்கிற இதனால் சஹகார்யாந்தரம் -துணைக் காரணம் வேறு இல்லை என்கை.
‘தனி’ என்கிற இதனால், -நிமித்தாந்தரம் -நிமித்த காரணம் வேறு இல்லை என்கை.
உரு – அழகு, ஆக, ‘அழகிய த்ரிவித மூன்று காரணமும் தானேயாகி’ என்றபடி.

‘சதேவ,’ ‘ஏகமேவ,’ ‘அத்விதீயம்’- இவை முறையே, துணைக்காரணம், முதற்காரணம், நிமித்த காரணம்
ஸூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மம் -உபாதானம்
சங்கல்ப விசிஷ்ட ப்ரஹ்மம் -நிமித்தம்
ஞான சக்த்யாதி குண விசிஷ்ட ப்ரஹ்மம் சஹகாரி
‘உற்று ஒரு தனியே தானே தன் கணே உலகம் எல்லாம், பெற்றவன்’ (கம்ப. வருண. 63.)

தன்னின் மூவர் முதலாய –
விஷ்ணுவாகிற தன்னோடு கூடின மூவர் தொடக்கமான சிவன் இவர்களோடு கூடியிருப்பின் தனக்கும் அவர்கட்கும்
வேற்றுமை இன்றித் தனது உயர்விற்குக் குறைவு வாராதோ?’ என்னில்,
இட்சுவாகு குலத்தினர் நடுவே வந்து அவதரித்து அவர்களோடே ஒக்க எண்ணலாம்படி இருக்குமாறு போன்றும்,
யாதவர்கள் நடுவே வந்து அவதரித்து அவர்களோடு ஒக்க எண்ணலாம் படி இருக்குமாறு போன்றும்,
பிரமன் சிவன் இவர்கள் நடுவே அவர்களோடு ஒக்கச் சொல்லலாம்படி அவதரித்து, 
ஸ்வேந ரூபேண -தனது உருவமாய்- நின்று -பாலனத்தைப் பண்ணி -அளித்தலைச் செய்து,
அவர்களுக்கு அந்தராத்துமாவாய் நின்று படைத்தல் அழித்தல்களைச் செய்து போதரலால் உயர்விற்குக் குறை வாராது என்க.
இனி, தன்னின் மூவர் முதலாய-தன்னில் -என்றது தன் பக்கலிலே என்ற படியாய் –
தன் சங்கல்ப ஞான ரூப ஞானத்தால் சேந்த்ர-என்று இந்திரனையும் கூட்டி –
பிரமன் சிவன் இந்திரன் ஆகிய மூவர் முதலாய – என்று கூறலும் ஆம்.

வானோர் பலரும் –
ப்ரஹ்மாதிகள் தொடக்கமான தேவர் பலரையும்,
முனிவரும் –
சனகன் முதலானவர்களையும்,
மற்றும் –
ஸ்தாவரங்களையும் -நிலையியற் பொருள்களையும்,
மற்றும் –
ஜங்கமங்களையும்-இயங்கியற் பொருள்களையும்,
முற்றும் ஆய் –
ஆக -அநுக்தமான – சொல்லப்படாத எல்லாப் பொருள்களையும் உண்டாக்குகைக்காக,

தானோர் பெருநீர் தன்னுள்ளே தோன்றி அதனுள் கண்வளரும்-
இப்படி ஸ்ருஷ்ட்டி உன்முகனான – படைத்தலில் நோக்கமுடைய தான்,
தனக்குக் கண் வளர்ந்தருளுகைக்குத் தகுதியாகப் பரப்பை யுடைத்தான ஒரு சமுத்திரத்தை-ஏகார்ணவத்தை –
தன் பக்கல் நின்றும் உண்டாக்கி அதனுட் கண் வளரும்.
‘இப்படிச் சமுத்திரத்தில்-ஏகார்ணவத்தில் – தனியே சாய்ந்தருளுகின்றவன்தான் யார்?’ என்னில்,

வானோர் பெருமான்-
நித்தியசூரிகட்கு நாதன் ஆனவன்;
மாமாயன் –
ஆச்சரியங்களான குணங்களையும் செயல்களையுமுடையவன்;
வைகுந்தன் –
ஸ்ரீவைகுண்டத்தைக் கொலு வீற்றிருக்கும் இடமாக வுடையவன்.

‘முன்னுரு வாயினை நின் திரு நாபியின் முளரியின் வாழ் முனிவன் எம்பெருமானே – அவன் என் நாயனே. 
உடைமை தப்பிப் போகப் புக்கால் உடையவர்கள் ஆறியிருப்பர்களோ?
பெறுகைக்கு ஈடாக முன்னரே நோன்பு நோற்று வருந்திப் புத்திரனைப் பெற்ற தாயானவள்,
அவன் நடக்க வல்லனான சமயத்திலே,-தேசாந்திரம் – ‘வேறு தேசம் போவேன்’ என்றால் விட்டு ஆறி யிராள் அன்றே?
அப்படியே, நெடு நாள் தன் வாசி அறியாதே போந்த எனக்கு அறிவைத் தந்து தன்னை உள்ளபடி அறிவித்தவன்,
தான் தந்த அறிவைக் கொண்டு நான் அகன்று போகப் புக்கால்,
அவன் விட்டு ஆறியிருப்பனோ என்பார்,‘எம்பெருமானே’ என்கிறார்.

தன்னுருவாகி இருந்து படைத்தனை பலசக தண்டமு நீ
நின்னுருவாகி யளித்திடு கின்றனை நித்த விபூதியினால்
என்னுருவாகி யழிக்கவும் நின்றனை ஏதமில் மாதவனே!’என்று சிவபிரான், கண்ணபிரானை நோக்கி-வில்லி பா. 13- 220-

——————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

தான் ஓர் உருவே தனி வித்தாய் -தான் வித்து -ஓர் வித்து -தனி வித்து -உரு என்று அழகு –
இது மூன்றிலும் அந்வயிக்கக் கடவது -உருவேய் -எய்தல் -பொருந்துதல் –
இங்கே -என்றது ஸ்ருதியிலும் மூலத்திலும் என்றபடி
த்ரிவித காரணமும் தானாகையாவது -ஸூஷ்ம சித் அசித் விஸிஷ்ட வேஷேண உபாதானத்வமும்-
சங்கல்ப விஸிஷ்ட வேஷேண நிமித்தத்வமும் -ஞான சக்த்யாதி விஸிஷ்ட வேஷேண சஹகாரித்வமும் என்றபடி –
தானோர் பெருநீர் தன்னுள்ளே தோற்றி -என்று-சமஷ்டி – அண்ட ஸ்ருஷ்ட்டியைச் சொல்லி –
அதுக்குள்ளே ஏகார்ணவத்தை ஸ்ருஷ்டித்துக் கண் வளர்ந்த படியைச் சொல்லுகிறது
பெரு நீர் -ஏகார்ணவம் -/ கலவிருக்கை -கொலுச்சாவடி-நெஞ்சு பொருந்தி இருக்கை –
ஓர் பெரு நீர் தோற்றி அதனுள் கண் வளரும் வைகுந்தன் வானோர் பெருமான் மா மாயன் எம்பெருமானே -என்று அன்வயம் –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: