ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –1-4-11-

நிகமத்தில் – இத்திருவாய்மொழியில் சப்த மாத்திரம் அப்யஸிக்கவே -‘சொற்களை மாத்திரம்
கற்றலே அமையும், திருநாட்டினைப் பெருகைக்கு,’ என்கிறார்.

——————

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

வள வுரையால் பெறலாகும் வானோங்கு பெரு வளம் பெறலாம் என்றத்தைக் கடாக்ஷித்து
சங்கதி அருளிச் செய்கிறார் –

———————

அளவியன்ற ஏழ் உலகத்தவர் பெருமான் கண்ணனை
வள வயல் சூழ் வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்துரைத்த
அளவியன்ற அந்தாதி ஆயிரத்துள் இப் பத்தின்
வள வுரையால் பெறலாகும் வானோங்கு பெரு வளமே–1-4-11-

அளவியன்ற –
‘வியந்த’ என்பது ‘வியன்ற’ என விகாரப்பட்டது. –
தவ்வுக்கு றவ்வாய் -வியத்தல் – கடத்தல்-அளவைக் கடந்திருக்கின்ற-என்றபடி –
அபரிச்சேதய மஹிமானாகை – அளவு அற்ற பெருமையினையுடையவன் என்றபடி.
இத்தால், இந்நிலையிலே முகங்காட்டுகைக்கு ஈடான ஞானம் முதலிய குணங்கள் நிறைந்தவன் –
ஞானாதி குண பூர்ணன் -என்கை.

ஏழ் உலகத்தவர் பெருமான் –
நாராயணன் என்ற திருப் பெயர்க்குக் குறைவு வாராதபடி-விகாலமாகதபடி – ஸர்வேஸ்வரன் ஆனான்.
‘ஆயின், ‘ஏழ் உலகத்தவர்’ என்றால், தம்மைச் சொல்லியது ஆகுமோ?’ எனின்,
ஏழ் உலகத்தவர் எனவே, தாமும் அதில் -அந்தர்பூதர் -அடங்கியவரே யாவர்.

கண்ணனை –
இவ் வளவிலே வந்து முகங்காட்டிற்றிலன் என்கிற குற்றந் தீர வந்து முகங்காட்டுகையாலே-
ஆஸ்ரித ஸூலபனானவன் – அடியார்க்கு எளியவன் ஆனான்.
இனி, பத்துடை அடியவர்க்கு’ என்கிற திருவாய்மொழியில் ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தை அனுபவிக்கப் பாரித்து,
அது கிடைக்காமையாலே தூது விட்டவர் ஆகையாலே, இங்கு முகங்காட்டினான் ஸ்ரீ கிருஷ்ணன் என்னவும் ஆம்.
இத்தால், அவனுடைய மேன்மையோடு சௌலப்யமும் நிலை நின்றது இவர்க்கு முகங்காட்டின பின்பு ஆயிற்று என்றபடி.

வளம் வயல் –
அகால பலிநோ வ்ருஷ ( ‘மரங்கள் காலம் அல்லாத காலங்களிலும் பலத்தையுடையனவாய் இருந்தன,’ )என்கிறபடியே,
ஸ்ரீ திரு நகரியும் தளிரும் மொட்டுமாகவே எப்பொழுதும் இருக்குமாயிற்று.

வாய்ந்து உரைத்த –
நெஞ்சு பிணிப்புண்டு சொன்னவையாய் இருக்கை – வாய்கை-கிட்டுகை. அதாவது, பாவ பந்தத்தை யுடையவராகை.

அளவியன்ற அந்தாதி ஆயிரத்துள் இப்பத்தின் வள உரையால் –
அபரிச்சேதய வஸ்துக்கு வாசகம் ஆகையால் -எல்லையற்ற பெருமையையுடைய பரம் பொருளுக்கு வாசகமாகையாலே
தாமும் எல்லையற்ற பெருமையை யுடையனவாய், ஒருவராலும் சலிப்பிக்க ஒண்ணாதனவாய் இருக்கிற
ஆயிரத்துள் இப் பத்தினுடைய நன்றான உரையாலே,

வான் ஓங்கு பெரு வளம் பெறலாகும் –
பால் குடிக்க நோய் தீருமாறு போன்று, இத்திருவாய்மொழியில் இனிய சொல்லாலே பெறலாம்.
அதாவது, ஸ்வயம் பிரயோஜனமாக -‘தானே பிரயோஜனமாயிருக்கிற இத்தால்,
சம்சாரத்தில்-சங்குசிதமான- குறைவான நிலை போய், பரமபதத்தில் சென்று, தன் ஸ்வ ரூபத்தைப் பெற்று –
விஸ்த்ருதன் -விரிவையடைந்தவன் ஆகையாகிற எல்லை இல்லாத செல்வத்தைப் பெறலாம், என்றபடி.

——————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

அபரிச்சேதய மஹிமானான இத்தால் -நாராயண சப்தத்துக்குப் பொருள் சர்வ சேஷித்வம் இறே-
ஆகையால் ஓன்று குறைந்தாலும் அபூர்ணமாய் இருக்கையாலே இவரை விஷயீ கரித்த பின்பாயிற்று
நாராயணத்வம் விகலமாகாமல் சர்வேஸ்வரனானான் என்றபடி –
கண்ணன் -கண்ணுக்கு விஷயமானவன் -ஸ்ரீ கிருஷ்ணன் -பெரு நிலம் கடந்த நல்லடிப் போது -1-3-10–என்று
அனுபாவயத்வேந பாரிக்கப் பட்ட ஸ்ரீ திரிவிக்ரம அவதாரமும் ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தோடே தோள் தீண்டி ஆகையால்
ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தை அனுபவிக்கப் பார்த்து என்னக் குறை இல்லையே –
ஏழு உலகத்தவர் பெருமான் கண்ணன் -பத த்வயத்தாலும் பலித்த அர்த்தங்களை சாதித்து அருளுகிறார்
வள -வயலுக்கு ஊருக்கும் விசேஷணம்
தளிரும் முறியும் -பல்லவமும் மொட்டும் -முறி -இளந்தளிர்
தாம் அவனைக் கிட்டுகை -நெஞ்சு பிணிப்புண்கை-கட்டுண்கை –
வளவுரை -இனிதான உரை –
வான் ஓங்கு பெரு வளம் -வான் -பரம பதத்தில் போய் / ஓங்கு -விஸ்திருதனாகை /பெரு வளம் -நிரவதிக சம்பத்

———————————-

முதற்பாட்டில், ஒரு நாரையைத் தூதுவிட்டாள்;
இரண்டாம் பாட்டில், அங்குப் போனால் சொல்லும் வார்த்தைகளைச் சில குயில்களுக்குச் சொன்னாள்;
மூன்றாம் பாட்டில், ‘நான் செய்த பாபமேயோ மாளாதது என்று சொல்லுங்கள்,’ என்று சில அன்னங்களை இரந்தாள்;
நாலாம் பாட்டில், சில மகன்றில்களைப் பார்த்து, ‘என் நிலையை அங்கே சென்று சொல்லுவீர்களோ, மாட்டீர்களோ?’ என்றாள்;
ஐந்தாம் பாட்டில், சில குயில்களைப் பார்த்து, ‘தன்னுடைய நாராயணன் என்ற பெயர் ஒறுவாய்ப் போகாமே
நோக்கிக் கொள்ளச் சொல்லுங்கோள்,’ என்றாள்;
ஆறாம் பாட்டில், ஒரு வண்டைக் குறித்து, ‘தம்முடைய நாராயணன் என்ற பெயருக்கு ஒரு குறைவு வாராமே
எங்கள் சத்தையும் கிடக்கும்படி இத் தெருவே எழுந்தருளச்சொல்,’ என்றாள்;
ஏழாம் பாட்டில், ஒரு கிளியைக் குறித்து, ‘இத் தலையில் குற்றங்களைப் பார்க்கும் அத்தனையோ? தம்முடைய
குற்றங்களைப் பொறுக்குந் தன்மையையும் ஒருகால் பார்க்கச்சொல்,’ என்றாள்;
எட்டாம் பாட்டில், தான் உறாவினவாறே முன் கையிலிருந்த பூவையும் உறாவ, ‘நானோ முடியா நின்றேன்;
நீ உன்னைக் காக்கின்றவரைத் தேடிக்கொள்’ என்றாள்;
ஒன்பதாம் பாட்டில், ஒரு வாடையைக் குறித்து, ‘என் நிலையை அங்கே சென்று அறிவித்தால்,
அவன் ‘அவள் நமக்கு வேண்டா’ என்றானாகில், வந்து என்னை முடிக்க வேண்டும்,’ என்று இரந்தாள்;
பத்தாம் பாட்டில், தன் நெஞ்சைக் குறித்து, ‘நம் காரியம் ஓர் அறுதி பிறக்குமளவும் நீஅவனை விடாதேகொள்,’ என்று போக விட்டாள்;
முடிவில், இத் திருவாய்மொழியைக் கற்றார்க்குப் பலம் சொல்லித் தலைக் கட்டினாள்.

முதற்பாட்டில், ஆசாரியனுடைய ஞானத்தின் பெருமையை -வைபவத்தை -அருளிச்செய்தார்;
இரண்டாம் பாட்டில்,மதுர பாஷியாய் – இனிமையாகப் பேசுகின்றவனாக இருப்பான் என்றார்;
மூன்றாம் பாட்டில், ஸாராஸாரங்களைப் பகுத்து அறிகின்றவன்-சாரசார விவேகாஞ்ஞன் – என்றார்;
நான்காம் பாட்டில், திருமேனியின் பேரழகினை-விக்ரஹ ஸுந்தர்யத்தை- அருளிச்செய்தார்;
ஐந்தாம் பாட்டில், ‘நினைத்தது கிட்டும் அளவும் சலியாத தூய தன்மையுடையான்’-சுத்த ஸ்வபாவன் என்றார்.
ஆறாம் பாட்டில், ‘பகவானையே அனுபவிக்கின்றவனாய் இருக்கும் -பகவத் ஏக போகனாய் -ரூபாவானாய் அழகனுமாய்ப்-
கிருபாவானுமாய் -கம்பீர ஸ்வ பாவனாயும் -பெருமிதமுடைவனுமாய் இருப்பான்’ என்றார்;
ஏழாம் பாட்டில், ‘தான்-சர்வஞ்ஞன் – முற்றறிவினன் ஆகிலும் ஆசாரியர்கள் பக்கல் கேட்ட வார்த்தை அல்லது அருளிச் செய்யான்,’
என்று அவனுடைய ஆப்தியை அருளிச் செய்தார்;
எட்டாம் பாட்டில், ‘ஆசாரியனுடைய தேக யாத்திரையே இவனுக்கு ஆத்தும யாத்திரை’ என்றார்;
ஒன்பதாம் பாட்டில், ‘ஆசாரியனுடைய சம்பந்த மாத்திரமே-சத்தா – இருப்புக்குத் தாரகம்; இதர ஸ்பர்சம் சத்தா பாதகம்
பத்தாம் பாட்டில்- -இப்படி ஞானவானுமாய் மதுரபாஷியுமாய் சாரசார விகேகஞ்ஞனுமாய் -தர்ச நீயனுமாய் -சுத்த ஸ்வபாவனாய் –
கிருபா கம்பீரயாதிகளை யுடையவனாய் சிரோபாதிஸ சத்வருத்த ஸேவ்யனாய்-
ஸச் சிஷ்யனாகையாலே ஏவம்பூதனான ஆச்சார்யனுடைய தேஹ யாத்திரையே தனக்கு ஆத்ம யாத்ரையாய் –
இதர ஸ்பர்சமும் தனக்கு பாதகமாய் -இப்படி சதாச்சார்ய சேவை பண்ணுகையாலே பகவத் கைங்கர்யத்தில் பிரவணமாய் –
நின்னடையேன் அல்லேன்-என்று நீங்கி ஓர் கோல நீல நன் நெடும் குன்றம் வருவது ஒப்ப
நாண் மலர்ப்பாதம் அடைந்தது தம் திரு உள்ளம் என்று தலைக் கட்டினார் –

ஞானத்தின் பெருமையை அருளிச்செய்தார்’ என்றது, ‘அஞ்சிறைய மடநாராய்’ என்றதில் நோக்கு;
இரண்டு சிறகுகளும் ஞான அநுஷ்டானங்களாகக் கூறப்படும்.
‘இனிமையாகப் பேசுகின்றவன்’ என்றது, குயிலின் ஒலி இனியதாயிருத்தல் நோக்கி,
‘சாராசாரங்களைப் பகுத்தறிகின்றவன்’ என்றது, ‘மென்னடைய அன்னங்காள்’ என்றதனை நோக்கி.
‘திருமேனியின் பேரழகினை’ என்றது –‘நன்னீல மகன்றில்காள்’ என்றதனை நோக்கி.
‘நினைத்தது கிட்டுமளவும் சலியாத நிலையினன்’ என்றது, ‘இரைதேர்’ என்றதனை நோக்கி.
பகவானையே அனுபவிக்கின்றவனாய் இருக்கும் அழகனுமாய்ப் பேரருள் வாய்ந்தவனுமாய்ப் பெருமிதமுடையவனுமாய்’ என்றது –
முறையே ‘வண்டு என்றதனையும்,’ ‘வரி’ என்றதனையும், ‘ஆழி’ என்றதனையும் நோக்கி.
‘வண்டு ஏகபோகமோ?’ எனின், வண்டு தேனையன்றி உண்ணாது; மதுகரம் என்ற பெயரின் பொருளையும் நோக்குக
‘தான் முற்றறிவினனாகிலும் ஆசாரியர்கள் பக்கல் கேட்ட வார்த்தை யல்லது அருளி ச்செய்யான்’ என்றது, ‘இளங்கிளியே’ என்றதனை நோக்கி.
‘ஆசாரியனுடைய தேக யாத்திரையே இவனுக்கு ஆத்தும யாத்திரை,’ என்றது, ‘இன்னடிசில் வைப்பாரை நாடாயே’ என்றதனை நோக்கி.
ஆசாரியனுடைய சம்பந்த மாத்திரமே சத்தாதாரகம், மற்றையோருடைய உறவு சத்தா பாதகம்’ என்றது, காற்றின் ஸ்பரிசம் பாதகம்
என்றதனால், எதிர்மறைப் பொருளில் ஆசாரிய சம்பந்தமே தாரகம் என்பது போதரும்.

இத் திருப்பதிகத்தில் ஏழாம் பாசுரம் முடிய, சதாசாரியனுடைய இலக்கணம்;
மேல் மூன்று பாசுரங்கள் ஸச் சிஷ்யனுடைய மாணாக்கனுடைய இலக்கணம்.

————————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

சேர்ப்பாரை பஷிகளாக்கி ஞான கர்மங்களை சிறகு என்று –
குயில் மதுர பாஷி
ஹம்ஸோ யதா ஷீரம் இவாம்பு மிஸ்ரம் -சார அசாரே விவேகஞ்சா கரீயாம்சோ விமத்சரா
இறை தேர் -புருஷார்த்தம் சித்திக்கும் அளவும்
ரூபவான் -வரி -கிருபாவன் -கம்பீர ஸ்வ பாவன்-ஆழி
வந்து -பகவத் ஏக போகத்வம்-மதுகரம்
உரைக்கை -சர்வேஸ்வரன் சந்நிதியில் சிஷ்யனுடைய உஜ்ஜீவன அர்த்தமாக விண்ணப்பம் செய்கை
வாடை -பாதகம் -பிரகிருதி ப்ராக்ருதங்கள் -வ்யதிரேகத்தில் ஆச்சார்யன் சந்நிதியே தாரகம்
ஸூத்த ஸ்வ பாவன் -வெண்மையைப் பற்ற
எனக்குப் பவ்யமாய்ப் போந்த நெஞ்சானது -கரணியான என்னை விட்டு அகன்று
திருவாழியையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் இரண்டு திருக்கையிலும் என்திக் கொண்டு பலவாய்ப் பரந்து சூழ்ந்த
சுடரை யுடைத்தான ஆதித்யனோடே கூட -பால் போல் வெளுத்த நிறத்தை யுடைய சந்திரனையும் தன் கொடி முடிகளில் ஏந்தி
அத்விதீயமாய் தர்சனீய ஆகாரமாய்-நீல நிறத்தை யுடைத்தாய் தாதுவை சித்ர்யாதிகளால் உண்டான வைலக்ஷண்யத்தை உடைத்தாய்
உத்துங்கமான மலை நடந்து வருமது ஒத்து ஆஸ்ரிதற்கு வந்து தோற்றுமவனுடைய அபி நவமான தாமரை போலே இருக்கிற
திருவடிகளை அடைந்தது -என்றபடி –

————————-

அஞ்சிறைய புட்கள் தமை ‘ஆழியா னுக்கு நீர்
எஞ் செயலைச் சொல்லும்’ என இரந்து – விஞ்ச
நலங்கியதும் மாறன் இங்கே நாயகனைத் தேடி
மலங்கியதும் பத்தி வளம்–திருவாய்மொழி நூற்றந்தாதி -4-

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: